அந்த்ரோத் வாழும் பேரரசே..

அந்த்ரோத் வாழும் பேரரசே
அள்ளி வழங்கிடும் வள்ளரசே
அகமியம் உள்ள இறை முரசே
அடிமைக் கருள்வீர் என் அரசே

கண்ணிமை கொண்டிடுங்கள் மஹ்ழறாவை
கண்ணியமாகக் காத்திடுவேன்
கண்ணீர் வடித்து வேண்டுகின்றேன்
கடைக்கண் பாருங்கள் நாயகமே

அக்கரை ஊருக்கு நான் வருவேன்
அல்லல்கள் நீங்கிடக் கேட்டிடுவேன்
அள்ளி வழங்கிட நீர் மறுத்தால்
அண்ணலிடம் நான் முறையிடுவேன்

ஹாழிறு யா ஹாழிறு
ஹல்லாஜ் மன்ஸூர் ஹாழிறு
ஹக்கன் அருள் பெற்ற பேரொளியே
ஹல்லாஜ் மன்ஸூர் ஹாழிறு

லாயிலாஹ இல்லல்லாஹ்
லாயிலாஹ இல்லல்லாஹ்
லாயிலாஹ இல்லல்லாஹ்
முஹம்மதுர் றஸூலுல்லாஹ்

வாங்கள் றஸூல் நாயகமே
வல்லவன் திருத்தூதரே
தாங்கள் எங்கள் ஆதாரமே
தாஹா றஸூல் நாதரே

அஞ்சி உங்களைக் கெஞ்சுகிறேன்
அல்லல் நீக்கிட வாருங்களேன்
அள்ளி வழங்கிடும் யாஹபீபே
ஆனந்தமாகவே வாருங்களேன்

சன்மானரே சற்குணரே
சுவனலோக இரட்சகரே
ஸல்லு அலா முஹம்மதுவே
சொல்லும் ஸலாம் உம்  மீதே

நாளை மஹ்ஷர் வீதியிலே
மூளை உருகும் வேளையிலே
சித்திரக் கலிமா என் நாவிலே
முத்திரை ஆக்குவீர் நாயகமே

இருட்டறை எனும் கபுறுக்குள்ளே
குருட்டுத்தனமாய் இருக்கையிலே
ஹக்கன் மலக்கு கேட்கையிலே
தக்க பதிலை நீங்கள் சொல்வீர்

வாருங்கள் ஹல்லாஜ் வாருங்களேன்
வந்துங்கள் அருளைத் தாருங்களேன்
வாழ்வின் அருளும் பொருள் தந்து
வாழ்வினை வளமாய் ஆக்குங்களேன்

 பாடியவர்: சப்றாஸ், கல்முனை