Silent Inquiry

கஹட்டொவிட்ட பாதீபிய்யா தக்கியாவில் நடைபெற்ற 150வது நத்ர் கந்தூரி தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட மலரிலிருந்து;

இஸ்லாமிய வரலாற்றில் காலவளர்ச்சியில் தோன்றிய அகீதா, பிக்ஹ் போன்ற கலைகள் போன்றே குர்-ஆன் ஸுன்னாவின் அடிப்படையில் தோன்றிய ஒரு கலையாக தஸவ்வுப் விளங்குகின்றது. அகீதா, இஸ்லாமிய விசுவாசக் கோட்பாட்டோடு தொடர்புடைய ஒரு கலையாகவும் பிக்ஹ், இஸ்லாமிய சட்டவியலுடன் தொடர்புடைய கலையாகவும் அமைந்ததுபோன்று, தஸவ்வுபும் இஸ்லாத்தின் ஆத்மீகக் கோட்பாட்டோடு தொடர்புடைய ஒரு கலையாகும். முத்தகல்லிமீன்கள், புகஹாக்கள் போன்றே ஸூபிகளும் இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்திற்கு மகத்தான பங்களிப்புச் செய்துள்ளனர்.

தஸவ்வுப் பற்றி சரியான அறிவும் தெளிவும் இல்லாதவர்கள் அதனை ஒரு துறவறக் கோட்பாடாகவும், ஸூபிகள் என்போர் உலக வாழ்வைப் பொறுத்தளவில் பற்றற்ற மனநிலையைக் கடைபிடித்து சமூக வாழ்விலிருந்து ஒதுங்கி வாழ்வோராகவும் கருதுகின்றனர். சிலர் ஸூபிகள் துறவறக் கோட்பாட்டைப் போதித்து இஸ்லாமிய வரலாற்றின் இயக்க சக்திக்கு எதிராகச் செயற்பட்ட பிற்போக்குவாதிகள் என அவர்களை விமர்சிக்கின்றனர். ஆனால் உண்மையில் தஸவ்வுபின் வரலாறும், ஸூபிகளின் ஆளுமையும் பங்களிப்பும் இக்கருத்து முற்றிலும் முரணாக அமைந்துள்ளது. (Continue….)

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *