Noorul Irfan AC

புதிய மாணவர்களுக்கான அனுமதி -2014-1435

الكلية نورالعرفان العربية – اكاربياتو

நூறுல் இர்ஃபான் அறபுக் கல்லூரி

மஹ்ழறத்துல் காதிரிய்யா ஜும்ஆ பள்ளிவாசல்
ஹல்லாஜ் மகாம் – அக்கரைப்பற்று

ஹிஜ்ரி 1435 ஜமாதுல் அவ்வல் பிறை 02 (03.02.2014) திங்கட்கிழமை அஸருக்குப் பிற்பாடு சுமார் 4:30 மணியளவில் அக்கரைப்பற்று மஹ்ழறத்துல் காதிரிய்யா ஜும்ஆப் பள்ளிவாசலில் அமைந்திருக்கும் ஹல்லாஜ் கலாச்சார தற்காலிகக் கட்டடத்தில் நூறுல் இர்ஃபான் அறபுக்கல்லூரியின் ஆரம்ப விழா நடைபெற்றது.

 நிகழ்வுகள் அனைத்தும் அதிசங்கைக்குரிய கௌதுனா குதுபுல் அக்தாப் பாகிபுபில்லா கலீஃபத்துல் ஹல்லாஜ் அஷ்-ஷெய்க் முஹியத்தீன் அப்துல் மஜீத் பின் அப்துஸ் ஸமது ஆலிம் மக்கத்தார் (றலி) காதிரிய்யி, ஜிஷ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி அவர்களின் தலைமையில் நடைபெற்றன.

நிகழ்வுகளில் கண்ணியத்திற்குரிய மௌலவி ஏ.ஆர். ஸஃபா முஹம்மத் (நஜாஹி), கண்ணியத்திற்குரிய மௌலவி ஏ.கே.நழீம் (ஷர்க்கி), புதிய மாணவர்களின் பெற்றோர் உட்பட இன்னும் முரீதீன்களும் முஹிப்பீன்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வுகளின் ஆரம்பமாக தலைமையுரை ஷெய்குனா அப்துல் மஜீத் மக்கத்தார் நாயகம் (றலி) அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அதில் ஷெய்குனா அவர்கள் இந்த மத்ரஸா ஆரம்பிக்கப்படுவதன் நோக்கம் பற்றிக் குறிப்பிட்டார்கள்.

அதனைத் தொடர்ந்து மௌலவி ஸஃபா முஹம்மத் அவர்களும் பின் மௌலவி நழீம் அவர்களும் உரையாற்றினார்கள்.

அதன் பின் ஷெய்குனா அப்துல் மஜீத் மக்கத்தார் நாயகம் (றலி) அவர்களினால் துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்னர் நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டது. தலைவராக அதிசங்கைக்குரிய ஷெய்குனா அப்துல் மஜீத் மக்கத்தார் நாயகம் (றலி) அவர்களும் போஷகர்களாக கண்ணியத்திற்குரிய அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ், அக்கரைப்பற்று மாநகர சபையின் மேன்மைமிக்க மேயர் அதாஉல்லாஹ் அஹமட் ஸகீ, உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சரின் பிரத்தியேக செயலர் கண்ணியத்திற்குரிய அஸ்-ஸெய்யித் அப்துஸ் ஸமது (இம்தியாஸ்) ஆகியோரும் நிர்வாக சபையின் செயலர் ஆக கண்ணியத்திற்குரிய ஆசிரியர் எம்.ஏ.ஸீ.எம்.ஜுஹைஸ் அவர்களும் பொருளர் ஆக கண்ணியத்திற்குரிய எம்.ஏ.ஆப்தீன் அவர்களும் உபசெயலர் ஆக கண்ணியத்திற்குரிய ஆசிரியர் எம்.எல். மஹ்பூர் அவர்களும் பொறுப்பாளராக கண்ணியத்திற்குரிய எம்.ஏ.எம்.இப்றாஹீம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். மேலும் நிர்வாக சபை அங்கத்தவர்களாக கண்ணியம்மிக்கவர்களான ஏ.வாஹித்-பிரதிக் கல்விப் பணிப்பாளர்; ஏ. ஸலாம் ஆசிரியர், அல்ஹாஜ் இஸ்ஹாக் ஆசிரியர், டிஸ்மத் ஆசிரியர், பியாஸ், ஹுஸைன் ஆசிரியர், ஸவாஹிர் ஆசிரியர், நிஷாட், எம்.ஏ.எம்.நிஸ்ஃபர் ஆசிரியர், மௌலவி நழீம், மௌலவி ஸஃபா முஹம்மத் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.

இன்றைய நிகழ்வுகளில் 17 புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.


நூறுல் இர்ஃபான் மாணவர்களுடன் ஷெய்குனா குத்புல் அக்தாப் அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) அவர்கள்,

IMG-20141225-WA0010


 

 


 

 

 

 

28.07.2015

நூறுல் இர்ஃபான் மாணவர்களுக்கு அல்குர்ஆன் பிரதிகள் மற்றும் இலவச கிதாபுகள் ஷெய்குனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) அவர்களால் வழங்கப்பட்டன.

20150728201152 (1)

20150728201150 (1)

 


 

21.11.2015

நூறுல் இர்ஃபான் வாசிகசாலைக்கு நன்கொடையாகக் கிடைத்த ஒரு தொகுதி கிதாபுகள்

20151130211957

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *