தருமத்தின் நாதரே..

வருக வருக வருகவே
மக்கத்தார் வாப்பா வருகவே
எங்கும் அருள் மழை பொழியவே
உங்கள் நல்லாசி பெருகவே !!
(வருக)

பேரிறைவன் விலாயத் பெற்ற
பேரின்ப நேசராய்
நபிநாதர் ஒளியில் நிலைத்த
நாயிபுர் றஸூல் தனாய்
முஹையித்தீன் தரீக்கா வழியில்
முத்தலக்கே வருகவே!!
(வருக)

ஜலாலுத்தீன் குதுப் வலியின்
கந்தூரி அருள் விழா
புவியோர்கள் மகிழ்ந்திடவே
தருமத்தின் நாதரே
பேரொளியாய் வழியைக் காட்டும்
மக்கத்தார் வாப்பாவே!!
(வருக)

பஹ்ருல் இல்ஹாம் ஹல்லாஜின்
இணையில்லா சர்கலிபா
அப்துஸ் ஸமது ஆலிம் மகனாய்
துஹ்பா உம்மா நன்மணியே
உள்ளத்தில் இருளைப் போக்கும்
குதுபுனா வருகவே!!
(வருக)

எங்கள் வழியில் ஞானம் மிளிர
உயர்ந்த நிலை காணவே
இன்ஷானுல் காமிலாக
உண்மைநிலை தோன்றவே
உங்கள் சேவை என்றும் நாங்கள்
சுவன நிலை நாடவே!!
(வருக)

ஆசிரியர் முஹம்மது அலியார் பைஸர்
சாய்ந்தமருது

Leave a Reply

Your email address will not be published.