அஸ்-ஸெய்யிதா றைஹானத்துஸ் ஸஹ்தியா உம்மா (வலி)
இவர்கள் அக்கரைப்பற்று மண்ணில் நபி (ஸல்) அவர்களின் முதல் வழித்தோன்றலாக விளங்குகின்றார்கள். மார்க்க அறிஞர்களும், ஆலிம்களும் ஸூஃபிகளும் தோன்றுவதற்கு கருவாக அமைந்தவர்கள். மாசற்ற ‘அஹ்லுல் பைத்தின் 21 தலைமுறைக்கு உரிமை பூண்டவர்கள். தந்தை வழித் ஸெய்யத்தாகும். (128. தகவல் : Http://www.rootswebsite) .அக்கரைப்பற்றின் முதல் அஹ்லுல் பைத்தும்ஆவார்கள்.
இம்மண்ணில் நிறைகுல மாது ஸித்தீ பாத்திமா (வலி)க்கும் அஷ்-ஷெய்க் அப்துஸ்ஸமத் மௌலானா ஸபீதிய்யி யமானி (றலி) அவர்களுக்கு மூன்றாம் திருமணத்தில் மூத்த திருமகளாய் அஸ்-ஸெய்யித் றைஹானத்தும்மா (வலி) பிறந்தார்கள். சிறு வயதிலிருந்து பக்தி வயப்பட்டு அப்துஸ் ஸமது மௌலானா (றலி)யின் அன்பு ஆளுகையின் கீழ் வளர்ந்து வந்தவர்கள். இவர்கள் ஷெய்க் இஸ்மாயீல் யமானி (றலி)ன் பேத்தியுமாவார்கள்.
இவர்கள் தந்தையின் சன்மார்க்க பணியிலும் போதனைகளிலும் பங்கு கொண்டும், பங்கெடுத்தும் வந்துள்ளார்கள். ஒரு செல்வச் சீமாட்டியின் மகளாக இருந்தாலும் மிக எளிய வாழ்வோடு பின்னிப் பிணைந்தும், நலிந்தோருக்கு உதவும் உற்ற தோழியாகவும் ஏழ்மையின் சின்னமாகவும் ஆன்ம காரியங்களின் அணிகலனாகவும் அஸ்-ஸெய்யித் றைஹானத்தும்மா வாழ்ந்திருப்பதாக தகவல் பெறமுடிகின்றது.
சன்மார்க்க பாரம்பரிய தளத்தில் வாழ்ந்த இம்மகானி தன் தந்தையிடமிருந்து ‘பைஅத்’ எனும் ஞான தீட்சை பெற்றுள்ளனர். இளமையிலேயே ஆன்ம ஈடேற்றம் கண்ட ஞானமிக்க ஒருவராக இருந்துள்ளனர். றஸூலே கரிம் (ஸல்) அவர்களின் மீது அளவு கடந்த காதல் வசப்பட்டவராகவும் அவர்களின் பெயரில் அதிகம் ஸலவாத்துக்களை காணிக்கை செய்பவராகவும் தஸ்பீஹ், திக்ரில் காலம் கடத்தியுள்ளதை காண முடிகின்றது.
சின்னமௌலானா தன் மகளுக்கு 18 வயதில் முஹம்மது அபூபக்கர் லெப்பை ஆலிமை கன்னியாதனம் செய்து வைக்கின்றார்கள். இவ்விரு இல்லற தம்பதிகளுக்கும் நான்கு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் கிடைத்திருக்கின்றன. அஸ்-ஸெய்யித் ஹாஸீம் ஆலிம் மௌலானா, அஸ்-ஸெய்யித் அப்துஸ்ஸலாம் மௌலானா, அஸ்-ஸெய்யித் முஹல்லம் அப்துஸ்ஸமது ஆலிம் மௌலானா, அஸ்-ஸெய்யித் அப்துர் றஷீத் ஆலிம் மௌலானா ஆகிய ஆண் குழந்தைகளும் அஸ்-ஸெய்யித் உம்முகுல்தூம் உம்மா எனும் பெண் குழந்தையுமாகும்.
இவருக்கு நான்கு ஆண்பிள்ளைகளும் ஒரு பெண்பிள்ளையுமிருந்தனர். நான்கு ஆண்களையும் ஆலிம்களென்று எல்லோரும் அழைப்பர். மூத்தவரான ஹாஷிம் ஆலிமை மூத்தாலிம் என்று ஊரவர் அழைப்பர். மேடைச் சொற்பொழிவிலும் பாவியற்றுவதிலும் இவர் வல்லவர். ஹாஷிம் புலவர் நினைத்தவுடன் கவிபாடும் ஆசுகவியாவார். அடுத்தவர்களான அப்துஸ்ஸலாம், அப்துஸ் ஸமத் (மக்கத்தார்) அப்துர் றஷீத் ஆலிம் ஆகிய அனைவரும் இறைஞானமும் பாப்புனையும் ஆற்றலும் பெற்றவர்கள். இவரது மகளான உம்முல் குல்தூம் (மக்கத்தும்மா)வினது புதவல்வரே புஹாரி ஆலிம் என அழைக்கப்படும் அபூபக்கர் ஆலிம் ஆவார். (134. தகவல் :பொன்மலர், பக்- 135).
Leave a comment