கலீபத்துல் காதிரிய்யி, அஷ்-ஷெய்க், அஸ்ஸெய்யித் முஹல்லம் அப்துஸ் ஸமத் ஆலிம் மக்கத்தார் (றலி)
சங்கைக்குரிய அல்-குத்ப் கலீபத்துல் காதிரிய்யியி அஷ்-ஷெய்க், அஸ்-ஸெய்யித் முஹல்லம் அப்துஸ்ஸமத் ஆலிம் மக்கத்தார் (றலி), (கி.பி. 1960) FIGURE – 37
அல்-குத்ப், அஸ்-ஸெய்யித் ஹாஷிம் ஆலிம், அஸ்-ஸெய்யத் அப்துஸ் ஸலாம் ஆலிம் ஆகியோரின் இளையவராகவும். அஸ்-ஸெய்யித் அப்துர் றஷீத் ஆலிம், உம்முகுல்தும்மா ஆகியோரின் மூத்தவராகவும் முஹல்லம்அப்துஸ்ஸமத்ஆலிம்மக்கத்தார் (றலி)அவர்கள் விளங்குகின்றனர்.
கலீபத்துல் காதிரிய்யி அபூபக்கர் லெப்பை ஆலிம் (வலி) அவர்களும் அஸ்-ஸெய்யித் றைஹானத்தும்மா (வலி) அவர்களும் மூன்றாம் மகனாக 1889ல் அஸ்ஸெய்யித் முஹல்லம் அப்துஸ் ஸமது ஆலிம் மக்கத்தார் (றலி) அவர்கள் பிறக்கின்றனர். இவர்கள் ஷெய்க் இஸ்மாயீல் யமானி (றலி)ன் பேத்தியின் மகனாவார்கள்.
இரு மூத்த பிள்ளைகளுக்குப் பிற்பாடு குழந்தைப் பேறின்றி அஸ்- ஸெய்யித் றைஹானத்தும்மா (வலி) அவர்கள் இருந்துள்ளார்கள். தமக்குப் பிள்ளை கிடைக்க வேண்டும் என புனித மக்காவுக்கு நேர்ச்சை செய்யப்பட்டு அஸ்-ஸெய்யித் அப்துஸ்ஸமத் ஆலிம் (றலி) அவர்கள் கிடைத்ததனால் அவர்களின் பெயரோடு ‘மக்கத்தார்’ எனும் காரணப் பெயரும் இணைக்கப்பட்டு அழைக்கப்பட்டு வந்துள்ளது.
பிறப்பால் தாய்வழி ஸெய்யித்தாக இருந்துள்ள இவர்கள் அவ்தாத்தாகத் திகழ்ந்தவரும், அக்கரைப்பற்று காதிரிய்யியா தரீக்காவின் கலீபாவாகவும் இஜாஸத்துக்குரிய ஷெய்க்காகவும், பண்டிதராகவும் ஸூஃபிஸக் கவிஞராகவும் விளங்கி, நாயகம் அபூபக்கர் லெப்பை ஆலிம் (வலி) யின் இரத்தத் தொடர்பாலும் இயற்கையில் ஒரு இறை ஞானிக்குரிய பரம்பரை அலகுகள் கொண்டிருப்பதாலும் தெய்வ ‘விலாயத்’ எத்திக் கொள்ளும் ஒரு ‘குத்ப்’புக்குரிய அடிப்படையை துவக்கத்திலேயே அமைத்துவிட்டது.
இப்பெரியார் அல்-குத்ப், அப்துஸ்ஸமத் மௌலானா (றலி)ன் ஞாபகார்த்தமாக சூட்டப்பட்ட பெயரிற்கு தகைமையுடைய வர்களாக ஆத்மீக மோகமுடையவர்களாக வாழ்ந்திருக்கின்றார்கள். அஸ்-ஸெய்யித் முஹல்லம் அப்துஸ்ஸமத் ஆலிம் மக்கத்தார் காதிரிய்யி (றலி) அவர்ளின் குடும்ப சூழல் அவ்லியாக்கள் நிறைந்த இருந்ததனால் மஃரிபா வழியில் அவர்கள் உந்திச் செல்வதற்கு சுலோபமாக அசை போட்டிருக்கின்றது. பிறப்புடன் கலந்த ஞானம் இறைவனின் எல்லையற்ற மோன நிலைக்கு இவர்களை இட்டுச் சென்றிருப்பது ஆச்சரியமானவையல்ல. இதற்கு திரு நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியை உதயமாக்கிச் சொல்வது ஏற்புடையது.
அதிஷ்டசாலிகளாக இருப்போர் தாயின் கருவிலிருக்கும் போதே நல்லவர்களாக விளங்கும் பாக்கியம் பெறுகின்றார்கள்;. தீயவர்கள் தாயின் கருவிலேயே தீய குணங்களோடு வளர்கிறார்கள்.
ஷெய்க் அப்துஸ்ஸமத் ஆலிம் மக்கத்தார் (றலி) இந்தியா, ‘பாக்கியத்துஸ்ஸாலிஹாத் மதரஸா’வில் ஓதி ‘ஆலிம்’ பட்டம் பெற்றுள்ளார்கள். அக்கரைப்பற்று சின்னப் பள்ளியில் கடமையாற்றியுள்ளார்கள். இவர்கள் பேஷ் இமாமாக இப்பள்ளியில் பல வருடங்கள் கடமைபுரிந்துள்ளார்கள். மிக இனிமையாக குர்ஆனை ஓதுகின்ற ஒரு பெரியாராகக் காணப்பட்டுள்ளார்கள். மார்க்க சொற்பொழிவுகள் உணர்ச்சித்ததும்ப செய்கின்ற ஒருவராக விளங்கியுள்ளார்கள். எதையும் நிதானித்து ஆறுதலாக செய்கின்ற பண்பு பெற்றவராக இருந்துள்ளார்கள்.
சகோதரர்களுக்கிடையில் உளப்பூர்வ நேசத்தையும் உதவிகளையும் தொடராக செய்து வந்துள்ளார்கள். சகோதரர்களுக்காக எதையும் இழக்கக் கூடியவர்கள். இப்பெரியாரின் சகோதர்களுக்கிடையில் நிரந்தரமான அன்புப் பிணைப்பு காணப்பட்டிருக்கின்றது. இச்சகோதரர்கள் ஒருவரை ஒருவர் சீண்டி சகஜமாக பேசிக் கொண்டிருப்பது அவர்களின் வழக்கமாகும். மூத்தாலிம் (றலி) அப்துஸ்ஸலம் (வலி), அப்துர் றஷித் (வலி) ஆகியோர் இவர்களின் வீட்டில் கூடி கலைவது அவர்களின் வாழ்வோடு ஒட்டி உறவாடி இருந்துள்ளன. ஸூஃபித்துவத்தையும், சன்மார்கத்தையும் ஏனையவைகளையும் ஒருவருக் கொருவர் பரிமாரி நகைச் சுவையோடும் கவித்துவப் பாங்கோடும் அவர்கள் இயல்பாகப் பேசி கலிதீர்த்திடுவார்கள். இவர்கள் அனைவருக்கும் கவிப் புலமை, பாடலியற்றுந்திறன், பாட்டிசை வல்லமையும் காணப்பட்டிருக்கின்றன.
கி.பி 1936ல் அல்-குத்ப் கலீபத்துல் காதிரிய்யி(றலி)க்கு அஸ்-ஸெய்யித் துஹ்பா உம்மா (வலி)யை திருமணஞ் செய்து வைக்கின்றனர். இத்திருமணத்தில் மாப்பிள்ளை தரப்பில் அஸ்-ஸெய்யித் றைஹானத்தும்மா (வலி)ன் தலைமையிலும் பெண் தரப்பில் அல்-குத்ப் யாஸீன் மௌலானா (றலி)ன் தலைமையிலும் நடைபெற்றுள்ளது.
இம்மாப்பிள்ளைக்கு அல்லாஹ்வையும், றஸூலையும் சீதனமாக வழங்குவதாக அல்-குத்ப் யாஸீன் மௌலானா கூறியுள்ளனர்.
இவ்விருவருக்கும் அஸ்-ஸெய்யித் றைஹானத்தும்மா தன் வாழ்விடத்தை வழங்கினார். அவ்விடத்திலேயே இறுதிவரை இருவரும் வாழ்கின்றனர். அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்திருக்கும் சின்னப்பள்ளியின் கிழக்குப் புற வீதியின் மருங்கில் இவர்கள் வாழ்ந்திருக்கின்றனர். தற்போது இவர்களின் மகளும் மகளின் மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இத்தம்பதிகளுக்கு பல குழந்தைகள் பிறந்துள்ளனர். அவர்களில் மூவர் குழந்தைப் பருவத்திலேயே வபாத்தாகியுள்ளனர். 1940, 1941, 1943லும் பிறந்த குழந்தைகளே எஞ்சியுள்ளனர். அவர்களில் இருவர் பெண்களும் ஒருவர் ஆணுமாகும். மூத்தவர் அஸ்-ஸெய்யித் ஸித்தீ றபியத்துல் ஆஸாரா, அடுத்தவர் குத்புனாஅப்துல்மஜீத்மக்கத்தார் (றலி),இளையவர் ஹப்ஸா உம்மாவும் ஆவார்கள்.
(கி.பி 2010) FIGURE – 41 குத்புனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி)
அஸ்-ஸெய்யித் ஸித்தீ றபியத்துல் ஆஸாரா உம்மா (வலி) தந்தையின் தங்கையின் மகன் புஹாரி (அபூபக்கர்) ஆலிமை திருமணஞ் செய்து சில காலம் வாழ்ந்துள்ளனர். இப்பந்தம் விவாகரத்தில் முடிவடைந்துள்ளது. இவர்கள் 1983ல் வபாத்தைத் தழுவுகின்றனர். அக்கரைப்பற்று தைக்கா நகர் பொதுமையவாடியில் தந்தைக்கு அருகில் (மேற்காக) நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சந்ததிகள் எதுவுமிருக்கவில்லை.
அல்-குத்ப் அப்துஸ்ஸமத் ஆலிம் (றலி) தன் மூத்த மகளுக்கும் இளைய மகளுக்கும் திருமணஞ் செய்து வைத்துள்ளனர். 1962ல் இவர்கள் வபாத்தை தழுவுகின்றனர். இவர்கள் அக்கரைப்பற்று, தைக்கா நகர் மைவாடியில் மிஸ்கீன் அலிஸா மஹ்பூப் (வலி)ன் மக்பராவிற்கு தென்புறமாக அடக்கப்பட்டுள்ளனர்.
Leave a comment