அல்-குத்ப், அஷ்-ஷெய்க், அஸ்-ஸெய்யித் அப்துஸ்ஸமத் மௌலானா யமானி (றலி)
பிறப்பு :
அல்-குத்ப், அஷ்-ஷெய்க் அப்துஸ்ஸமத் மௌலானா (றலி), ஷெய்க் இஸ்மாயீல் யமானி (றலி)ன் இரண்டாம் தாரத்தின் மகனாப் பிரசவித்தவர்கள். வெலிகாமத்தில் பிரிதானியரின் ஆட்சியில் 1810ல் இம் மஹான் பிறந்துள்ளார்கள். பிறப்பால் புனித அஹ்லுல்பைத் குடும்பத்தை உடமையாகக் கொண்டவர்கள்.
இரண்டாம் மனைவிக்கு ஐந்தாவது குழந்தையாக 15.07.1810ல் (பிறை 12 ஜமாதுல் ஆஹிர், ஹிஜ்ரி 1225) அஷ்-ஷெய்க் அப்துஸ்ஸமத் (சின்ன) மௌலானா(றலி) அவர்கள் வெலிகாமத்தில் கெட்டேகொட எனும் கிராமத்தில் பூந்தோட்டமெனும் இல்லத்தில் பிறந்தார்கள். ( 107. ஆதாரம் : அக்கரைப்பற்று வரலாறும், பக்-275).
கல்வி :
இவர்கள் தன் தந்தையிடமும் மூத்த சகோதரிடமும் குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ், பிக்ஹு, ஷரிஅத் ஞானங்களையும் தரீக்கத், ஹகீகத், மஹ்ரிபா மற்றும் இறை அருள் ஞானங்களையும் கற்றுத் தேர்ந்துள்ளார்கள். தனது 11வது வயதில் ஹாபீழாக விளங்கி, தஸவ்வுஃப், அறபுமொழி இலக்கணம், இலக்கியம், தத்துவம், எழுத்தணி போன்ற இன்னோரன்ன கலைகளையும் துறைபோக கற்றவர்கள். ‘ஆலிமுபில்லாஹ்’ என்ற உயர்தகைமை பெற்ற ஆலிமாக தேரிய இவர்கள் இளம் பராயத்திலிருந்து திக்ர், பிஹ்ர் திக்ருலன்பாஸ், திக்ருல்ஹபி முதலான வழிமுறைகளில் தன்னையழித்து தெய்வ நேயத்திற்குரிய அடியானாகவும், அப்துவாக, லோகாயிதத் தேவைகளிலிருந்து விடுபட்ட ‘ஸமத்’ ஆக அல்லாஹூவின் தியானத்தில் மூழ்கியுள்ளார்கள். இவர்கள் துள்ளி விளையாடும் பருவத்தில் கறாமத்துக்களை காட்டியுள்ளார்கள்.
Haleema was the Fourth child, whose brother was Hafiz, Sheikh Abdul Samad Moulana, a living saint who is enshrined at Akkaraipattu, Jummah Mosque, Batticaloa. Besides Being a Hafiz and deeply learned in every branch of theology and Sufism, he was a living saint who used to perform miracles in front of the people while competing with his elder brother Sheikh Abdulla Moulana, who too was gifted with miracles during his life time.( 108. ஆதாரம் :Qutub AS-Shiekh Yehyap Al-Yemeni)
பைஅத், கிலாபத்:
இறை காதல் வயப்பட்ட அஷ்-ஷெய்க் அப்துஸ்ஸமத் மௌலானா (றலி)க்கு 25 அகவையில் ஷெய்க் இஸ்மாயீல் யமானி (றலி) ஹகீகியான பைஅத் வழங்கி காதிரிய்யி, ஜிஸ்திய்யி, றிபாஇய்யி, ஷாதலிய்யி, ஐதரூஸிய்யி தரீக்காக்களின் கலீபாவாகத் தேர்வு செய்துள்ளார்கள். இத்தசாப்த வகுதிக்குள் தப்தர் ஜீலானி, கதிர்காமம் ஆகிய பகுதிகளில் இறைதியான வாசத்தில் வனவாசம் செய்துள்ளார்கள். தமது முப்பத்து ஆறாவது வயதில் ஷெய்க் அப்துஸ்ஸமத் மௌலானா (றலி) தந்தையிடமிருந்து தரீக்கா கிலாபத்தைப் பெற்றுள்ளார்கள். (109. ஆதாரம் : குத்புனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி)).
சிறப்புக்கள் :
ஸெய்யித் அபூபக்கர் ஸித்தீக் (றலி)யின் ஜமாலிய்யத் நற்பண்புகளே இவர்களிடம் குடி கொண்டிருந்தன. அன்பு, இரக்கம், பொறுமை, எதையும் தியாகிக்கும் மனம் இவை போன்ற நற்குணங்களாலேயே மக்களை வழிநடத்தியுள்ளார்கள். தெய்வ அருளை ஆடையாக போர்த்திய இவ்வலியுல்லாஹ்வோடு பழகிய எவரும் இவர்கள் அபூபக்கர் ஸித்தீக் (றலி)ன் வம்சத்து வாரிஸு என்பதை இலகுவில் புரிந்து கொள்ளக்கூடிய ஒருவராக சான்று பகர்ந்துள்ளார்கள். மிக எளிமையான வாழ்வும் அறபு முஸ்லிம்களின் உடை நடை பாவனை, ஒரு ஷெய்க்குக்குரிய பவ்வியும், பக்குவம், உயர் சீலங்கள் இப்பெரியாருக்கு அழகு செய்துள்ளன.
கிழக்கிலங்கைக்கான விஜயம் மற்றும் திருமணம் :
ஷெய்க் அப்துஸ்ஸமத் மௌலானா (றலி) தமது ஐம்பத்தைந்தாவது அகவையில் ஷெய்க் இஸ்மாயீல் யமானி (றலி)ன் அறிவித்தலிற்கு அமைவாக கிழக்கிற்குப் பிரதேசங்களுக்கு வருகை தந்துள்ளார்கள். இப்பெரியார் மூன்று பிரதேசங்களில் மூன்று விவாகஞ் செய்து. பல குழந்தைகளைப்பெற்றுள்ளார்கள்.
மக்காவுதிதத் நபி நாயகராம் – தங்கள்
வரிசை பெரும் சிறு தந்தையராம்
அப்பாஸ் கிளையில் வந்தவராம் அப்துஸ்
ஸமதெனும் மண்ணலைப் போற்றிடுவோம்
வளங்கள் செறிந்திடும் எமன் பதிவாழ் – ஷெய்கு
இஸ்மாயீல் மவ்லானா செய்தவத்தால்
களங்கமற வருமகனாம் அப்துஸ் ஸமதவர்
காரணங்கேளாடி தோழியரே! (110. தகவல் : ஷெய்கு மதார் ஸாஹிப் பாடல், அக்கரைப்பற்று).
ஷெய்க் அப்துஸ்ஸமத் மௌலானா (றலி) திக்வெல்லையில் முதலாம் திருமணத்தையும், பொத்துவிலில் இரண்டாம் மணத்தையும் அக்கரைப்பற்றில் மூன்றாம் மணத்தையும் செய்துள்ளார்கள்.
பொத்துவிலில் மர்ஹபா ஹாஜ்ஜின் மகளை திருமணஞ் செய்து, அல்-குத்ப் அப்துல் வஹாப் மௌலானா (றலி)யை ஈன்றெடுத்துள்ளார்கள். அக்கரைப்பற்றில் சேகு முல்லைக்காரன் போடியாரின் மகள் ஸித்தீ பாத்திமாவை விவாகஞ் செய்து நான்கு பெண் மக்களையும் மூன்று ஆண் மக்களையும் பெற்றெடுத்து வாழ்ந்துள்ளார்கள்.
இவர்களுக்கு றைஹானத்துஸ்ஸஅதிய்யா, ஷரீபா உம்மா, லெத்தீபா உம்மா, றாபியத்துல் ஆஷறா (அறபி மூத்தம்மா) எனும் பெண்களும் அப்துல் ஜப்பார், அப்துல் கஃபார், அப்துல் கரீம் எனும் ஆண்களும் பிறந்தனர்.(111. தகவல் : அக்கரைப்பற்று வரலாறு, பக்கம் – 275).
பொத்துவிலில் மாமனார் பிள்ளை குடியிலும் அக்கரைப்பற்றில் இராசம்பிள்ளை குடியிலும் ஷெய்க் அப்துஸ்ஸமத் மௌலானா (றலி) பெண்ணெடுத்துள்ளார்கள்.
Abdussamat Maulana had a total of three wives, the first from Dickwella near Dondra at the southern tip of island, the other two from Pottuvil (Mamanap pillah kudi) and Akkaaraipattu (Rasampillai Kudi). It is said that virtually all members of Maulana vamsam living in Akkaraipattu today can be traced to the marriages of Periya Maulana and Abdus Samat Moulan. Judging from the genealogical details, these two men may have come to Akkaraipattu shortly after 1900.Except for the “floating plank” the saga of sheikh Ismail and his descendants seems well documented historically and genealogically, although his precise connection to the prophet’s family is no longer perfectly understood in Akkaraipattu. This does not matter greatly to the congregation of the Town Mosque, who are content to venerate his son’s Maulana pedigree and to enjoy the protective power of his saintly tomb.. (112.ஆதாரம் : Crucible of conflict, Pag – 294, Dennis B. Mcgilvray, Colorado).
சேவைகள் :
ஞான சிகாமணி ஸூஃபி மஹான் ஷெய்க் அப்துஸ்ஸமத் மௌலானா (றலி) தரீக்கா அகலறையில் மக்களை வழி நடத்திருக்கின்றார்கள். றாதிப்பு, மௌலித்துகள், திக்ர் மஜ்லிஸ்கள் நடத்தி ஆன்ம பயிற்சிகளை வழங்கி ஹிதாயத்தின் பால் மக்களை திசை திருப்பியுள்ளார்கள். பைஅத், நஸீஹத், இஜாஸாத் முதலான ஸூஃபிகளின் நெறிமுறையில் அவர்களை ஆன்ம ஈடேற்றம் பெறச் செய்துள்ளார்கள். இவர்களிடம் ‘பைஅத்’ பெற்ற முரீதீன்கள் அனைவரும் இறைவனின் முடுகுதலைப் பெற்ற வலிமார்களாகவும் பிரசித்தம் வாய்ந்தவர்களாகவும் மக்கள் மத்தியில் பிரகாசிக்கின்றனர்.
அட்டாளைச்சேனையில் அமரத்துவமடைந்தவரும் ‘மணமங்கள மாலை’ எனும் காவியத்தைப் பாடிய அப்துர் றஹுமான் ஆலிம் (வலி), இந்தியா நூஹு லெப்பை ஆலிம் முதலான ஸூஃபி கவிஞர்களும் எழுத்தாளர்களும் இம்மாமேதையின் முரீத்தீன்கள் ஆவார்கள்.
கிழக்கிலங்கையில் பெருந்தொண்டுகள் ஆற்றிய இப்பெரியார், இஸ்லாமிய கலை, கல்வி, கலாசாரம், பண்பாட்டுத்துறையின் பரிணமத்திற்கு அத்திவாரமிட்டவர்கள் எனலாம். ஸுபஹான மௌலித், முஹையதீன் மௌலித், புர்தா ஷரிப், ஹத்தாத் றாதீப் புஹாரி, முஸ்லிம் ஹதீஸ் மஜ்லிஸ், கந்தூரி இவை போன்ற கலாசாரப் பாரம்பரிய தீனுல் இஸ்லாமிய சூழலை உருவாக்கிய மஹானாக விளங்கின்றார்கள்.
ஈமான் நிலைபெற நெறிகளையும் – நம்
ஏந்தல் நபி சறகுள்ளவையும்
கோமான் தனையறியும் வகையும் – மற்றும்
கொள்கைகள் காட்டிய குருநாதர்.
(113. ஆதாரம் : ஷெய்குமதார் புலவர், அக்கரைப்பற்று).
மக்கள் மத்தியில் ‘சின்ன மௌலானா’ என்ற பெயரால் அறியப்பட்ட, அல்-குத்ப்,அஷ்-ஷெய்க் அப்துஸ்ஸமத் மௌலானா (றலி)ன் ஆன்மீகப் பணியும், சமூகப் பணியும் அக்கரைப்பற்றிலும் கிழக்கு முஸ்லிம்கள் மத்தியிலும் என்றும் நிரந்தரப் பங்களிப்பைச் செய்து வந்துள்ளன. ஏனைய பிரதேசங்களுக்குச் சென்று மார்க்க பணிகள் பலதை செய்துள்ளார்கள். இவர்கள் பல மக்பராக்களின் இஸ்தாபகராகவும் இருந்துள்ளார்கள். அக்கரைப்பற்று சின்னப்பள்ளி(பட்டினப்பள்ளி)யை இந்த ஸூஃபிதான் நிறுவியுள்ளார்கள்.
இப்பள்ளிவாசல் சுமார் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது எனக் கொள்ளப்படுகின்றது. யெமன் நாட்டிலிருந்து வந்த இஸ்மாயீல் யமானி (சின்னமௌலானா – அப்பாவின் தந்தை) அவர்களாலும் அவர் மகன் அப்துஸ்ஸமத் மௌலானா என்பவராலும் இப்பள்ளி வாசல் தாபிக்கப்பட்டுள்ளது. (114. ஆதாரம் : அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள், பக்-121)
ஷெய்க் அப்துஸ்ஸமத் மௌலானா (றலி) கொத்தனாக தம் கரங் கொண்டு கட்டிய பள்ளி என்பதால் சின்ன மௌலானவின் நினைவாக ‘சின்னப்பள்ளி’ என்று மக்கள் அழைத்து வருகின்றார்கள். இப்பள்ளிவாசல் கட்டி முடித்து அவர்களால் குத்பா நிகழ்த்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சின்னப்பள்ளின் ஆரம்பக் கட்டிடம் (கி.பி. 1963), Figure – 28
இவர்களே இப்பள்ளிக்குரிய காணியையும் வக்பு செய்துள்ளார்கள். இப்பள்ளிக்கு எதிரே கிழக்குப் புறத்தில் இவர்களின் வாழ்விடமிருந்துள்ளது. அவர்கள் வாழ்விடத்திற்கு அருகிலுள்ள வீதிக்கு ‘சின்ன மௌலானா வீதி’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
காடுகளுக்கிடையே குடிசைகள் அமைத்து மக்கள் வாழ்ந்த கிராமப்புறங்களாக விளங்கிய மருதமுனை தொடக்கம் பொத்துவில் வரையும் மேற்கே இறக்காமம் தொடக்கம் ஒலுவில் வரையுமுள்ள கிராமங்களுக்கு சென்று இவர்கள் சமயப் பணியாற்றினர். (115. ஆதாரம் : அக்கரைப்பற்று வரலாறு, பக்-276).
பல தரீக்காக்களின் ஷெய்க்காக விளங்கிய ஷெய்க் அப்துஸ்ஸமத் மௌலானா (றலி) றிபாஇய்யித் தரீக்காப் பணிகளையும் செய்து வந்துள்ளார்கள். ஸெய்யிதினா அஹமதுல் கபீர் நாயகத்தின் பெயரால் ஓதிய இரு விஷமிறக்கும் கற்களையும் வைத்துள்ளார்கள். அவை தம்பிலுவில் கோயிலிலும் சின்னப்பள்ளியிலும் காணப்படுகின்றன.
சங்கைக்குரிய அல்குத்ப் அப்துஸ்ஸமத் மௌலானா (றலி) யால் ஓதி வைக்கப்பட்ட விஷக்கல் (சின்னப்பள்ளி) (புகைப்படம்-கி.பி. 2010நவம்பர்)
Figure – 29
விஷஜந்து தீண்டிய பலர் இக்கல்லின் மூலம் குணம் கண்டுள்ளனர். கடந்த தசாப்தம் வரை இவ்விஷக்கல்லை மக்கள் பயன்படுத்தி யுள்ளனர். கிழக்கிலங்கையில் முதல் முதல் வைக்கப்பட்ட விஷக்கல் என்ற பெருமை இதற்குண்டு. இவ்விஷக்கல்லைத் தொடர்ந்தே ஏனைய பிரதேசங்களிலும் விஷக்கற்கள் வைக்கப்பட்டுள்ளன.
இவர்கள் சிறந்த எழுத்தாளராகவும், அறபு, தமிழ் மொழிக் கவிஞராகவும் ஏக காலத்தில் விளங்கியுள்ளார்கள் பல நூற்களையும் கோர்த்துள்ளதாக தெரிய வருகின்றது. “யாகுத்பா மாலை, அஸ்மாஉல் ஹுஸ்னா விளக்கம், பைழுல் இலாஹி, மெஞ்ஞானப் போதகம், ஸூஃபித்துவ தீபம் “ என்பன போன்ற நூற்கள் அவர்களின் கைவண்ணத்தில் உருவாகின (116. தகவல் : அக்கரைப்பற்று வரலாறு. பக் – 276).
அல்-குத்ப், அஷ்-ஷெய்க் அப்துஸ்ஸமத் மௌலானா அல்-யமானி ‘குத்பிய்யியா’ என்ற அரபுக் கவிதையை கருத்து மாறாது தமிழில் கவிதையாகப் பாடி புகழ் பெற்றுள்ளார். இந்தியாவில் இது அச்சிடப்பட்டு, இன்றும் புத்தக விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருவதை நாம் காணலாம்.(117. ஆதாரம் : வளம், 2010, பக்-140).
யாகுத்பா மாலை
(ஷெய்க் இஸ்மாயீல் அவர்களின் புதல்வர் அப்துஸ்ஸமத் ஆலிம் ஸாஹிப் அவர்கள் பாடியது)
அல்ஹம்து லில்லாஹிஹம் த ன் தாயி தமன்அபதா
வஷ்ஷுக்று ஷக்றன்கஸீ றன்வாஸி பன்றகதா
தும்மஸ்ஸ லாத்து அலா வாகில் அனாமிறதா
வல்ஆலி வஸ்ஸஹ்பிவத் துப்பாயி பித்தீனி
அல்ஹம்து லில்லாஹியெப் புகழாதி யொருவனுக்காம்
நல்லதிக ஷுக்றுஞ்சிறப் பும்நாய னொருவனுக்காம்
சொல்லெந்த நாள்ஸலவாத் திறைதூதர் நபிதமக்காம்
வல்ஆலி வஸ்ஸஹ்பிவத் துப்பாயிபித்தீனி
யாகுத்ப அஹ்லிஸ்ஸமா வல் அற்ளி கவ்ஸஹுமா
பாபைன ஐனைஉஜூ தைஹிம்வ கைஸஹுமா
எப்னல் அலிய்யைனிகது அஹ்றஸ்த இற்ஸஹுமா
யாகைற மன் கானயுத் ஆமுஹ்யி யத்தீனி
வானோர்க்கும் புவியோர்க்குமே வருங்குதுபு ஆதாரமே
தானீர்ப திக்கீருஜு தாய்வந்த தாபரமே
தீனின்பு லியலிஈர் பாலர்கள் பேரருமே
தானந்த ஈறாந்ததெரங் கும்முஹ்யி யத்தீனே
யாகவ்ஸுல் அஃளமுகுல் லத்தஹ்றி வல்ஹீனி
அஃலரவ லிய்யின்பிதஹ் கீமின்வ தம்கீனி
அவ்லாப கீரின் இலல் மவ்லாவ மிஸ்கீனி
அந்த்தல்ல ஸித்தீனுஸம் மாமுஹ்யி யத்தீனி
எக்கால மெந்நேரமும் கவ்ஸென்னும் பேருடையோர்
ஹக்கான வலிமாரக்குமே லாம்பரான வலியெனவோர்
மிக்காத ரிப்போர்களின் மிகவிரப்பையு முடையயோர்
தக்காத்த ருள் நாமநா ளும்முஹியி யத்தீனே
வகது அதாக்ககிதா புல்லாஹி முஸ்த்தமிஆ
யாகவ்ஸு அஃளமுகுன் பில்குற்பி முஜ்ததமிஆ
அந்தல்க லீபத்துலீ பில்கவ்னி முல்த்தமிஆ
ஸும்மீத்த பிஸ்மின் அளீ மின்முஹ்யி யத்தீனி
தந்தை தாய் தாரம் சந்ததியு மில்லானைச்
சொந்தமுடன் காட்சி பெற்ற தூதரங்கர் யாநபியே
யாமன்த்த பஜ்ஜறத்தில் அன்ஹாறு நாபிஅத்தன்
மின் இஸ்ப ஐஹிபறவ் வல்ஜைஷ பில்ததி
வாகாய் விரல்களிலே வரவழைத்த நன்னதியால்
தாகங்க டீர்த்து வைத்த தாஹா ரஸுல் நபியே
மறுமையிலே வருந்தாகம் வருத்த மெல்லாம் உங்களுட
கருணையால் மாற்றிவைப்பீர் ஹாமீன் ரஸுல் நபியே
இன்னி இதாமஸ்ஸனீ லைமுன்யு றவ்விஉனீ
அக்கூலு யாஸையிதஸ் ஸாதாத்தி யாஸனதீ
திடுக்கமா யெனை நோக்கித் தீண்டுகின்ற தங்கடங்க
ளிடுக்கந் தனிலுஞ் சொல்வே னென் ஸையிதீநபியே
ஸாதாத்துக ளானவருக்கு ஸையிதே யென் ஸனதீ
ஆதரவாய் வந்துதித்த அஹ்மதுவே யாநபியே
குன்லீ ஷபீ அன்இலர் றஹ்மானி மின்ஸலலீ
வம்னுன் அலையபிமா லாக்கான பீகலதீ
எளியேன்றான் செய்பிழையை யிறையோனுந் தான் பொறுக்கத்
தெளிவான மன்றாட்டஞ் செய்வீர்கள் யாநபியே
நித்திய சுகம் பெறவே நேசமா யென்பேரில்
முத்திதந் தருள்வீர்கள் முஹம்மதுவே யாநபியே
வன்லுறுபி ஐனிர்ரிலா லீ தாயி மன் அபதா
வஸ்துறுபி தவ்லிக்கத்தக் ஸீரி மதல் அமதி
மாறாம லெப்பொழுது மகிழ்ச்சியா யென்னளவில்
நேர்பொருந்துங் கண்ணாலே நீர் பாரும் யாநபியே
உங்கள் மகிமை கொண்டே யூழிநாட்செய்பிழையாற்
பங்கப் படுத்தாமற் பலன் தருவீர் யாநபியே
வஃதிபு அலையபி அபு வின்மிக்க யஷ்மலுனீ
பஇன்னனீ அன்கயா மவ்லாய லம் அஹிதி
உங்களில் நின்று முள்ள உகப்பான பொறுக்குதல்தா
ளெங்களைப் பொதிந்து கொள்ள விரங்குவீர் யாநபியே
கருந்தரே யும்மை யன்றிக் காண்கிலே ளென்றெனக்குப்
பெருத்த பிழை பொறுத்துப் பேணுவீர் யாநபியே
இன்னீத்த வஸ்ஸல்த்துபில் முக்த்தாரி அஷ்ரபிமன்
றகஸ் ஸமாவாத்திஸிர் ரில்வாஹி தில் அஹதி
தாகமாய் வான் கடந்து ஷறபான அறுஷளவில்
வாஹிதா யிருக்கும் றப்பை வசனித்த யாநபியே
எனக்கு தவியான நல்ல வின்பமுள்ள வஸீலாவே
மனக்கவலை தீர்க்கு மெங்கள் வள்ளலே யாநபியே
றப்புல் ஜமாலித்தஆ லல்லாஹூ காலிகுஹு
பமிதுலு ஹூபீஜமீ இல்கல்கி லம் அஜிதி
ஜமாலுள்ள றப்பு உம்மைத் தன்னொளிவாற் றானவைத்தான்
கமால் முழுதும் பெற்றுவந்த காரணரே யாநபியே
உங்கள்போ லொருபடைப்பை யுடையோன் படைக்கவில்லை
யெங்கணபி யாகவந்த ஏற்ற முள்ள யாநபியே
கைரில் கலாயிக்கி அஃலல்முறுஸ லீன துறா
ஸுகுரில் அனாமிவஹா தீஹிம் இலர் றுஷுதி
முறுஸலீ னானவர்க்கு முன்னான அஹ்மதுவே
நெறியளவில் வழிகாட்டும் நீதரே யாநபியே
எல்லாப் படைப்புகட்கு மேற்ற முள்ள தங்கரிப்பே
நல்ல வழி காட்டும் நாயகரே யாநபியே
பீஹில்த்த ஜஃத்துல அல் லல்லாஹ யக்பிறுலீ
ஹாதல்லதீ ஹுவபீ ளன்னீவ முஃத்த கதீ
அல்லாஹு வென்பிழையை அன்பாய்ப் பொறுப்பதற்கே
யல்லும் பகலுமுங்க ளாதரவே யாநபியே
இப்படியே யென்னுடைய விருதயத்தில் நல்லுறுதி
தப்பாம லென்றெனக்கு தந்தருள்வீர் யாநபியே
பமதுஹு ஹூலம் யஸல் தஃபீ மதாஉமுரீ
வஹுப்புஹு இன்தறப் பில் அற்ஷி முஸ்த்தனதீ
உயிருள்ள நாளளவு முங்கள் புகழ்மதுஹால்
கைர் பெருகத் தந்தருளும் காத்திம் றஸூல் நபியே
அறுஷுடைய றப்பான அல்லாவின் திருமுகத்தைப்
பிரிசமுடன் கண்காட்சி பெற்றோரே யாநபியே
அலைஹி அஸ்க்கா ஸலாத் தின்லம்ய ஸல் அபதா
மஅஸ் ஸலாமிபிலா ஹஸ்ரின் பிலா அததி
மட்டு திட்ட மெண்ண மன்றி மன்னான் ஸலா முடனே
இஷ்டஸல வாத்துமக்கே யிறைகிருபை யாநபியே
எக்காலமு மகாவிந்த ஏற்றமுள்ள ஸலவாத்து
ஹக்காக வந்திறங்கும் ஹாதிற ஸூல் நபியே
வல்ஆலி வஸ்ஸஹ்பி அஹ்லில் மஜ்தி காத்திபத்தன்
பஹ்ரிஸ் ஸமாஹிவ அஹ் லில்ஜூதி வல்மததி
கொடைமிகுந்த ஆள்களுக்குங் குதுபான தோழருக்கு
முடையோன் கிருபையுண்டா முதவிசெய்வீர் யாநபியே
எடுத்துப் படிப்பவருக்கு மின்பமாய்க் கேட்பவருக்குந்
தொடுத்தோ ரனைவருக்குந் துணை செய்வீர் யாநபியே
ஸும்மஸ் ஸலாத்து அலா கைரில் பரிய்யத்திமன்
அத்தா இலைஹிபிவஹ் யில்லாஹீ ஜிபுரீலு
நாயகன் மலக்கான நலமான ஜிபுரீலு
ஆயும் வஹீசெலுத்தும் அஹ்மதுவே யாநபியே
ஹக்கன்ஸல வாத்துநித்தம் கைறான யாநபியே
முக்கியமா யுங்களுக்கு மொழிகிறோம் யாநபியே
பைலுஸ் ஸலாத்தி அலா கைரில் ஹுதாத்திஜறா
மாலஃல அல்பறுகுமின் ஆபாகி னஜ்மாஇ
வானின் திசையில் நின்றும் வழங்குமின்க லுள்ள மட்டும்
மானின் பிணை நபியே மகிமையுங்கட்கே நபியே
உற்றஸலவாத்தி னுகந்தபை லானதுவை
யற்ற மன்றி யுங்களுக்கே யருள்கிறோம் யாநபியே
தனதாக கண்காட்சி தாத்தொளிவைக் கண்டுவந்த
இனிதான நபிபேரில் இறையேஸலவாத் துரைப்பாய்
சிறப்பான கஃபாவில் தெளிவாக வந்து தித்த
நிறப்பமுள்ள முஹம்மதுவே நெறிநேச ரேநபியே
மலக்கான ஜிபுரீலு மகிமைநா வுரைத்த கவி
துலக்கமாய்ப் படிப்பவர்க்குத் துய்யோன் றஹுமத் துண்டாம்
துய்யோன் முஹம்மதுவின் துலங்கும் றவுலா மதிலின்
மெய்யா யெழுதப்பட்ட விளங்குங்கவி நற்பொருளே.
யாறப்பி ஸல்லி அலா மன்ஹல்ல பில்ஹறமி
தாஹர்ற ஸூலல்லதீ கதுகுஸ்ஸ பில்கறமி.
( 118. ஆதாரம் : யாகுத்பா மாலை, பக்-03,04,05,06).
அறபு மொழியையும் தமிழ் மொழியையும் கலந்து எதுகை, மோனைகளோடு மிக எளிய மொழி நடையில்; ஷெய்க் அப்துஸ் ஸமத் மௌலானா (றலி), யாகுத்பா மாலையைப்பாடிவிருப்பது ஓர் அசத்தல் கவிஞனின் பண்புகளை இயல்பாக வெளிப்படுத்தி நிற்பது நயங்கொள்ளத்தக்கது. இக்கவிதைகள் பிரிதொரு சிறப்புடையதாகவும் அமைந்துள்ளது. எவ்விராகத்திலும் இசைக்கக்கூடியதாக ‘யாகுத்பா மாலை’ காணப்படுவது இக்கவியியலாளரின் இசைத்துறையிலுள்ள புலமையைக் காட்டி நிற்கின்றது. ஆரம்பகால கிதாப் மத்ரஸாக்களில் இலக்கியகப் பாடப் பரப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. இது மாத்திமின்றி அவர்கள் காலத்தில் அச்சு இயந்திரங்கள், அச்சுப் பிரதிகள் எடுக்கும் வசதிகள் இல்லாததனால் தன் கைபட குர்ஆன் பிரதிகள், கிதாப் பிரதிகள் எழுதியுள்ளார்கள். அவர்களால் எழுதப்பட்ட குர்ஆன் பிரதிகள் இற்றைவரை காணப்படுகின்றது. மிக அழகான அச்சுப் போல் அமைந்த இப்பெரியாரின் கையெழுத்து பார்ப்போரை சிலாகிக்கச் செய்கின்றது.
கி.பி. 1889ம் வருடத்தில் இங்கு வாழ்ந்து, தற்சமயம் பட்டினப் பள்ளிவாயலில் அடக்கப்பட்டுள்ள மௌலானா அப்துஸ்ஸமத் (சின்னமௌலானா) வொலி அவர்கள் ஏழு மொழிகளைப் பேசவும் எழுதவும் வல்லமை பெற்றிருந்தார். யூனானி வைத்தியம், ஆன்மீக வைத்தியம் என்பன கைவந்த கலையாக அவருக்குவிருந்தன. இந்தியாவில் தலை சிறந்த அறிவாளிகளோடு தொடர்பு வைத்திருந்தார். மஹான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம், அவர்கள் புதல்வர்கள் கல்வத் நாயகம், ஜெல்வத் நாயகம் என்பவர்களோடு நெருக்கமாக பழகி வந்தார். கல்வத் நாயகம் எனும் வொலியுல்லாஹ் அவர்களுக்கு இவரது சகோதரர் யெஹ்யா மௌலானா வொலி அவர்கள் ஞானதீட்சை வழங்கினார்கள். (119. ஆதாரம் : கொடிமலர், பக்-216)
கராமாத்துக்கள்:
குடும்பக் காதிரிய்யி ஸில்ஸிலாவில் 25வது ஷெய்க்காக இடம்பெறும் ஷெய்க் அப்துஸ்ஸமத் மௌலானா (றலி) உயிரோடு இருக்குங்காலத்திலும் வபாத்தான பிற்பாடும் பல கறாமத்துக்கள் பல காட்டியுள்ளார்கள்.
கம்பு கொண்டு கொக்கை வீழ்த்தினவர் – கெட்ட
காலத்திலோர் நன்மை காட்டியவர்
வம்புகள் மடமைகள் ஓட்டினர் – நம்முன்
வறுமையை முற்றாகப் போக்கினவர்!
(120. ஆதாரம் : ஷேகு மதார் புலவர், அக்கரைப்பற்று, சின்ன மௌலானா வரலாறு).
1985ல் தீவிரவாதக் குழு உறுப்பினர்கள் ஜீப் வண்டியொன்றில் கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று வீதி வழியாக வந்து கொண்டிருந்தவர்கள் சின்னப்பள்ளியின் ஸியாரத்தின் மேல் துப்பாக்கியினால் சராமாரி பொழிந்து சென்று கொண்டிருக்கும் போது சுமார் 250மீற்றர் தொலைவில் உள்ள ‘ரௌண்ட்போட்’ வளையில் விபத்துக்குள்ளாகி அக்குழு எட்டு உறுப்பினர்களும் கொல்லப் பட்டுள்ளார்கள்.(121. ஆதாரம் : இலங்கையின் இனப் பிரச்சினைத் தீர்வும் முஸ்லிம்களும், பக்-29).
கலீஃபா மற்றும் வபாத்து:
இவ்விறைஞான மஹான் தம் பொத்துவில் இரண்டாந்தாரத்தின் கிடைத்த அல்-குத்ப், அஷ்-ஷெய்க் அப்துல் வஹாப் மௌலானா (றலி)க்கு காதிரிய்யி, ஜிஸ்திய்யி, றிபாஇய்யி, ஷாதலிய்யி, ஐதரூஸ்ஸிய்யி தரீக்காக்களின் கிலாபத்தை 1889ல் கொடுத்து, ஹிஜ்ரி 1309 ஷவ்வால் 06 (1889.04.14)ல் அஸருக்குப் பிற்பாடு முரீத்தீன்களிடம் உபதேசம் செய்து இவ்வுலக வாழ்வை முடித்து தம் அல்லாஹுவின் பக்கம் சாய்கின்றார்கள். இப்பெரியார் சின்னப்பள்ளியின் கிழக்கு வட புறமாக மக்பரா கொள்கிறார்கள்.
ஆதியின் விதிவந்து தோன்றிடவே – முன்னால
மைந்த படி மவுத்தாயினர் பின்
சோதிசெறி சின்னப்பள்ளியினில் – பாதை
திரையிலடங்க அங்குரைத்தனரே!
(122. ஆதாரம் : ஷெய்குமதார் புலவர், அக்கரைப்பற்று).
சங்கைக்குரிய அல்குத்ப் அப்துஸ்ஸமத் மௌலானா (றலி)ன் ஸியாரம், (கி.பி. 2010 நவம்பர்) , Figure – 30
இப்பெரியாரின் பெயரில் வருடாவருடம் ஷவ்வால் 6ல் சின்னப்பள்ளி நிருவாகத்தினரால் கந்தூரி வழங்கப்பட்டு வருகின்றன. அத்தினத்தில் அல்-குத்ப் அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி)னாலும் வருடா வருடம் கந்தூரி வழங்கப்பட்டு வருகின்றன. இவர்கள் ஷெய்க் அப்துஸ்ஸமத் மௌலானா (றலி)ன் ஸியாரத்திற்கு 2003ல் மாப்பிள் நிலவோடுகள் பதிந்து கூரையும் அமைத்தார்கள்.
சங்கைக்குரிய அல்குத்ப் அப்துஸ்ஸமத் மௌலானா (றலி)ன் மக்பரா, (கி.பி. 2010 நவம்பர்) ,Figure – 31
Leave a comment