Tag Archive | Hallajul Mansoor Raliyallahu Anhu

Kuthubul Akthab Hallajul Mansoor (Raliyallahu Anhu)

 

குத்புல் அக்தாப் ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி)

Kuthubuna Hallajul Mansoor Rali.

குத்புனா, ஹல்லாஜுல் மன்ஸூர் நாயக (றலி)ன் இலங்கை வருகையானது இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றிலே அதிக தாக்கத்தை உண்டு பண்ணியுள்ளது. அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஆவும் ஸூஃபித்துவமும் மீண்டும் புத்துயிர் பெற்றெழுந்து, வீறு நடைபோடுவதற்கு வழிகோலியது. நவீன சடத்துவ சிந்தனைகளால் முடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டிருந்த அஹ்லுஸ்ஸுன்னா ஜமாத்தினருக்கு புதிய தெம்பும் புதிய வாழ்வும் கிடைத்தது. ஒரு வீட்டின் மூலையில் ஒளிந்து கூறிய ஸூஃபித்துவக் கருத்துக்கள் பள்ளி மிம்பரிலும் பகிரங்க மேடையிலும் கூறுவதற்கு வழி பிறந்தது.

பலரது வாழ்வில் இடம் பிடித்த ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) அவர்களின் வாழ்வும் வபாத்தும் படிப்பினை நிறைந்தாக அமைந்துள்ளது. எவரும் பின்பற்றக்கூடிய வெளிப்படையான காமில் ஷெய்க்காக விளங்கி இவர்களின் வாழ்வு மூஃமீன்களுக்கு சிறந்த எடுத்துக் காட்டாக இருப்பதனால் அம் மகத்துவமிக்க மஹானின் பின் புலவாழ்வு பற்றி சித்தரிக்க வேண்டியுள்ளது.  ( Continue.. )