ஏ மனிதா! நான் பார்த்தேன்…

ஏ மனிதா! நான் பார்த்தேன்

என் கவி சமர்ப்பணம்
ஏழைத் தாய்
அவ்வா உம்மாவிற்கு !!!
துஹ்பா உம்மாவிற்கும்
அப்துஸ்ஸமது ஆலிமுக்கும்
பிறந்த பிள்ளையாக – ஏ மனிதா
நீ பார்த்தாய்

அகிலத்தின் ஒளிச்சுடராம்
அண்ணல் நபி(ஸல்)-அவர்கள்
வமிசத்தில்
அரும் பொக்கிஷமாயுதித்த
அற்புத தாரகையாய்
நான் பார்த்தேன்

பல்கலைக் கலைஞனாக
செவிக்கினிய கீதமாக – ஏ மனிதா
நீ பார்த்தாய்

பாவங்கள் புரியாத
வஞ்சகமில்லாத
பிஞ்சு நெஞ்சங்களின்
உள்ளமைப் பொருள்கண்டு
நெஞ்சுக் குலாவியதாய்
நான் பார்த்தேன்

ஆசிரிய கலாசாலையின்
அன்பான விரிவுரையாளராக – ஏ மனிதா
நீ பார்த்தாய்

அருள் மிகு திரு மறையின்
உண்மைப் பொருளறிந்து
தேடிவந்தோருக்கு தெவிட்டாத
தேன் ஊட்டியதாய்
நான் பார்த்தேன்

பல பாஷைகளைப்
பக்குவமாய்ப் பேசுகின்ற
அப்துல் மஜீதினை– ஏ மனிதா
நீ பார்த்தாய்

ஈருலகைப் படைத்து
எல்லாமே நானென்று
ஒன்றாய்ச் சரியொத்த
ஏகனிலே தனையழித்த
ஏற்றமிகு மஹானை
நான் பார்த்தேன்

பணிவின் இருப்பிடமாக
பண்பின் உறைவிடமாக – ஏ மனிதா
நீ பார்த்தாய்

நெல்லுக்குள்ளொழிந்திருக்கும்
முத்துக்களைச் சுமந்த
முற்றியதோர் நெற்கதிராய்
நான் பார்த்தேன்

வறுமையையும் ஏழ்மையையும்
ஏற்று நடந்தானை– ஏ மனிதா
நீ பார்த்தாய்

பிறரின் துயர் அறிந்து
அகம்பாவம்தனையொழித்து
நானில்லை என்றறிந்து
தானே அவனானதோர் – உத்தமரை
நான் பார்த்தேன்

நோவினைகள் செய்திடினும்
கோபம் கொள்ளாத
அப்துல் மஜீதினை – ஏ மனிதா
நீ பார்த்தாய்

செய்தவனே நான் என்று
தன்னில் அவனைக் கண்ட
தன்னையழித்து
தானே அவனானதோர் – பெருமஹானை
நான் பார்த்தேன்

இன்பத்தில் ஏற்றமோ
துன்பத்தில் துயரமோ
கொள்ளாத ஒருவரை – ஏ மனிதா
நீ பார்த்தாய்

இன்பமும் துன்பமும்
நல்லதும் கெட்டதும்
ஏகனின் செயலாக்கி
ஒன்றுடனொன்றாகி
உள்ளமைப் பொருளான – ஒருவரைத்தான்
நான் பார்த்தேன்

நான் நீ அவன்
அற்றுப் போன இதயத்தில்
ஜீவிக்கும் கோமானை – ஏ மனிதா
நீ பார்த்தாயா?

சூளையிலே இரும்பாக நெருப்புடன்
நெருப்பானதை ஒன்றாக்கி
ஒன்று சேரவே
நான் பார்த்தேன்

இன்னுமேராளம்
பெருந்தகையிலிருப்பதனை
எப்படியோ நான் அறிவேன் – ஏ மனிதா
சொல்லக்கூடியது எத்தனையோ
சொல்லமுடியாதது எத்தனையோ
இதனால் தான் – ஏ மனிதா
எனதுஉயிரிலும் மேலானதொன்றாக-நான்
நேசிக்கிறேன்

ஓய்வுபெற்ற ஆசிரியர் – முஹம்மது ஷம்ஸுத்தீன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *