சங்கைக்குரிய குத்புல்அக்தாப் முஹம்மது ஜலாலுத்தீன் (றலி) (கி.பி. 1965)
பிறப்பு:
குத்புல் அக்தாப், அஷ்-ஷெய்க் முஹம்மது ஜலாலுத்தீன் (றலி) பரிசுத்த அஹ்லுல் பைத்குடும்பத்தை சேர்ந்த புனித மஹான் ஆவார்கள். அன்னாரின் தந்தை புதியைலத்துப்புற அஸ்ஸெய்யித் ஐதரூஸிய்யி தங்கக்கோயாத்தங்கள் (றலி), தாய் ஆய்சாப்புற வலீயா பீவி (றலி) அவர்கள். அந்த்ரோத்தில் இலட்சதீவின் பிரதான கோத்திரமான ‘ஜீலி’ கோத்திரத்திலே குத்புல் அக்தாப் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (றலி) அவர்களின் 21வது பரம்பரையிலே 1909 (ஹிஜ்ரி 1326)ம் ஆண்டில் பிறந்தவர்கள். (ஆதாரம் : www.noorulirfan.com,15.கந்தூரி விளம்பர துண்டு பிரசுரம் – 2004) பிற்காலத்தில் கலிக் கட்டை வசிப்பிடமாக கொண்டவர்கள்.
கல்வி:
அல்-குத்ப் முஹம்மது ஜலாலுத்தீன் (றலி), அல்-குத்ப், முஹம்மத் ஸூஃபி கூத்தாரி (கோட்டாறு, இந்தியா) (றலி)யிடம் குர்ஆனையும் கிதாப்களையும் ஓதியவர்கள். குர்ஆனை மனனமிட்ட ஹபீழாகவும், கிதாப்களை ஓதிய ஆலிமாகவும் ‘அல்-ஜாமிஆ பாக்கியத்துஸ் ஸாலிஹாத்’ மதரஸாவில் பட்டம் பெற்றவர்கள்.
திருமணம்:
ஷெய்குனா முஹம்மது ஜலாலுத்தீன் (றலி) இரு திருமணங்கள் செய்தவர்கள். இளமையிலே குடும்ப வாழ்வில் சங்கமித்தவர்கள். ஐந்து பிள்ளைகளின் தந்தையாகவிருந்துள்ளார்கள். மூத்த மகன் நீதிபதி, இளைய மகன் நூறுல் இர்பான் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி, அடுத்த இளைய மகன் பொறியியலாளர்.
இவர்கள் உலகாயித வாழ்வை மிக எளிமையாக வாழ்ந்து முடித்தவர்கள். தன் குடும்பத்திற்காகவோ அல்லது தன் மக்களுக்காகவோ எதையும் சேர்த்து வைத்தவர்களல்லர். தெய்வீகப்பணியில் வாழ்வை முழுமையாக செலவிட்டவர்கள். உலகவாழ்வை முழுமையாக துறந்த துறவியைப்போலவே இவர்கள் விளங்கினார்கள். ஒவ்வொரு மூச்சும் இறை சிந்தனையில் கழிவதையே ஆஷித்து நின்றார்கள்.
ஷெய்குடனான தொடர்பு:
மெஞ்ஞான வாழ்வில் கொண்ட வேட்கையானது இளமைப்பருவத்தில் அல்-குத்ப் முஹம்மது ஜலாலுத்தீன் (றலி)யை காமில் ஷெய்க் ஒருவரை தேடும் ஆர்வத்தை தூண்டிற்று. அக்காலத்தில் பிரபல ஸூஃபி மஹானாக விளங்கிய குத்புனா, ஷெய்க் அப்துல் காதிர் மஜ்தூபி ஹைதராபாத்தி ஸூஃபி (றலி)ன் சந்நிதானத்திற்கு குத்புனா முஹம்மது ஜலாலுத்தீன் (றலி)யைக் கொண்டு சேர்த்து, ஹைதரபாத் ஷெய்க் நாயகத்திடம் ‘பைஅத்தை’ வேண்டி நின்ற போது “தாங்கள் கிலாபத்துக்குரியவர், என் கிலாபத்தை முஹம்மது ஸூஃபிக்கு கொடுத்து விட்டதால் முஹம்மது ஸூஃபி கூத்தாரியிடம் போய் தாங்கள் பைஅத் பெறுமாறு” ஷெய்க் அப்துல் காதிர் ஸூஃபி முஹம்மது ஜலாலுத்தீன் நாயகத்திற்கு அறிவுறுத்தி வழிப்படுத்தியுள்ளார்கள்.(17. தகவல் : சங்கைக்குரிய குத்புனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி)).
பைஅத் பெறுதல்:
பெருந்தகை அஷ்-ஷெய்க் முஹம்மது ஜலாலுத்தீன் (றலி) ஷெய்க் அப்துல் காதிர் நாயகத்தின் அறிவுரைக்கு அமைவாக அல்-குத்ப் முஹம்மது ஸூஃபி கூத்தாரி (றலி)யிடம் சென்று ‘பைஅத்’ பெற்று ஹகீக்கியான முரீத்தானார்கள். (19 தகவல் : சங்கைக்குரிய குத்புனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி), கி.பி 1996).
சங்கைக்குரிய குத்புஸ் ஸமான் அஷ்-ஷெய்க் இஸ்மாயில் தெஹ்லவி (றலி)
சங்கைக்குரிய குத்புல் அக்தாப் ஷெய்க் அப்துல் காதிர் மஜ்தூபி ஹைதராபத்தி (றலி),FIGURE – 08
சங்கைக்குரிய குத்புல் அக்தாப் ஷெய்க் முஹம்மது ஸூஃபி கூத்தாரி (றலி)
நக்ஷபந்திய்யா உத்தரவு:
நபி முஹம்மது (ஸல்) அவர்களிலிருந்து ஸெய்யிதினா அபூபக்கர்(றலி)க்கும் அபூபக்கர் ஸித்தீக் (றலி)யிடமிருந்து மகன் முஹம்மது (றலி)க்கும் முஹம்மது (றலி)யிடமிருந்து உபைத்துல்லாஹ் மதனி (றலி)க்கும் உபைத்துல்லா மதனி (றலி)யிடமிருந்து குடும்ப வழியாக தந்தையினூடாக நக்ஷபந்திய்யி தரீக்கா உத்தரவுளையும் முஹம்மது ஜலாலுத்தீன் ஷெய்க் நாயகம் பெற்றிருந்தார்கள்.
சேவைகள்:
குத்புனா முஹம்மது ஜலாலுத்தீன் காதிரிய்யி, ஜிஸ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி (றலி) இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா முதலான நாடுகளிலும் ஆத்மீக தரீக்காப் பணிகளை செய்திருக்கின்றார்கள். சிங்கப்பூர், மலேஷியா நாடுகளில் இவர்களுக்காக மகாம்களும் இருந்துள்ளன. இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் ஆத்மீக சேவை புரிந்துள்ளார்கள். பல மக்பராக்களை பராமரித்தும் கட்டியும் உள்ளார்கள். ஆல்வாய், தாயக் காட்டு கரையில் உள்ள மஹ்ழறத்துல் காதிரிய்யியா தைக்காவையும் அமைத்துள்ளார்கள்.(24. ஆதாரம் : ஸில்ஸிலத்துல் நக்ஷபந்திய்யி).
மஹ்ழறத்துல் காதிரிய்யா தைக்கா, ஆல்வாய், இந்தியா, (கி.பி. 2008) , FIGURE – 10
இம்மாமேதை சகல ஞானங்களும் அறிவுகளும் ஒருமிக்க வாய்க்கப்பட்ட பேரறிஞராக திகழ்ந்துள்ளார்கள். சன்மார்க்க ஞானம் தஸவ்வுப் ஞானம் அறபு மொழி இலக்கண இலக்கியம், வான சாஸ்திரம் போன்றவற்றில் கைதேர்ந்தவர்களாக, விளங்கியுள்ளார்கள். சிங்கப்பூர், மலேஷியா, இலங்கை, இந்தியா முதலான நாடுகளுக்குரிய தொழுகை நேரங்களை வடிவமைத்துக் கொடுத்தவர்கள். ‘அஸ்ராருல் ஆரிபின், அஸ்ராருல் முஹக்கீகீன்’ ஆகிய ஞான நூற்களை எழுதியுள்ளார்கள் றாத்தீபு கிதாபையும் தொகுத்துள்ளார்கள்(24).
‘அஸ்ராருல் முஹக்கிகீன்’ எனும் நூல் அல்-குர்ஆன், அல்-ஹதீஸிக்கு நேர்பட ‘ஸிஹாஹுஸ் ஸித்தா’ கிரந்தங்களின் ஸஹீஹான ஹதீஸ் ஆதாரங்களோடு மிக சுருக்கமாக நேர்வழியையும் தஸவ்வுஃப் ஞானங்களைப் பற்றியும் மிகத் தெளிவாக விளக்கி எழுதப்பட்ட ஒரு கிதாபாகும். சம காலத்தில் இவ்வாறான மிகத்துல்லியமான ஒரு நூலை காண முடியாது. அல்-குர்ஆன், அல்-ஹதீஸின் சாரமாய் அமைந்திருப்பதே, இந்நூலின் மகத்துவமாகும்.(25,26. தகவல்: சங்கைக்குரிய அல்-குத்ப் அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி))
ஷெய்குல் இஸ்லாம் முஹம்மது ஜலாலுத்தீன் (றலி)ன் ‘அஸ்ராருல் முஹக்கிகீன்’ எனும் நூல் அறபுத் தமிழில் எழுதப்பட்டுள்ளது. காதிரிய்யா தரீக்காவினதும் ஏனைய தரீக்காக்களினது ஸூஃபித்துவ ஞானப் பொக்கிஷமாக ‘அஸ்ராருல் முஹக்கிகீன்’ விளங்கி கொண்டிக்கின்றது.
கிதாப் மதரஸாவின் விரிவுரையாளராகவும் குத்புனா முஹம்மது ஜலாலுத்தீன் (றலி) சேவை புரிந்துள்ளார்கள். மார்க்கம் சம்மந்தமாக எழுகின்ற பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகளை வழங்கி, சன்மார்க்க காவலராக தொண்டாற்றியுமுள்ளார்கள். மக்கா முகர்ரமாவில் நடைபெற்ற அகில உலக இஸ்லாமிய மாநாட்டிற்கு தலைமை தாங்கி அக்கால இஸ்லாமியப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கியுள்ளார்கள்.
இப்புனித மேதையின் தாய் மொழி மலையாளமாகும். தமிழ், அறபு, தெலுங்கு மொழிகளிலும் பாண்டித்தியமுடைய பன்மொழி அறிஞராகவும் முஹம்மத் ஜலாலுத்தீன் (றலி) இருந்துள்ளார்கள்.
அல்-குத்ப் முஹம்மது ஜலாலுத்தீன் (றலி) சமூக, ஆன்மீக, கலாசார, பண்பாட்டுப் பாரம்பரிய, மருத்துவ, கல்வி துறைகளிலுஞ் சேவை செய்துள்ளார்கள். இப்பணிகளிலே தமது முழு ஆயுளையும் செலவு செய்துள்ளார்கள். பல கல்வி நிலையங்களையும் நிறுவியுள்ளார்கள். இவர்கள் இந்தியா ஆல்வாயில் ‘நூறுல் இர்பான்’ அறபுக் கல்லூரியை நிறுவியுள்ளார்கள். அது இன்று பல்வேறு பரிணாமங்களுக்குட்பட்டு பாரிய வளர்ச்சி கண்ட கல்லூரியாக மாறியுள்ளது. அது கலை, வர்த்தக. விஞ்ஞான, கணித உயர்கல்வித் துறைகளைக் கொண்ட ஒரு பல்கலைக்கழகமாக பரிமலித்திருக்கின்றது.
நூறுல் இர்பான் அறபுப் பல்கலைக்கழகம், இந்தியா, (கி.பி. 2010) , FIGURE – 11
Pookoya Thangal Memorial Govt.College is situated in Perinthalmanna. Perinthalmanna is in Malappuram District.The Pookoya Thangal Memorial Govt.College was started and now in a good condition also The Pookoya Thangal Memorial Gov. College is affiliated in University of Calicut. The Pookoya Thangal Memorial Govt. College has the hostel facilities and all other infrastructures. The Pookoya Thangal MemorialGovt. College provides Bachelor degree courses in various streams like Arts, Commerce & Science also.
About the University.
The University of Calicut, the second university to be set up in Kerala, came into being in 1968 with the objective of developing human resources in the northern districts of Kerala by extending the reach of higher education and by promoting research in all areas of development with particular emphasis on technology and art and culture of Kerala. The University made the beginning by taking into its fold the four postgraduate departments set up by the University of Kerala at Calicut and 54 constituent colleges spread across seven northern districts. With ‘Nirmaya Karmana Sree’ as it motto,the University has surmounted challenges to emerge as the largest residential cum affiliating University in Kerala. Its 31st post graduate departments and 304 affiliated colleges have now become a veritable light house beckoning lakhs of young men and women to benefit from higher education. The University of Calicut came into being as a result of the foresightedness of the visionary leards like C.H. Mohammed Koya, C. Achutha Menon, and K.P.Kesava Monon who are no more with us now. They realized that the Kerala University centre at Cochin and Calicut were inadequate for a balanced growth of the higher education in Kerala. They wanted new universities, in Particular, a full fledged University which could open the doors of higher education to the youth of northern Kerala At this juncture, matters took a turn for the better. The late C.H. Mohammed Koya, for whom setting up Calicut University was more than a cherished dream, became the Kerala Education Minister .(27. www.noorulirfan.com)
மேலும், ஆத்மீக வைத்தியராகவும் பணி செய்துள்ளார்கள். உணவு, உடை வாழ்வு எதிலும் கவனஞ் செலுத்தாமல் வாழ்ந்த உயர் மஹாத்மீக மனிதராக அஷ்-ஷெய்க், அஸ்-ஸெய்யித் முஹம்மது ஜலாலுத்தீன் (றலி) வாழ்ந்திருக்கின்றார்கள். ஒரு பிரயாணியைப் போல அவர்களின் வாழ்வு அமைந்துள்ளது.
கராமாத்துக்கள்:
ஷெய்குனா ஜலாலுத்தீன் (றலி)யோடு, ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) தொடராக 13 நாட்கள் பயணம் செய்த அனுபவத்தை விபரிக்கையில் ஷெய்குனா முஹம்மது ஜலாலுத்தீன் (றலி) பயணம் ஆரம்பத்திலிருந்து பயணம் முடியும் (13 நாட்கள்) வரை எவ்வித ஆகாரங்களும் எடுக்கவில்லை. பயணம் முடிந்து உரிய இடத்திற்குச் சேர்ந்ததற்குப் பிற்பாடே ஷெய்கு நாயகம் உணவு உண்டார்கள் என ஆச்சரியத்தோடு கூறினார்கள்.(28. தகவல் : கி.பி 1997ம் ஆண்டு அக்கரைப்பற்று, ஹல்லாஜ் மகாமில் இரவில் உரையாற்றும் போது கூறிய தகவல்).
முஹம்மது ஜலாலுத்தீன் ஷெய்க் நாயகத்திற்கு இந்தியாவின் பல பிரதேசங்களிலும் முரீத்தீன், முஹீப்பீன்களுமுள்ளனர். வாழ்விலும் வபாத்திலும் பல கராமத்துக்களை வெளிப்படுத்திய காமில் ஷெய்க்காக அவர்கள் என்றும் விளங்கியுள்ளார்கள். 1968 ஆம் ஆண்டு வபாத்தாகிய பிற்பாடு 1972ம்மாண்டு தனது முரீத் ஒருவரை சிறைசாலையிலிருந்து விடுவிப்பதற்காக அச்சிறைச்சாலைக்குச் சென்று ஒப்பமிட்டு அம்முரீதை விடுவித்துள்ளார்கள்.(29. தகவல் : ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) – கி.பி 2000).
கலீபா:
சிறு வயதிலிருந்து முஹம்மது ஜலாலுத்தீன் நாயகம்(றலி)ன் அன்பிலும் அரவணைப்பிலும் வளர்ந்தவர்கள்தான், அஷ்-ஷெய்க் ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) ஆவார்கள். இவர்களுக்கு ஆத்மபோதத்தையும் அறநெறி தீனுல் இஸ்லாத்தையும் ஜலாலுத்தீன் ஷெய்க் நாயகம் முறையாக கற்றுக் கொடுத்தார்கள். இருபத்திரண்டு வருடங்கள் அவர்களின் சந்நிதானத்தில் வளர்ந்தவர்கள்தான், பெரியார் ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) ஆவார்கள்.
இளம் வயதிலேயே ஹல்லாஜுல் மன்ஸூர் நாயகம் (றலி) ஹகீக்கியான பைஅத்தைக் கொடுத்து முரீதாக்கி இவ்வாத்மீகப் பேரரசின் பிரதிநிதியாக தேர்வு செய்திருக்கின்றார்கள். “தம் 24ம் அகவையில் ஹிஜ்ரி 1373 ஸபர் 23 1953ல்-காதிரிய்யி, ஜிஸ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி, தரீக்காக்களின் கலீபாவாக ஷெய்குனா, முஹம்மது ஜலாலுத்தீன் (றலி)ஆல் நியமிக்கப்படுகின்றார்கள்.(36. ஆதாரம்: அஸ்ராருல் கன்சிபைஅத் றிழ்வான். பின்னட்டை;எம்.எல். முஹம்மது பாறுக், கவிஞர், பாலமுனை).
ஷெய்குனா, ஸெய்யிதினா முஹம்மது ஜலாலுத்தீன் (றலி) தமது ஐம்பத்து ஒன்பதாவது வயதினில் அஷ்-ஷெய்க் ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி)க்கு 1968 ஏப்ரல் 15 (ஹிஜ்ரி 1388 முஹர்ரம் 17) ஆம் திகதி ஆல்வாய் மஹ்ழறத்துல் காதரிய்யி தைக்காவில் காதிரிய்யி, ஜிஸ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி தரீக்காக்களின் கிலாபத் உத்தரவுகளை வழங்கிப் பொறுப்புக்களை கையளித்து 40ம்நாள் நிறைவில் 1968 மே 25 (1388 ஸபர் 26) சனிக்கிழமை மஹ்ரிப் நேரம் இறை பக்கல் சாய்ந்து விண்ணுலகம் ஏகி, தாயக் காட்டுக் கரை, ஆல்வாயில் அமைந்திருக்கும் மஹ்ழறத்துல் காதிய்யியா மகாமில் நிலை கொள்கின்றார்கள். சத்திய காமில் ஷெய்க், தம் கிலாபத்தை வழங்கி 40வது நாள் வபாத்தாவார்கள் என்பதை குத்புனா முஹம்மது ஜலாலுத்தீன் (றலி)ன் வபாத் நிறுவுகின்றது. “குத்பு நாயகம் அவர்கள் தனது கிலாபத்தை அப்துர் றஸாகுல் காதிரிய்யிக்கு வழங்கி 40வது நாள் வபாத்தானார்கள்(37. ஆதாரம்: குத்புனா ஹல்லாஜுல் மன்ஸூர் – 2005 பக்கம் – 03,04).
ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) அவர்கள் தாம் சங்கைக்குரிய குத்புல் அக்தாப், முஹம்மது ஜலாலுத்தீன் (றலி) அவர்களிடமிருந்து கிலாபத் பெற்ற விபரம் பற்றி அவரது அந்திம காலத்தில் (2004 டிசம்பர்22) விரிவாக விளக்கியுள்ளார்கள்.
தாம் மங்கர்ரில் மனைவியோடு நின்று கொண்டிருக்கும் போது, ஷெய்குனா முஹம்மது ஜலாலுத்தீன் (றலி) தேடுவதாக தாம் உணர்ந்து ஆல்வாய் மஹ்ழறவுக்கு வருகை தந்து ‘நூறுல் இர்பானில்’ இஷா தொழுவிட்டு சாயா அருந்திக் கொண்டிருந்தேன். ஷெய்குனாவின் அறையில் சனங்கள் நிறைந்திருந்தது. அச்சனங்கள் ஷெய்குனாவிடம் “தங்களுக்குப்பிறகு யார்? தங்களின் கலீபா யார்?” போன்ற வினாக்களைத் தொடுத்தனர். ஷெய்குனா தம் வபாத்து நெருங்கிவிட்டது என்பதால் தம் கலீபாவை காட்ட வேண்டிய பொறுப்பு தமக்கிருக்கின்றது என கூறி ஸெய்யித் முஹம்மது கோயாவை (ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி)) அழைக்குமாறும் தம் அறையை விட்டு சகலரும் வெளியேறுமாறு கூறி இருந்தார்கள்.
சனங்கள் ஷெய்குனாவின் அறையை விட்டு வெளியே வந்து கொண்டிருக்கின்றார்கள். “ஷெய்குனா ஸெய்யித் கோயாவை உள்ளே வருமாறு அழைக்கிறார்கள்” என ஒருவர் கூற நான் அவ்வறைக்குள் சென்றேன், ஷெய்குனா இரு கால்களையும் மடித்து குத்தி வானை நோக்கிய சாய்ந்திருந்து, ஸெய்யித் கோயாவிற்கு ‘இப்பதானா செய்தி கிடைத்த?’ என வினவி அறை கதவை மூடுமாறு கட்டளை பிறப்பித்ததற்கு அமைவாக கதவுகளை மூடி தாளிட்டுச் சென்று அமர்ந்தேன். அங்கு ஆல்வாய் அயற்கிரம ஆலிம் ஒருவருமிருந்தார். அவ்வமயம் ஷெய்குனா முகமும் கண்களும் வானை நோக்கியவாறு “தங்களை சனங்கள் உத்தேசிப்பது ஆட்சேபனைக்குரியதல்ல; அல்லாஹுவும் காட்டுது, றஸூலும் காட்டுது நாங்களும் காணுது ஸெய்யத் கோயாவிற்கு கிலாபத் வழங்குவதே; தங்களுடைய ஷெய்கில் ‘பனா’ லீலாவுடைய பனா, ஸெய்யித் கோயாவின் பனா லைலாவுடைய பனாவாகவிருப்பதால் ஸெய்யத் கோயாவிற்கே கிலாபத்தை கொடுக்க உத்தேசித்துள்ளது.” எனக்கூறி இதை நீங்கள் வெளியிலுள்ள மக்களுக்கும் சொல்லுங்கள் என்று ஆலிமை விளித்தார்கள் ஷெய்குனா முஹம்மது ஜலாலுத்தீன் (றலி).
ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி)யை, ஷெய்குனா முஹம்மது ஜலாலுத்தீன் (றலி) அருகில் அழைத்து கிலாபத் உத்தரவுகளை வழங்கி அதற்கான கிலாபத் பிரகடனப்பட்டயத்தை தம் கைபட எழுதித் தந்து, ஒரு குத்பு கிலாபத்தை தம் கலீபாவிற்கு ஒப்படைத்து 40ம் நாள் வபாத்தை தழுவுவர் என்று தம் மறுமைப் பயண முன்னறிவிப்பையும் செய்து; பல இரகசியங்களையும் ஷெய்குனா என்னோடு பரிமாறி மனைவியை அழைத்து தீவிற்கு சென்று வருமாறு கூறினார்கள் என குத்புனா ஹல்லாஜுல் மன்ஸுர் (றலி) விபரித்தார்கள்.(38. தகவல் :வை.சீ.எம்.ஆஷிக், சாய்ந்தமருது)
வபாத்து:
ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் நாயகம் (றலி) மங்கர்ருக்குச் சென்று தம் மனைவியை அழைத்துக் கொண்டு அந்ரோத்துக்குசென்று தங்கிருக்கும் வேளை 39வது நாள் “ஸெய்யித் கோயா ஸபர் பிறை 26க்கு முன் வந்து சந்திக்கவும்” என்ற ஷெய்குனாவின் தந்தியை கண்டு அதிர்ந்து போய் தீவிலிருந்து பயணமாகி ஆல்வாய் மஹ்ழறாவிற்கு அஸருக்கு கால்பதித்து ஷெய்குனாவை சந்தித்தேன். ஷெய்குனா முரீத்தீன்கள், முஹீப்பீன்கள், குடும்ப உறவினர்கள் மத்தியில் தான் வபாத்தானால் செய்ய வேண்டிய கடமைளைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார்கள். ஷெய்குனா என்னிடம் என் வபாத்து மஹ்ரிப்பைதாண்டாது என கூறி என்னிடம் பல இரகசியங்களை பேசினார்கள். மஹ்ரிப் அளவில் ஷெய்குனா வபாத்தானார்கள்.(39. தகவல் : எம்.சி.எம். யாஸீர் – பிரதேச சபை உறுப்பினர், அக்கரைப்பற்று). (ஹிஜ்ரி 1388 ஸபர் பிறை 26, கி.பி. 1968 மே 25 ஆம்திகதி சனிக்கிழமை)
சங்கைக்குரிய குத்புல் அக்தாப், முஹம்மது ஜலாலுத்தீன் (றலி)ன் ஸியாரம் (கி.பி. 2008), FIGURE – 12
இலங்கையைச் சேர்ந்த தரீக்கா முரீதீன்கள் பலர் அவர்களை கனவிலும், நிதர்சனத்திலும் தரிசித்துள்ளார்கள். 1995ம் வருடம் தன்மூத்த மகள் ஸஹ்ரத்துன்னிஸாவை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் போது இரவில், தான் ஒரு குகைக்குளிருந்து ஏறுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் போது மெலிந்த உயர்ந்த தோற்றமும் வெள்ளை ஜுப்பாவும் தலைப்பாகையுமணிந்த ஒருவர் தனக்கு கைதந்து மேல்தூக்கி எடுக்கின்றார்கள். அவ்விடத்தில் நின்றோர் இவர்கள் முஹம்மது ஜலாலுத்தீன் (றலி) என கூறுகின்றனர். என தான் கண்ட கனவை திருமதி கே. ஜனூஸா விளக்கினார்.(30. தகவல் : கே. ஜனூஸா, ஆங்கில ஆசிரியர், அக்கரைப்பற்று).
மனுகுல நீதியும் சுவனத்து நீதியும்
இறைராஜ்ஜியத்தின் ஆதிக்கத்திலேயே உள்ளன
மனுகுல நீதியை மதியாது
இழிந்து கொடுமை செய்வான்
இறைவனின் அருளை இழிவு செய்கின்றான்…(31. ஆதாரம்: பிலால், பக்-60).
குதுபுனா முஹம்மது ஜலாலுத்தீன் (றலி) அக்காலத்து ஷெய்குமார்கள், ஸாதாத்மார்கள், குத்புக்கள் அனைவருக்கும் தலைவராகத் திகழ்ந்துள்ளார்கள். அதனாற்றான் ‘குத்புல் அக்தாப், ஷெய்குல் அக்பர்’ என பிறரால் அழைக்கப்பட்டுள்ளார்கள். இத்தரத்தில் உள்ளவர்களை ‘அபுல் வக்த்’ நேரத்தின் தந்தை என்று அழைப்பது மரபு. நேரத்தை தம் ஆணையின் கீழ் கொண்டு தாம் விரும்பும் படி நிருவகிக்கின்ற குத்புல் அக்தாப்களை குறிப்பிட்ட (அபுல் வக்த்) இச்சொல் பயன்படுத்தப்படுகின்றது. (32.ஆதாரம் : இஸ்லாமிய கலைக் களஞ்சியம், பக்கம்-1, பக்-240)
தன்னை இறைவன் அளவில் அழித்து (பனா) இறைவனின் வுஜூதை (பகா) தன்னில் நிலைப்படுத்த இறைவனால் ஆட்டிவிக்கப்பட்ட மகாஞானியே, அல்-குத்ப் முஹம்மது ஜலாலுத்தீன் (றலி) ஆவார்கள். “இன்ஸானே காமிலானவர் தம்முடைய பரிபூரண நிலையை சிறிது சிறிதாக நாளடைவில் அடைந்து பின்னர் சிறிது சிறிதாக தன்னையும் அழித்து இறுதியில் பரிபூரணமாக அவனில் அழிந்து போகிறார்”.(33. ஆதாரம்: தப்ஸீர் ரூஹுல் பயான் – பக்;-356,அல்லாயி ஹாத்துல் பர்க்கிய்யாத்து).
அவனே தன் அடியார்களுக்கு மேலிருந்து அவர்களை அடக்கி ஆள்கின்றான். (34. ஆதாரம்: அல்-குர்ஆன், 6:18, பக்கம்).
சொல், செயல், வாழ்வியல் சகல கூர்களிலும் இறை செய்தியையும் இறைவிருப்பத்தையும் வெளிப்படுத்திய அதியுன்னத ஸூஃபி மஹான் ஒருவரை, சங்கைக்குரிய ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி)ன் ஆத்மார்த்த குருநாதராக கொண்டிருந்ததனால்தான் பேரருள் கொண்ட ஒருவராக பிற்காலத்தில் அவர்களை அடையாளப்படுத்த முடிந்தது.
இவர்களைப் பற்றி மலையாளத்திலும், அறபு மொழியிலும் நூற்கள் எழுதப்பட்டுள்ளன. இந்நூற்களில் ஜலாலிய்யியா மௌலித், றாத்திபு பைத் ஆகியவை அறபு மொழியில் கவிதை வடிவில் எழுதப்பட்டுள்ளன.
பின்னிணைப்பு ( from the website of Madrasa Noorul Irfan Arabic College) :
குத்புனா முஹம்மது ஜலாலுத்தீன் (றலி) அவர்களின் ஆக்கங்கள்;
தாஜுல் அக்பர், பாத்திமா பீவி வபாத்து, வஜிபத் மாலை, தௌஹீத் மாலை, மஃரிபத் மாலை, முஹ்யித்தீன் மாலை.
தாஜுல் அக்பர் : இது நபி யூஸுப் (அலை) அவர்களின் வாழ்க்கை மற்றும் அதில் நடந்த சோதனைகள் என்பவற்றை விளக்கும் அரபு, மலையாளத்தினாலான கவிதையாகும். மிக அழகான வரலாறு என்று அல்குர்ஆனிலே வர்ணிக்கப்பட்டுள்ள இந்த வரலாற்றையும் கவிதையையும் எழுதுமுகமாக ஷெய்குனா அவர்கள் குறித்த சம்பவம் நடந்த இடத்திற்கு நேரடியாக விஜயம் செய்தும் அதனுடன் தொடர்பான அதிகமான தப்ஸீர்களை படித்தும் உள்ளார்கள்.
பாத்திமா பீவி வபாத்து:
இது அரபு மலையாளத்தில் அமைந்த கவிதையாகும். இது வரலாற்று நூற்களைத்தழுவி எழுதப்பட்டதாகும். இது றஸூல் நாயகம் (ஸல்) அவர்களின் மகள் ஸெய்யிதா பாத்திமா (றலி) அவர்களின் வபாத்திற்கு முன் நடைபெற்ற நிகழ்வுகளை ஷெய்குனா அவர்கள் இந்தக் கவிதைகள் மூலம் தெளிவுபடுத்துகிறார்கள். இது ஸெய்யிதா பாத்திமா(றலி) அவர்களுக்கும் அவர்களது கணவர் ஹழ்றத் அலி(றலி) வர்களுக்கும் வபாத்திற்கு சற்று முன்னர் நடைபெற்ற உரையாடலைச் சித்தரிக்கின்றது. இந்தக்கவிதையானது இறப்பின் பின்னுள்ள வாழ்க்கையை நமக்கு நினைவுபடுத்துகின்றது.
வஜிபத் மாலை:
தெளிவான அறபு மற்றும் மலையாளத்திலே எளிய நடைமுறையில் கலிமாவின் 40 அஸ்ல்களையும் 50 அகீதாக்களையும் கொண்டு உருவாக்கப்பட்டது. இது தொழுகை மற்றும் நோன்பு நோற்பதற்கான வழிகாட்டுதல்களை விளக்கக் கூடியதாக உள்ளது.
தௌஹீத் மாலை:
ஒரு சில முரீதீன்களின் வேண்டுகோளுக்கு இணங்க உருவாக்கப்பட்ட அரபி மற்றும் மலையாளத்தினாலான கவிதைத் தொகுப்பாகும். ‘இஸ்திலாஹுஸ் ஸூபிய்யா’ இன் பயன்பாடுகளுடன் தொடர்புடையவர்களுக்கு மிகப் பயனுள்ளதாக இது இருக்கின்றது. தரீக்கா மற்றும் மிகப்பெரிய கிதாபுகளின் சாரமாக இந்தக் கிதாபு காணப்படுகின்றது..
முஹ்யித்தீன் மாலை.
இந்தக் கவிதையானது ஸூபிகளின் தலைவர், அறிவின் சிகரம் அஷ்ஷெய்க் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (றலி) அவர்களின் வாழ்க்கையிலிருந்து சில மறக்க முடியாத சம்பவங்களை கராமத்துக்களையும் எடுத்துக் கூறுகின்றது
Leave a comment