அக்கறை மக்கத்தின் மண் வாசனை

 

மக்கத்தின் துன்பத்தை கேளுங்கள்
புல்லாங்குழலிடம்
எந்த நிமிடம் அழுகிறதோ! தெரியாது!
எங்கே செல்வேன் எவ்விடம் செல்வேன்
மக்கத்து நாதாவின் பாதத்தை அறிய!

திடீரென்று கார்மேகம் குறுக்கிட்டுப் பாய்கிறதோ
அதுதான் புல்லாங்குழலின் கண்ணீரோ
எங்கே செல்வேன் எவ்விடம் செல்வேன்
மக்கத்து நாதாவின் பாதத்தை அறிய!

பாத்துமத்து நாயகியை பார்ப்பதற்கோர்
இடமில்லை என்றேன்
மக்கத்து மகளென்னும் வலிதாயைப் பார்க்க வைத்தீரே!
எங்கே செல்வேன் எவ்விடம் செல்வேன்
மக்கத்து நாதாவின் பாதத்தை அறிய!

மக்கத்து மருமுகமகனான சமதானவரே
என்றும்
சாந்தி நிலவட்டும் சத்தியத்தின் பெயரால்!
எங்கே செல்வேன் எவ்விடம் செல்வேன்
மக்கத்து நாதாவின் பாதத்தை அறிய!

மக்கமே அன்றாடம் எம்காதில் விளவேண்டுமோ
உம் பேச்சு இல்லையேல்
அந்நிமிடம் நின்று விடுமோ எம் மூச்சு
எங்கே செல்வேன் எவ்விடம் செல்வேன்
மக்கத்து நாதாவின் பாதத்தை அறிய!

வஸ்ஸலாம்
ஆக்கம் : ஏ.கே. மக்கம் றஜான்

 

Leave a Reply

Your email address will not be published.