அருள் கூடவே வழி நாடவே

அஹதான நாயனால்
மணம் வீசும் மல்லிகை
அஹமது தூதரால்
ஒளிவீசும் தாரகை!!
ஹல்லாஜ் மன்ஸூரே..(ஆல்)
தீன் வீசும் புன்னகை
மக்கத்தார் வாப்பாவே..
அருள் நல்குபீர்களோ !!
(அஹதான)

அந்ரோத்தே தீபகட்ப
அன்பு முகம் கண்டீர்
பாடும் உமை போற்றினோம் மர்ஹபா,
ஆனந்தமே வாழ்வோ
மெய்ஞ்ஞானமே அறிவோ
நாம் உன் புகழ் பாடவா
பூரணமான ஷெய்க்கே
பூமான நபியின் கண்ணே
அருள் கூடவே வழி நாடவே
மக்கத்தாரைப் போற்றிப் போ..!!
(அஹதான)

அக்கரைப்பற்றூரின்
அலங்கார தீபகற்பம்
வரவால் உமைப் போற்றினோம் மர்ஹபா,
குறைசி நபி இணைப்பில்
எமனி வழி தொடரில்
நான் உம் அருள் நாடவா
மெய்ஞான தேன் அமுதே
அப்துஸ் ஸமதின் மலரே
அருள் கூடவே வழி நாடவே
மக்கத்தாரைப் போற்றிப் போ…!!
(அஹதான)

இலங்கை எனும் தீவில்
இலங்கும் கண் மணியே
உயர்வான உமைப் போற்றினோம் மர்ஹபா,
கலிமாவின் காவலரே
தரீக்காவின் நாயகரே
நான் உம் வழி கூடவா
ஜலாலுத்தீனின் ஒளியே
ஹல்லாஜின் பேரொளியே
அருள் கூடவே வழி நாடவே
மக்கத்தாரை போற்றிப்போ..!!
(அஹதான)

ஆசிரியர்
முஹம்மது அலியார் பைஸர்,
சாயந்தமருது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *