Kuthubul Akthab Hallajul Mansoor (Raliyallahu Anhu)

Kuthubuna Hallajul Mansoor Rali. குத்புல் அக்தாப் ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி)

குத்புனா, ஹல்லாஜுல் மன்ஸூர் நாயகம் (றலி)ன் இலங்கை வருகையானது இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றிலே அதிக தாக்கத்தை உண்டு பண்ணியது. அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஆவும் ஸூஃபித்துவமும் மீண்டும் புத்துயிர் பெற்றெழுந்து, வீறு நடைபோடுவதற்கு வழிகோலியது. நவீன சடத்துவ சிந்தனைகளால் முடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டிருந்த அஹ்லுஸ்ஸுன்னா ஜமாத்தினருக்கு புதிய தெம்பும் புதிய வாழ்வும் கிடைத்தது. ஒரு வீட்டின் மூலையில் ஒளிந்து கூறிய ஸூஃபித்துவக் கருத்துக்கள் பள்ளி மிம்பரிலும் பகிரங்க மேடையிலும் கூறுவதற்கு வழி பிறந்தது.

பலரது வாழ்வில் இடம் பிடித்த ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) அவர்களின் வாழ்வும் வபாத்தும் படிப்பினை நிறைந்தாக அமைந்துள்ளது. எவரும் பின்பற்றக்கூடிய வெளிப்படையான காமில் ஷெய்க்காக விளங்கி இவர்களின் வாழ்வு மூஃமீன்களுக்கு சிறந்த எடுத்துக் காட்டாக இருப்பதனால் அம் மகத்துவமிக்க மஹானின் பின் புலவாழ்வு பற்றி சித்தரிக்க வேண்டியுள்ளது.

 குத்புல் அக்தாப் ஹல்லாஜுல் மன்ஸூர் றலியல்லாஹு அன்ஹு அவர்களின் அரிய பல உபதேசங்களின் தொகுப்பு

பிறப்பு :

இந்தியாவின் தென்மேற்காக அறபிக் கடலின் மத்தியில் காணப்படும் இலட்ச தீவுகளில் ஒன்றாக விளங்கும் அந்ரோத்தில் 1927ம் ஆண்டு நவம்பர் மாதம் 7ம் நாள் (ஹிஜ்ரி 1346 ஜ.அவ்வல் பிறை 12) திங்கட் கிழமை அஷ்-ஷெய்க், அஸ்-ஸெய்யித் ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) ஜனனமானார்கள். (2.தகவல்: தினகரன் 2009)

Lakshadweep_1  Lakshadweep-2

Lakshaweep                                          Map – 03

இப்பெரியாரின் தந்தை அஷ்-ஷெய்க், அஸ்-ஸெய்யித் அப்துர் றஹுமான் ஐதரூஸிய்யி (றலி) புனித ஸெய்யித் குடும்ப வாரிஸாகும்.  உபைத்துல்லாஹ் மதனி (றலி)ன் வழி முறையில் உதித்தவர்கள் . தாய் ஸெய்யிதா பாத்திமா (வலி) ஸெய்யிதினா ஹஸன்(றலி)ன் குடும்ப வாரிஸாகும்.

குத்புனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) தாய், தந்தை இரு வழியிலும் புனித அஹ்லுல் பைத் குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் பரம்பரையில் அநேகமானவர்கள் ஷெய்க்காவும், இறைநேசச்செல்வர்களாகவும் விளங்கியுள்ளார்கள். அந்ரோத்தில் ஸமாதி கொண்டிருக்கும் ஐதரூஸிய்யி மௌலானா (றலி)ன் மகன், ஹல்லாஜுல் மன்ஸுர் (றலி)ன் தந்தை, அப்துர் றஹுமான் (றலி) ஆவார்கள். மங்கர்ர் ஜும்ஆ மஸ்ஜித்தில் ஸமாதி கொண்டிருக்கும் ஸெய்யித் முஹம்மத் பர்ல் கோயா தங்கள் (றலி), ஐதரூஸிய்யி மௌலானா (றலி)யின் தந்தை ஆவார்கள். (11.தகவல் : தினகரன் – 2009)

குத்புனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி)ன் சகோதர சகோதரிகள் நான்கு பேர்களாகும். அந்ரோத்தில் ஸியாரம் கொண்டிருக்கும் முல்லத் கோயா தங்கள் (றலி) மூத்த சகோதர் ஆவார்கள். இவர்கள் தந்தை வழியாக தரீக்கா உத்தரவுகளைப் பெற்றவர்கள். சகோதரிகள் மூவர் ஆவார்கள். இச்சகோதரிகள் மூவரும் இறையருள் பெற்றவர்கள்.

மேன்மைமிக்க ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி)ன் பிறப்பும் வாழ்வும் இறை சந்நிதியும் முன்மாதிரி மனிதர் என்பதை பிறருக்கு எடுத்துக் காட்டிக் கொண்டே இருக்கின்றது. அவர்களின் நாளாந்த நடைமுறைகள் அனைத்தும் ஸெய்யிதினா முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மனோபாவத்தை வெளிப்படுத்துவதாக அமைந்து நின்றது. அவர்களின் ஒவ்வொரு செயற்பாடுகளும் றஸூல் நாயகங்களை ஞாபகப்படுத்துவதாகவும் அவர்களின் தோற்றத்தை அதில் காண்பது போலும் உணர்வுகளை ஏற்படுத்தியது.

பல்வேறு பெயர் சூட்டி, அல்-குத்ப் ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி)யை அழைத்து வருகின்றனர். இம் மஹாத்மீய மனிதரின் இயற்பெயர் ‘அப்துல் ஹை’ குடும்பப் பெயர் ஸெய்யத் முஹம்மது கோயாவாகும். குருநாதர் முஹம்மது ஜலாலுத்தீன் ஷெய்க் நாயகம் (றலி) ஹல்லாஜுல் மன்ஸூர்(றலி)ன் ஆத்மீக உயர் அந்தஸ்தை விளக்கும் முகமாக ‘ஹல்லாஜுல் மன்ஸூர்’ என்று பெயரிட்டு கௌரவித்தார்கள். அல்லாஹ்வில் தன்னை முழுமையாக அழித்தவர்கள் என்ற பொருளையே அப்பெயரும் பட்டமும் குறித்து நிற்கின்றது. மௌலானா வாப்பா என்றும் ஹல்லாஜ் வாப்பா என்றும் முரீதீன்களால் அழைக்கப்படுகின்றார்கள்.( 13. தகவல் : அல்-ஹாஜ் ஏ.எஸ்.எம். ஸாதிக் – அகில இலங்கை சமாதான நீதிவான், கொழும்பு)

When I returned to the town of Akkaraipattu to revisit old Muslim friends, I learned about the substantial following of a living saint from Androth Island, popularly called Maulana Vappa (“Father Maulana”), whose unique hybrid tariqa is “Qadiriya Jisti.(14. தகவல் : Sufism in Sri Lanka – Page-5 Dennis B. McGilvray)

ஆழ்ந்த புலமையும் விவேகமும் உள்ளவர்களாக இளமையிலிருந்து ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) விளங்கியுள்ளார்கள். 16வயதிற்குள் குர்ஆனை மனமிட்ட ஹாபிழாகவும் ஆலிமாகவும் பட்டம் பெற்று வெளியேறியுள்ளார்கள். சன்மார்கக் உயர்கல்வியை குத்புனா, அல்-ஹாபீழ் முஹம்மது ஜலாலுத்தீன் (றலி) அவர்களிடம் இந்தியா, வேலூர், ‘அல்-ஜாமிஆ பாக்கியத்துஸ் ஸாலிஹாத்’ மதரஸாவில் கற்று தேர்ந்துள்ளார்கள்.

சிறுபராயத்திலிருந்து ஆத்மீக பெருநாட்டம் உள்ள ஒரு மஹானாக, ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) இருந்து வந்துள்ளார்கள். ஸெய்யிதுல் அன்பியாயி தாஹா றஸூல் (ஸல்) அவர்களில் ஏற்பட்ட காதல் உணர்வு குத்புனா முஹம்மது ஜலாலுத்தீன் (றலி)ன் சகவாசத்தில் அவர்களை கட்டுண்ண வைத்துள்ளது.

குருவுடன் சகவாசம் மற்றும் கிலாபத்:

சிறு வயதிலிருந்து முஹம்மது ஜலாலுத்தீன் நாயகம்(றலி)ன் அன்பிலும் அரவணைப்பிலும் வளர்ந்தவர்கள்தான், அஷ்-ஷெய்க் ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) ஆவார்கள். இவர்களுக்கு ஆத்மபோதத்தையும் அறநெறி தீனுல் இஸ்லாத்தையும் ஜலாலுத்தீன் ஷெய்க் நாயகம் முறையாக கற்றுக் கொடுத்தார்கள். இருபத்திரண்டு வருடங்கள் அவர்களின் சந்நிதானத்தில் வளர்ந்தவர்கள்தான், பெரியார் ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) ஆவார்கள்.

இளம் வயதிலேயே ஹல்லாஜுல் மன்ஸூர் நாயகம் (றலி) ஹகீக்கியான பைஅத்பெற்று முரீதாகி இவ்வாத்மீகப் பேரரசின் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார்கள். “தம் 24ம் அகவையில் ஹிஜ்ரி 1373 ஸபர் 23 (1953)ல் காதிரிய்யி, ஜிஸ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி, தரீக்காக்களின் கலீபாவாக ஷெய்குனா, முஹம்மது ஜலாலுத்தீன் (றலி)ஆல் நியமிக்கப்படுகின்றார்கள்” (36. தகவல் : அஸ்ராருல் கன்சிபைஅத் றிழ்வான். பின்னட்டை எம்.எல். முஹம்மது பாறுக், கவிஞர், பாலமுனை)

ஷெய்குனா, ஸெய்யிதினா முஹம்மது ஜலாலுத்தீன் (றலி) தமது ஐம்பத்து ஒன்பதாவது வயதினில் அஷ்-ஷெய்க் ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி)க்கு 1968 ஏப்ரல் 15 (ஹிஜ்ரி 1388 முஹர்ரம் 17) ஆம் திகதி ஆல்வாய் மஹ்ழறத்துல் காதரிய்யி தைக்காவில் காதிரிய்யி, ஜிஸ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி தரீக்காக்களின் கிலாபத் உத்தரவுகளை வழங்கிப் பொறுப்புக்களை கையளித்து 40ம்நாள் நிறைவில் 1968 மே 25 (1388 ஸபர் 26) சனிக்கிழமை மஹ்ரிப் நேரம் இறை பக்கல் சாய்ந்து விண்ணுலகம் ஏகி, தாயக் காட்டுக் கரை, ஆல்வாயில் அமைந்திருக்கும் மஹ்ழறத்துல் காதிய்யியா மகாமில் நிலை கொள்கின்றார்கள். சத்திய காமில் ஷெய்க், தம் கிலாபத்தை வழங்கி 40வது நாள் வபாத்தாவார்கள் என்பதை குத்புனா முஹம்மது ஜலாலுத்தீன் (றலி)ன் வபாத் நிறுவுகின்றது. “குத்பு நாயகம் அவர்கள் தனது கிலாபத்தை அப்துர் றஸாகுல் காதிரிய்யிக்கு வழங்கி 40வது நாள் வபாத்தானார்கள்” (37.தகவல் : குத்புனா ஹல்லாஜுல் மன்ஸூர் – 2005 பக்கம் – 03,04)

ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) தாம் கிலாபத் பெற்ற விபரம் பற்றி அந்திம காலத்தில் (2004 டிசம்பர்22) விரிவாக விளக்கியுள்ளார்கள்.

தாம் மங்கர்ரில் மனைவியோடு நின்று கொண்டிருக்கும் போது, ஷெய்குனா முஹம்மது ஜலாலுத்தீன் (றலி) தேடுவதாக தாம் உணர்ந்து ஆல்வாய் மஹ்ழறவுக்கு வருகை தந்து ‘நூறுல் இர்பானில்’ இஷா தொழுவிட்டு சாயா அருந்திக் கொண்டிருந்தேன். ஷெய்குனாவின் அறையில் சனங்கள் நிறைந்திருந்தது. அச்சனங்கள் ஷெய்குனாவிடம் “தங்களுக்குப்பிறகு யார்? தங்களின் கலீபா யார்? போன்ற வினாக்களைத் தொடுத்தனர். ஷெய்குனா தம் வபாத்து நெருங்கிவிட்டது என்பதால் தம் கலீபாவை காட்ட வேண்டிய பொறுப்பு தமக்கிருக்கின்றது என கூறி ஸெய்யித் முஹம்மது கோயாவை (ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி)) அழைக்குமாறும் தம் அறையை விட்டு சகலரும் வெளியேறுமாறு கூறி இருந்தார்கள். சனங்கள் ஷெய்குனாவின் அறையை விட்டு வெளியே வந்து கொண்டிருக்கின்றார்கள். “ஷெய்குனா ஸெய்யித் கோயாவை உள்ளே வருமாறு அழைக்கிறார்கள்” என ஒருவர் கூற நான் அவ்வறைக்குள் சென்றேன், ஷெய்குனா இரு கால்களையும் மடித்து குத்தி வானை நோக்கிய சாய்ந்திருந்து, ஸெய்யித் கோயாவிற்கு ‘இப்பதானா செய்தி கிடைத்த’ என வினவி அறை கதவை மூடுமாறு கட்டளை பிறப்பித்ததற்கு அமைவாக கதவுகளை மூடி தாளிட்டுச் சென்று அமர்ந்தேன். அங்கு ஆல்வாய் அயற்கிரம ஆலிம் ஒருவருமிருந்தார். அவ்வமயம் ஷெய்குனா முகமும் கண்களும் வானை நோக்கியவாறு “தங்களை சனங்கள் உத்தேசிப்பது ஆட்சேபனைக்குரியதல்ல; அல்லாஹுவும் காட்டுது, றஸூலும் காட்டுது நாங்களும் காணுது ஸெய்யத் கோயாவிற்கு கிலாபத் வழங்குவதே; தங்களுடைய ஷெய்கில் ‘பனா’ லீலாவுடைய பனா, ஸெய்யித் கோயாவின் பனா  லைலாவுடைய பனாவாகவிருப்பதால் ஸெய்யத் கோயாவிற்கே கிலாபத்தை கொடுக்க உத்தேசித்துள்ளது.” எனக்கூறி இதை நீங்கள் வெளியிலுள்ள மக்களுக்கும் சொல்லுங்கள் என்று ஆலிமை விளித்தார்கள் ஷெய்குனா முஹம்மது ஜலாலுத்தீன் (றலி).

ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி)யை, ஷெய்குனா முஹம்மது ஜலாலுத்தீன் (றலி) அருகில் அழைத்து கிலாபத் உத்தரவுகளை வழங்கி அதற்கான கிலாபத் பிரகடனப்பட்டயத்தை தம் கைபட எழுதித் தந்து, ஒரு குத்பு கிலாபத்தை தம் கலீபாவிற்கு ஒப்படைத்து 40ம் நாள் வபாத்தை தழுவுவர் என்று தம் மறுமைப் பயண முன்னறிவிப்பையும் செய்து; பல இரகசியங்களையும் ஷெய்குனா என்னோடு பரிமாறி மனைவியை அழைத்து தீவிற்கு சென்று வருமாறு கூறினார்கள் என குத்புனா ஹல்லாஜுல் மன்ஸுர் (றலி) விபரித்தார்கள்.( தகவல்:38. வை.சீ.எம்.ஆஷிக், சாய்ந்தமருது)

ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் நாயகம் (றலி) மங்கர்ருக்குச் சென்று தம் மனைவியை அழைத்துக் கொண்டு அந்ரோத்துக்குசென்று தங்கிருக்கும் வேளை 39வது நாள் “ஸெய்யித் கோயா ஸபர் பிறை 26க்கு முன் வந்து சந்திக்கவும்” என்ற ஷெய்குனாவின் தந்தியை கண்டு அதிர்ந்து போய் தீவிலிருந்து பயணமாகி ஆல்வாய் மஹ்ழறாவிற்கு அஸருக்கு கால்பதித்து ஷெய்குனாவை சந்தித்தேன். ஷெய்குனா முரீத்தீன்கள், முஹீப்பீன்கள், குடும்ப உறவினர்கள் மத்தியில் தான் வபாத்தானால் செய்ய வேண்டிய கடமைளைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார்கள். ஷெய்குனா என்னிடம் என் வபாத்து மஹ்ரிப்பைதாண்டாது என கூறி என்னிடம் பல இரகசியங்களை பேசினார்கள். மஹ்ரிப் அளவில் ஷெய்குனா வபாத்தானார்கள்.(39.தகவல் :  எம்.சி.எம். யாஸீர் – பிரதேச சபை உறுப்பினர், அக்கரைப்பற்று.)

ஸில்ஸிலத்துல் காதிரிய்யில் 41வது குத்பாகவும் ஷெய்க்காகவும் பொறிக்கப்பட்டுள்ள குத்புனா முஹம்மது ஜலாலுத்தீன் (றலி)ஆல் பரிபூரணமாக மாற்றப்பட்ட குத்புனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) படிப்படியாக ஒளியேற்றப்பட்ட பரிபூரண காமில் ஷெய்க்காக முத்திரை குத்தப்பட்டார்கள்.

‘அம்ஸைத்து குர்த்திய்யன் வஅஸ்ப்பஹ்து அறபிய்யன்;’

இன்றிரவு நான் குர்த்தியனாக இருந்தேன்! இன்று காலை அறபியனாகிவிட்டேன். என தன் ஷெய்க்கால் குறுகிய கால இடைவெளியில் தனக்கு ஏற்பட்ட மாற்றத்தை கனகச்சிதமாக பாபா தாஹிர் உர்யானி (வலி) விளக்கியுள்ளதை மேற்கோளாக காட்ட முடியும். ஒரு ஷெய்க் ஒருவரை அத்தனை தூரம் மாற்றத்திற்குட்படுத்தக்கூடிய வல்லமை படைத்தவர் என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

குத்புல் அக்தாப் முஹம்மது ஜலாலுத்தீன் (றலி) யிடமிருந்து காதிரிய்யி, ஜிஸ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி, தரீக்காக்களின் கிலாபத்தைப் பெற்று ‘ஸில்ஸிலத்துல் காதிரிய்யில் 42வது ஷெய்க்காக குத்புனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) பதியப்பட்டுள்ளார்கள்’.

ஸில்ஸிலத்துல் காதிரிய்யி

1. நபி முஹம்மது (ஸல்) (அலை) அவர்கள்
2. இமாம் அலி (றலி)
3. இமாம் ஹுஸைன் (றலி)
4. இமாம் ஸெய்னுலாப்தின் (றலி)
5. இமாம் முஹம்மது பாக்கீர் (றலி)
6. இமாம் ஜஃபறுஸ்ஸாதிக் (றலி)
7. இமாம் மூஸல் காழிம் (றலி)
8. இமாம் அலிய்யி மூஸர் றிழா (றலி)
9. இமாம் மஃறூபில் கர்ஹிய்யி (றலி)
10. இமாம் ஸிர்ரிஸ்ஸிக்திய்யி (றலி)
11. இமாம் ஜுனைதுல் பக்தாதி (றலி)
12. இமாம் அபூபக்கர் ரிஷ்ஷிப்லிய்யி (றலி)
13. இமாம் அபில்பழ்லி அப்துல் வாஹிதித்தமீமிய்யி (றலி)
14. இமாம் அபில் பறஹி யூஸுபித்தர்ஸுஃபிய்யி (றலி)
15. இமாம் அபில்ஹஸனி அலிய்யில் கர்ஷிய்யில் ஹன்காரி (றலி)
16. இமாம் அபூ ஸஈதினில் முபாறக்கில் முகர்ரமிய்யி (றலி)
17. இமாம் குத்பில் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (றலி)
18. இமாம் அப்திர் ரஸ்ஸாகில் காதிரிய்யி (றலி)
19. இமாம் அபீஸாலிஹில் காதிரிய்யி (றலி)
20. இமாம் அபீ நஸ்ரில் காதிரிய்யி (றலி)
21. இமாம் முஹம்மது இப்னு அபீ நஸ்ரில் காதிரிய்யி (றலி)
22. இமாம் ஹஸன் இப்னு முஹம்மதிப்னு அபீ நஸ்ரில் காதிரிய்யி (றலி)
23. இமாம் முஹம்மதிப்னு ஸெய்யித் ஹஸன் (றலி)
24. இமாம் அலிய்யின் கதஸல்லாஹூ (றலி)
25. இமாம் மூஸா கதஸல்லாஹூ (றலி)
26. இமாம் ஹஸன் கதஸல்லாஹூ (றலி)
27. இமாம் அபில் அப்பாஸ் அஹ்மத் கதஸல்லாஹூ (றலி)
28. இமாம் பஹாஉத்தீன் கதஸல்லாஹூ (றலி)
29. இமாம் இப்றாஹீமில் இப்ரீகிய்யி கதஸல்லாஹூ (றலி)
30. இமாம் அப்துல் அஸீஸ் ஷகர் பாரிஸ்ஸூஃபிய்யி கதஸல்லாஹூ (றலி)
31. இமாம் அப்திர் றஸூலிஸ்ஸூஃபிய்யி கதஸல்லாஹூ (றலி)
32. இமாம் அப்தில் லத்தீபிஸ்ஸூஃபிய்யி கதஸல்லாஹூ (றலி)
33. இமாம் அழமதில்லாஹி அக்பறாபாதிய்யிஸ்ஸூஃபிய்யி கதஸல்லாஹூ (றலி)
34. இமாம் அப்துர் ரஹீமிஸ்ஸூஃபிய்யி கதஸல்லாஹூ (றலி)
35. இமாம் வலியில்லாஹி முஹத்திஸித் தெஹ்லவிய்யி கதஸல்லாஹூ (றலி)
36. இமாம் அப்தில் அஸீஸ் முஹத்திஸ் தெஹ்லவி கதஸல்லாஹூ (றலி)
37. இமாம் அப்தில் காதிரிஸ்ஸூஃபிய்யி கதஸல்லாஹூ (றலி)
38. இமாம் இஸ்மாஈலுஸ்ஸூஃபிய்யி கதஸல்லாஹூ (றலி)
39. இமாம் ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஸூஃபிய்யி கதஸல்லாஹூ (றலி)
40. இமாம் முஹம்மதுஸ்ஸூஃபிய்யி கதஸல்லாஹூ (றலி)
41. இமாம் முஹம்மது ஜலாலுத்தீன் கதஸல்லாஹூ (றலி)
42. இமாம் ஹல்லாஜுல் மன்ஸூர் கதஸல்லாஹூ (றலி)
43. இமாம் இர்ஹமில் ஹகீரில் பகீர் அஸ்-ஸெய்யித் அப்துல் மஜீத் மக்கத்தார் கதஸல்லாஹூ (றலி)
( 43.ஆதாரம் : ஸில்ஸிலத்துல் காதிரிய்யி – கிலாபத் வழிமுறை).

SilSila_Khadiriyya

ஸில்ஸிலா 44 (எம்.ஏ. காலித் (அதிபர்) வீட்டில் கொழுவப்பட்டுள்ள ஸில்ஸிலா) (கி.பி. 2010 நவம்பர்) Figure – 13

இந்தஸில்ஸிலா ஸெய்யிதினல் முர்ஸலீன் முஹம்மத் நபி (ஸல்) தொடங்கி தொடர் வழியில் சங்கிலி ஒழுங்கில் மக்களுக்கு நேர்வழிகாட்டிய ஷெய்க்குமார்களின் பெயர் ஒருவர் பின் ஒருவராக வருகை தந்தோர்களைக் கொண்ட ஒரு தொகுப்பு.  இக்கிலாபத் வழிமுறை ஸில்ஸிலாவில் ஒருபோதும் முறிவு ஏற்பட்டதில்லை. இதுவே மறுமைவரை தொடரும் ஸில்ஸிலாவாக என்றும் விளங்கும் ‘இந்த ஸில்ஸிலாவில் பதியப்பட்டுள்ள அனைவரும் உலகை நிருவகிக்கும் அச்சாணிகளாகவிருக்கின்ற குத்புமார்கள். “இதில் இடம் பெறும் ஒருவர் குத்பாக இல்லாவிட்டாலும் அவர்களின் அந்திமத்திற்கு முன் குத்பாக மாற்றப்பட்ட பின்னே வபாத்தாவார்கள்” என சங்கைக்குரிய ஷெய்க் நாயகம் ஹல்லாஜுல் மன்ஸுர் (றலி) தெரிவித்துள்ளார்கள்’.

(45 தகவல் : எம்.ஏ.எம். லாபீர், அக்கரைப்பற்று)

உடலமைப்பு :

சங்கைக்குரிய ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி)ன் அங்கவியற்தோற்றம் அறபி இன ஸெய்யித் வம்சாவளிக்குரிய ஒரு பெரியார் என்பதை துல்லியமாகக் காட்டிக் கொண்டிருந்தது. இவர்களில் அறபி இன ஸெய்யித்வம்சாவளிக்குரிய அங்கவியற் கூறுகள் இயல்பாகக் காணப்பட்டன.

மெலிந்த உடலும் சராசரியான உயரமும் நீண்ட முகமும் மூக்கும், வெண்மை கலந்த தாடியும் கருமை நிற சிகையும் நீண்ட கைவிரலும் அகன்று நீண்ட பாதங்கள் மகிழ்ச்சிகரமான முகமும் வல முன் கையின் மேற்பக்கம் மச்சமும் பளிச்சிடும் தெளிவான சிந்தனையும் ஒளி சிந்தும் கண்களும் முன்பக்கமான இலேசான (இடுப்பில்) வளைவும் சிவந்த வெண்மை நிறமுடைய அங்க இலக்கணங்களுடைய ஒருவராக ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) காணப்பட்டார்கள். அவர்கள் ‘வீ’ வடிவில் காற்பாதங்களை பதித்தே நடந்தார்கள்.

குத்புனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) வெண்நிற ஆடைகளையே, தொடராக அணிந்துள்ளார்கள். வெள்ளை நிற சரமும், ஜுப்பா அமைப்பில் தைக்கப்பட்ட சேட்டும் வெள்ளை நிறம் சார்ந்த தலைப்பாகையும் உயர்ரக கைக்கடிகாரமும், பாதணிகளும் அணிபவர்களாகவிருந்தார்கள். வலக்கையில் ஓர் ஊன்று கோலும் காணப்பட்டது. இவர்களின் நடையுடை பாவனை அனைத்தும் செல்வச் செழிப்பு நிறைந்த  ஒருவருக்குரிய பண்புகளை வெளிப்படுத்தி நின்றுள்ளது.

அக்கரைப்பற்று வருகையும் ஏக கலீபாவினைச் சந்தித்தலும் :

ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) தமக்கான கலீபாவை 1973ல் அக்கரைப்பற்றில் சந்தித்திருக்கின்றார்கள். சஹாப் ஸ்ரோஸ், பிரதான வீதி, அக்கரைபற்று எனும் விலாசத்தையுடைய ஜவுளிக் கடையின் பின்அறையில் கலீபா அப்துல் மஜீத் (றலி) சங்கைக்குரிய ஷெய்குனாவை கண்டுமுள்ளார்கள். ஒரு நோயாளியின் நிமிர்த்தம் நடைபெற்ற இச்சந்திப்பில் சில நோய்கள் தீர்ப்பதற்கும் ஆத்மீக நடைமுறைகளுக்கும் உத்தரவு வழங்கியுள்ளார்கள்.

இச்-ஷெய்க்கினதும் கலீபாவினதும் சந்திப்பிற்கு அட்டாளைச்சேனை தைக்கா நகரைச் சேர்ந்த அரிசிக்கார மாமா என்று அழைக்கப்பட்டவரே மூலகர்த்தாவாக அமைந்துள்ளார். அவரின் மனைவிற்கு ஏற்பட்ட புற்று நோயை குணப்படுத்தும் பொருட்டே அஸ்-ஸெய்யித் அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி)யை மௌலானாவின் (ஹல்லாஜுல் மன்ஸுர் (றலி) தரிப்பிடத்திற்கு அரிசிக்கார மாமா அழைத்துச் சென்றுள்ளார். (48. தகவல் : மழைத்தூறல் – பக்-10)

“ஒருநாள் 11 மணியளவில் குளித்து விட்டு தலை முடிகளை உலர்த்திக் கொண்டிருக்கும்போது அரிசிக்கார மாமா தன் வீட்டிற்கு வந்து தன் நிலைமையை விபரித்து தன்னை மௌலானாவிடம் வருமாறு வேண்டியதற்கு அமைவாக மௌலானா தங்கி இருக்கும் அறைக்குச் சென்றேன். மௌலானா என்னை கூர்ந்து அவதானித்துவிட்டு நீ ஓதுவாயா? என வினவே ஆம் என்றேன். உடன் அங்கு என்னை அமரச் சொல்லி டீ குடிக்கச் சொன்னார்கள். பின் சிகரெட்டுத் தந்து இங்கிருந்து புகைக்குமாறு கூறினார்கள். இறுதியாக அருகில் அழைத்து தொடராக நாற்பது நாட்கள் குறித்த குர்ஆன் பாடத்தை ஓதி, தண்ணீரில் ஊதி, நோயாளிக்கு அந்நீரை கொடுத்து வரவேண்டும் என்ற கட்டளைக்கு செவிசாய்த்து நீர் ஓதிக்கொடுக்கப்பட்டு வந்தது. புற்று நோயிலிருந்து அவர் மனைவி சுகம் கண்டார்” என சங்கைக்குரிய ஷெய்கு நாயகம் அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி) கூறி, தான் ஷெய்க்கோடு தொடர்புபட்ட முறை பற்றி விளக்கினார்கள்.

1973ல் பிரதமர் ஸ்ரீமாவோபண்டார நாயக்கா ஆட்சிக் காலத்தில் இலங்கை முதலாம் குடியரசாக ஆக்கப்பட்ட சில மாதங்களுக்கு பிற்பாடே ஷெய்க் நாயகம் ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) இங்கு வருகை தந்திருக்க வேண்டும் என யூகிக்க முடிகின்றது. இவர்கள் அவ்வருகையில் அக்கரைப்பற்றில் ஐந்து நாட்கள் தங்கியுள்ளார்கள். பின் தம் தாயகம் ஏகியுள்ளார்கள். அஷ்-ஷெய்க் அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி) ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி)யை, ஒரு நேர்வழி காட்டும் உண்மையான ‘ஷெய்க்’காக இனங்கண்டுக் கொள்வதற்கு மேற்கூறப்பட்ட நோய்க்கான உத்தரவு காரணமாக அமைந்துள்ளது.

1973ல் ஷெய்குனா முஹம்மது ஜலாலுத்தீன் (றலி)ன் உத்தரவுக்கு அமைவாகவே கலீபா அஷ்-ஷெய்க் அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி)யை காண்பதற்காக ஷெய்க் நாயகம் ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) இலங்கைக்கு விஜயம் தந்துள்ளார்கள்.

“இங்கு வருவதற்கு முன் நான் சிங்கப்பூரில் இருக்கும் வேளை ஓர் இரவு என் ஷெய்க் முஹம்மது ஜலாலுத்தீன் (றலி) ‘மஜீதின்’ முகத்தைக் காட்டி, ‘இவர் தான் உம் கலீபா!’  என என்னை விளித்து உடன் இலங்கை, அக்கரைப்பற்றுக்குச் செல்லுமாறு கட்டளையிட்டு மறைந்தார்கள். பின் நான் இந்தியா அதிராம் பட்டினத்திற்கு வந்து; அங்கிருந்து திருச்சி மார்க்கமாக இலங்கை வந்திறங்கினேன். என்னை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ஐதரூஸிய்யி மகாம் முஹீப்பீன்கள் அழைத்துச் சென்றார்கள். சில நாட்கள் அங்கு கழித்து, புத்தளம் நெய்னார் மரைக்காரின் வீட்டுக்கு வந்து அவருடை வாகனத்தில மட்டக்களப்பு ஊடாக அக்கரைப்பற்றை அடைந்தேன்” என்று தன் வருகை பற்றி விபரத்தை ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) தெளிவு செய்துள்ளார்கள். (50. தகவல் : எம்.ஐ. ஸவாஹிர் ஆசிரியர், அக்கரைப்பற்று.வை.சி.எம். ஆஸிக் – நீர்வழங்கல் – சாய்ந்தமருது).

ஆத்மீக கிலாபத்தை இங்கையில் நிறுவுதற்காக குத்புமார்களின் அறிவிப்பின் பேரிலேயே குத்புனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) இலங்கை வந்து சென்றுள்ளார்கள். புனித இந்நோக்கத்தை தவிர வேறு எத்தேவைக்காகவும் அவர்கள் இங்கு வரவில்லை என்பது அத்தாட்சிப்படுத்தப்பட்டுள்ளது. “நான் அக்கரைப்பற்றிற்கு வரவேண்டும் என ஒரு போதும் திட்டமிட்டவனல்லேன். ஷெய்குனாவின் பணிப்பின் பேரிலும், ஆளுமிடமும்காட்டப்பட்டதன் பேரிலுமே வந்துள்ளேன்” என அவர்கள் பொதுவாக கூறிவந்ததுண்டு. 

1978ல் ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) அக்கரைப்பற்றுக்கு வருகை தந்து இக்கிலாபத்தின் கலீபா (பகரமானவர் அல்லது பிரதிநிதி)விற்குரிய உத்தரவை ஷெய்குனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி)க்கு வழங்கியுள்ளார்கள். மேலும் ஒரு இலட்சம் திக்ருக்குரிய ‘இஜாஸத்’ உத்தரவையும் வழங்கியுள்ளார்கள். (51. ஆதாரம்: ஷெய்குனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி) யிடம் காணப்படும் இஜாஸாத்திற்குரிய அத்தாட்சிக் கடிதம் – 1979 டிசம்பர் 27).

ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) 1978 இந்தியா சென்று 1983ல் அக்கரைப்பற்றுக்கு வருகை கொடுத்து ஷெய்குமார்கள் தங்கள் கலீபாக்களுக்கு அணிவித்து கௌரவப்படுத்திய ‘ஹிர்க்கத்துல் இராதா’ எனும் ஆடையை தம் கலீபா அஷ்-ஷெய்க் அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி)க்கு அக்கரைப்பற்று, டீன்ஸ் வீதியிலுள்ள சஹாப் முதலாளியின் வீட்டில் அணிவித்து கௌரவப் படுத்தியுள்ளார்கள். இம்மஹாத்மீக மேதை இவ்வாண்டுதான் அக்கரைப்பற்று கிழக்கு வீதியில் அமைந்திருக்கும் ஹல்லாஜ் மகாமின் துவக்க ஓலைக் குடிசையையும் (1983) திறந்து வைத்து அவ் ஓலை குடிசை தைக்காவில் தொடராக 40 நாட்கள் தங்கியுள்ளார்கள். (52 தகவல்:  குத்புனா ஹல்லாஜுல் மன்ஸூர் நி.ம, பக்-10). 1983 ஏப்ரல் முதன் முதல் அதிக நாட்கள் அக்கரைப்பற்றில் தரித்து நின்ற காலப்பகுதியும் இதுதான்.

mahlarathul Quadiriya (2)சங்கைக்குரிய மௌலானா வாப்பாவினால் திறந்து வைக்கப்பட்ட ஒலைக்குடிசைக் தைக்கா

(கி.பி. 1981) Figure – 16

இங்கிருந்து ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) கலீபா முரீதீன், முஹீப்பீன்களோடு யாழ்ப்பாண ஐதரூஸ்ஸிய்யி மகாமுக்குச்சென்று அல்-ஹாஜ் ஏ.எஸ்.எம்.ஸாதிக் இற்கு திருமணம் செய்து சிலநாட்கள் அங்கு தங்கி கொழும்பு வழியாக இந்தியா பயணமானார்கள்.

காதிரிய்யி, ஜிஸ்திய்யி தரீக்காக்களுக்குரிய ஆணைகளை கலீபத்துல் ஹல்லாஜ் அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி)க்கு வழங்கி, இந்தியா சென்ற ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) 1984ல் ஜிஸ்திய்யி ஸில்ஸிலாவையும் 1986ல் காதிரிய்யி ஸில்ஸிலாவையும் தபாலில் அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி)க்கு அனுப்பி வைத்துள்ளார்கள். அவர்கள் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி  (றலி), குத்புல் மஜீத் நாகூர் மீரான் ஸாஹிப் (றலி), குத்புல் ஹிந்து காஜா முஹியீனுதீன் ஜிஷ்திய்யி அஜ்மீர் (றலி) ஆகியோர்களுடன் கலந்து ஆலோசித்த பின்பே இச் ஸில்ஸிலாவை கலீபத்துல் ஹல்லாஜிக்கு அனுப்பியுள்ளார்கள். (53. ஆதாரம் : 1986 மார்ச் 14, 1987 ஏப்ரல் 21 கடிதங்கள்)

முரீத், முஹீப்பீன்களின் இதயத்தில் ஆழமாக வேரூன்றிய தூய மனிதராக ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) இற்றை நாள் வரை இடம் பிடித்துள்ளார்கள். அவர்களின் வாழ்வியல் கோட்பாடுகளை மாற்றி, பரிசுத்த தீனுல் இஸ்லாமியச் சித்தாந்தங்களை போதித்தும் நடைமுறைப்படுத்தியும் அவ்வழிமுறையில் முரீத்தீன்களை நிலை நிறுத்தியும் அதன் இன்பங்களை நுகரச் செய்தும் அனுபவ வாயிலான இஸ்லாத்தின் தாக்கத்தை அவர்களில் ஏற்படுத்தி அவர்களோடு ஒன்றெனக் கலந்துள்ளார்கள் மெய்ஞான போதகர் ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி).

மகத்துவமிக்க ஓர் உயரிய மனிதராக பரிணமித்தவர்கள். சிருஷ்டித்த அல்லாஹூவிற்காகவும் வழி நடத்திய முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்காவும் தன்னையும் தன் வாழ்வையும் அர்ப்பணித்த ஒரு மனிதரை மேற்கோளாக தற்காலத்தில் காட்ட வேண்டும் என்றால், நிச்சயமாக அவர்கள் ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) கதஸஸிர்றஹுவாகத்தான் இருக்க முடியும். அவர்களிடம் காணப்பட்ட அருங்குணங்கள் எண்ணிறைந்த மானிடப் பண்புகள் சூழவிருந்தோரைப் பரிசுத்தப்படுத்த உதவின. பொறுமை, அன்பு, இரக்கம், உதவும் கரம் வீடு அற்றோருக்கு வீடு கட்டி வாழ்வு ஜொலிக்க உதவிய மானுஷிய விழுமியம் பந்நூறு மாணவர்கள் மார்க்க, லௌகீகக் கல்விக்கு உதவியாக துணை நின்ற விதம் இவை எல்லாவற்றிற்கு மேலாக இறையியல் சிந்தனை, தியானம் என்பவைகள் அவருக்கு ஒப்பாரும்மிக்காறுமில்லை என நிருபித்து நின்றன. (54.தகவல் : ஏ.எஸ்.எம். ஜெமீல் – உதவிக் கல்விப் பணிப்பாளர், அக்கரைப்பற்று).

1987ல் இலங்கை வந்த ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) அக்கரைப்பற்று மஹ்ழறத்துல் காதிரிய்யியா, ஹல்லாஜ் மகாமை திறந்து வைத்துள்ளார்கள். அப்போது மனாரா, குப்பா கட்டப்படாத தைக்காவாக அது விளங்கியுள்ளது. புதிதாகக் கட்டப்பட்ட தைக்காவில் அஷ்-ஷெய்க் அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி)க்கு பல லௌகீக, ஆத்மீக உத்தரவுகளையும் தரீக்கத்துல் றிபாஇய்யின் இஜாஸத்தையும், விஷக்கல் ஓதிவைப்பதற்கான உத்தரவுகளையும் ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) வழங்கியுள்ளார்கள். அவை ஸெய்யிதினா அஹமதுல் கபீர் றிபாஇய்யி (றலி) ன் நேரடி வழி வந்த உத்தரவுகள்.

சங்கைக்குரிய அல்-ஹாஜ், அஷ்-ஷெய்க், அஸ்-ஸெய்யித், மௌலானா முஹம்மதுக் கோயா தங்கள் காதிரிய்யி, ஜிஸ்திய்யி, பீ.ஏ.எஸ்.எம்.கே அவர்கள் அக்கரைப்பற்றிற்கு 1953ம் ஆண்டு தொடக்கம் வருகை தந்ததன் நிமிர்த்தம் அவர்களால் காதிரிய்யி தரீக்காவில் நல்வழிப்படுத்தப்பட்ட முரீத்தீன்களால் ‘மஹ்ழறத்துல் காதிரிய்யா’ எனும் பெயர் தாங்கிய ஒரு தைக்கா உதயமாகியுள்ளது…(55. தகவல் : முஸ்லிம் டைம்ஸ் – 1981 ஒக்டோபர் 1)

கலீபாவைத் தெரிதல்

1998 ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) காதிரிய்யி ஸில்ஸிலாவில் 43வது ஷெய்க்காக அஷ்-ஷெய்க் அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி)யை பதிவு செய்துள்ளார்கள். இந்நிகழ்வின் போதும் ‘ஹிர்க்கா’ அணிவித்து கௌரவப்படுத்தியுள்ளார்கள். இந்நிகழ்வை தாறுல் இஸ்லாம், 308, பழைய சோனகத் தெரு, கொழும்பு என்ற தமது மகாமிலே ஒழுங்கு செய்திருந்தார்கள். நாவலப்பிட்டி, கண்டி, கெலிஓயா, புத்தளம், கொழும்பு, நீர் கொழும்பு, யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது, கல்முனை போன்ற பிரதேசங்களிலிருந்து வருகை தந்தோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.( 58. தகவல் : எம்ஏ. அப்துஸ் ஸலாம் – ஆசிரியர், அக்கரைப்பற்று).

மேலும் சங்கைக்குரிய ஷெய்குனா அவர்கள் 2004.12.25 ஆம் திகதி (துல்கஃதா பிறை 12) அன்று தனது ஏக கலீபாவான இலங்கையின் அக்கரைப்பற்றை பிறப்பிடமாகக் கொண்ட அல்-குத்ப், அஸ்-ஸெய்யித் அப்துஸ் ஸமத் ஆலிம் அப்துல் மஜீத் (மக்கத்தார்) அவர்களுக்கு தனது சகல பொறுப்புகளையும் கடமைகளையும் பன்னிரண்டு சாட்சிகள் (01. அல்-குத்ப், அஸ்-ஸெய்யித், அஷ்-ஷெய்க் அப்துஸ்ஸமத் ஆலிம் அப்துல் மஜீத் (மக்கத்தார்) அக்கரைப்பற்று -02, 02. அல்-ஹாஜ் ஏ.எஸ்.எம். ஸாதிக் – ஜே.பி, கொழும்பு,03. எம்.ஏ.எம். கலீல் – அதிபர், அக்கரைப்பற்று, 04. எம்.ஏ.எம். நவாஸ்- ஏ.எஸ்.பி, கொழும்பு, 05. ஏ. ஹபீபுர் றஹுமான், தஞ்சாவூர், 06.அஹம்மது மன்ஸூர், தஞ்சாவூர், 07. முஹம்மது ஹனீப், தஞ்சாவூர், 08. பீ.ஏ. பூக்கோயா தங்கள், அந்ரோத்தீவு, 09. டீ.ரி. அஹமது பாட்ஷா, தஞ்சாவூர், 10. எம். மிஹ்ளார், புத்தளம், 11. ஏ.சீ.எம். நிஸார் – வை.சி.எம். ஆஷிக், சாய்ந்தமருது, 12, யாஸீர், அக்கரைப்பற்று ஆகியவர்களின் முன்னிலையிலும் தனது குடும்பத்தார் மற்றும் உலமாக்கள் முன்னிலையிலும் இந்தியாவின் கோழிக்கோடு, கொடிவல்லி றோட்டில் பதிமங்களம் எனுமிடத்தில் அமைந்துள்ள மருமகள் வீட்டில்(பஸால் தங்கள் (ஷெய்குனாவின் மருமகளின் கணவன்))வைத்து ஒப்படைத்தார்கள்.( 77.ஆதாரம் : வீரகேசரி – 2005)

இந்நிகழ்வு ஒரு குத்பின் மறைவில் இன்னுமொரு குத்பின் வெளிப்படுகையை காட்ட முனைவதினூடாக ‘குத்ப்’ என்று சொல்லப்படுகின்றவர் தொடராக உலகில் இருந்து கொண்டே இருப்பர் என்பது பெறப்படுகின்றது.

பொக்கிஷங்கள் முத்திரையிடப்படுவதன் மூலம் பாதுகாக்கப்படுவது போல இந்த உலகத்தை கலீபாவின் மூலமாக அல்லாஹூதஆலா பாதுகாவல் செய்து வருகிறான். அவர்தான் இந்த உலகத்திற்கு குத்பாக இருக்கிறார். ஆகவே, உலகில் ஒவ்வொரு காலத்திற்கும் ஒரு குத்புக்கு மேல் அதிகம் பேர் இருக்க மாட்டார்கள். (76. ஆதாரம் : தப்ஸீறுல் ஹமீத் பீ தப்ஸீரில் குர்ஆன் மஜீத், பாகம் – 1, பக்கம் – 83)

ஷெய்குனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி)க்கு கிலாபத் வழங்கும் வைபவத்தில் 300இற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள். நூறுல் இர்பான் பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரையாளர்கள், அதிபர், ஸக்காபஃத்துஸ்த்துஸ் ஸுன்னிய்யா அறபுக் கலாசாலை மாணவர்கள்; விரிவுரையாளர்கள்; அதிபர், அந்ரோத்வாசிகள், குடும்பத்தார்கள் போன்றோர்கள் இவ்வைபத்தில் பங்குபற்றியுள்ளனர்.

ஒரு நீதிபதியும் சட்டத்தரணியும் இதில் இடம் பெற்றுள்ளனர். கிலாபத் வழங்கிய பிற்பாடு ஒரு விருந்து உபசாரமும் நடைபெற்றுள்ளது. மௌலானா வாப்பா இவ்விருந்துபசாரத்திற்கு வெள்ளைக் கடா ஆடு அறுக்கப்பட வேண்டுமெனவும் கூறியுள்ளார்கள். ( 78. தகவல் : ஏ.சீ.எம். நிஸார் (சீசீ) ஆர்.டி.ஏ. சாய்ந்தமருது.)

முன்னுள்ள நான்கு ஷெய்க்மார்களின் ஆட்சிக்காலம் நூறு வருடங்களாகும். இந்நூற்றாண்டு முடிவுறும் இறுதி நாளிரவுதான் ஷெய்குனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி)க்கு கிலாபத் கொடுக்கப்பட்டுள்ளது. குத்புனா, ஷெய்க் அப்துல் காதிர் ஹைதராபாத்தி மஜ்தூபி (றலி), குத்புனா, ஷெய்க் முஹம்மது ஸூஃபி கூத்தாரி (றலி), குத்புனா, ஷெய்க் முஹம்மது ஜலாலுத்தீன் அந்ரோத்தி (றலி), குத்புனா, ஷெய்க் ஹல்லாஜுல் மன்ஸூர் அந்ரோத்தி (றலி) ஆகிய நான்கு ஷெய்க்மார்களின் கிலாபத் காலப் பகுதி நூறு வருடங்களாகும்.

கலீபத்துல் ஹல்லாஜுக்கு கிலாபத் கொடுத்ததன் பின் ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) உரையாற்றியுள்ளார்கள். எதிரே நடைபெறப்போகும் நிகழ்வுகளையும், ஷெய்குனா அப்துல் மஜீத் மக்கத்தார்(றலி)க்கு, தான் ஏன் கிலாபத் வழங்கினேன் என்பது பற்றியும் இனிவருங் காலத்தில் எனக்குப் பகரமாக நிற்கும் ஷெய்குனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி)யைப் பின்பற்றி நடக்குமாறு வேண்டி, கலீபாவை நோக்கி “மாமா அப்துல் வாஹித் மௌலானாவைப் பற்றி பேசுமாறும் அன்னவர்களை மிக விரைவில் தான் சந்திப்பேன்” எனவும் கூறி ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) உரையை நிறைவு செய்தார்கள்.

எனக்கு ஷெய்குனா முஹம்மது ஜலாலுத்தீன் (றலி) கிலாபத்தை இதே நேரத்தில் தந்தார்கள். அன்றிரவுக் காலை அந்ரோத் 4 அடி உயரமான நீரால் மூழ்கியது. இன்றிரவோடு நூறு வருடங்கள் முடிவுற்றிருப்பதனால் இக்கிலாபத் மாற்றத்தினால் உலகின் பெரும்பகுதியை நீர் தொடும். மஜீத்தின் கிலாபத் காலப்பகுதியில் உலகு பாரிய அளவு மாறும். காலநிலை, பௌதீகம், அரசியல், பொருளியல், கலாசாரம் போன்ற எல்லாத் துறைகளிலும் மாற்றங்கள் நிகழும் என ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) கூறியுள்ளார்கள். (79. தகவல் : எம்.ஏ.எம்.நவாஸ் – உதவிப் பொலிஸ் அத்யட்சகர், கொழும்பு.)

குத்புனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) குடும்பத்தார்களை நோக்கி , நீங்கள் பொருளுக்கும் பணத்திற்கு என்னிடம் வந்தீர்கள், நீங்கள் எதிர்பார்த்ததை விட பல மடங்கு உங்களுக்குப் பணம் தந்திருக்கின்றேன். மத்ரஸா மாணவர்கள் கிதாப்களுக்காகவும் உடுப்பு, காசுக்காவும் வந்தீர்கள் அதை நான் நிறைவேற்றியுள்ளேன். ‘அழாய் பழாய்’ தீர்ப்பதற்காகவும் நோய்கள் தீர்ப்பதற்காகவும் தாங்கள் வந்தீர்கள் அதையும் நிறைவேற்றியுள்ளேன். எனக்காக வந்தவர் மஜீது மட்டுந்தான். மற்றவர்கள் உங்கள் தேவைக்காக என்னிடம் வந்தீர்கள். மஜீதுக்கு கடந்த 28 வருடங்களாக ஏசி இருக்கின்றேன். ஒரு கனம் கூட மஜீது முகம் சுளிக்கவில்லை. அவன் அப்படி ஏச்சு வாங்கக்கூடியவனுமல்ல, அவனுக்கு ஏசியது போன்று உங்க யாருக்காவது அரை மணி நேரம் ஏசினா, நின்ற இடத்தை விட்டு போயிடுரீங்க, அதையெல்லாம்தாண்டி என்னோடு எனக்காக மட்டும் வந்தவன் மஜீது மட்டுந்தான். கடந்த ஏழு வருடங்களாக துன்பத்திற்கும் ஊண் உறக்கமின்றி கஷ்டத்திக்குள்ளும் இருந்து வந்திருக்கன், கிலாபத் ஏத்துக் கொள் என்று மஜீதிடம் பலமுறை கூறி வந்துள்ளேன். ஆனா மஜீது மறுத்து வந்திருக்கு “அதற்குரிய அந்தஸ்துடைய ஒருவருக்கு ஷெய்க் கிலாபத் வழங்க உத்தேசித்தால் அத்தகைமையுடையவர் கிலாபத்தை ஏற்க மறுத்தால் ஷெய்க்குரிய சொந்தமான அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்நபருக்கு கிலாபத்தை வழங்கலாம்” என கௌதுனா முஹ்யித்தீன் ஜீலானி (றலி) கூறியுள்ளதை மேற்கோள் காட்டி எனக்கு சொந்தமான சக்தியைப் பயன்படுத்தி மஜீதுக்கு பைப்போஸாக கிலாபத் வழங்கியுள்ளேன் என்றும் அவர்கள் விளக்கினார்கள். (80. தகவல் :  அல்-ஹாஜ் ஏ.எஸ்.எம். ஸாதிக் – அகில இலங்கை சமாதான நீதிவான், கொழும்பு ).

1998லிருந்து தன்னை (கலீபத்துல் ஹல்லாஜ்) கிலாபத் பொறுப்பை ஏற்குமாறு வாப்பா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) என்னை பல தடவை வேண்டி வந்துள்ளார்கள். அதை மறுத்து தங்கள் மருமகன் பூக்கோயாவிற்கோ அல்லது வேறு எவருக்கோ கிலாபத்தைக் கொடுக்குமாறு பலமுறை நான் வாப்பாவிடம் கூறிவந்துள்ளேன் என இவர்கள் பல சந்தர்ப்பங்களில் விளக்கியுள்ளார்கள். (81. தகவல் : குத்புனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி)).

ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) தம் கலீபாவை தேர்வு செய்தவிதத்திலும் கிலாபத் வழங்கி கௌரவப் படுத்திய முறையிலும் அவர்கள் பரிசுத்த, தூய மனிதர் என்பதை அடையாளம் கண்டுகொள்ளலாம். கிலாபத்தை தமக்கு தருமாறு குடும்பத்தாரும், தம் நெருங்கியவர்களும் அதற்காகப் பாடுபட்ட போதும் அவர்கள் எவருக்கும் கொடுக்காமல் உரிய தகுதி கொண்ட இலங்கை ஒருவருக்குக் கொடுத்திருப்பதிலிருந்து மெய்யானவரும் நேர்மை நீதமுள்ள உயர்ந்த காமில் ஷெய்க் என்பதையும் எமக்கு துலாம்பரப் படுத்தியுள்ளார்கள். அது மாத்திமன்றி தமக்கு உரித்தான சொத்துக்களையும் தம் கலீபாவிற்கு எழுதிக் கொடுத்துள்ளார்கள். சிறியரகப்போக்குவரத்துக் கப்பல், தும்புத் தொழிற்சாலை, தென்னந்தோப்பு, வீடு, படையான் பள்ளி ஆகிய மௌலானா வாப்பாவின் அந்ரோத் சொத்துக்களும் அவர்களின் பெயரிலுள்ள மற்றைய நாடுகளிலுள்ள மகாம்கள், சொத்துக்களையும் மக்கத்தார் வாப்பாவின் பெயரில் மௌலானா வாப்பா சட்டப்படி எழுதிக்கொடுத்துள்ளார்கள். ( 82. தகவல் :  எம்.ஏ.எம். காலித் – அதிபர், அக்கரைப்பற்று).

ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி)யை பற்றி தப்பு தவறான கருத்துக்களை சங்கைக்குரிய அஷ்-ஷெய்க் அப்துல் வாஹித் மௌலானா யமானி (றலி)யிடம் சிலர் முன் வைத்தனர். அதன் உண்மை நிலையை அறிவதற்காக மஹ்ழறத்துல் காதிரிய்யா தைக்காவுக்கு அவர்கள் சென்று ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) சந்தித்த பிற்பாடு அப்பெரியார் உயர்ந்த படித்தரத்தை உடைய இறைமுடுகுதல் எய்தி உண்மையான புனிதரும் தூய அஹ்லுல் பைத்தினரும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

பரிசுத்த அஹ்லுல் பைத் நமது குடும்பப் பாரம்பரியத்தில் உதித்த நேர்வழி காட்டக்கூடிய உண்மையுள்ள ஒரு முறப்பி ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி). அவர்களைத் தாங்கள் பின்பற்றுமாறு தனது மருமகன் அஷ்-ஷெய்க் அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி)க்கு பணித்துள்ளார்கள். ( 56. தகவல்: அல்-குத்ப் அப்துல் வாஹித் மௌலானா யமானி (றலி) – 1983)

1987ல் உத்தரவுகளை வழங்கிச் சென்ற ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) 1994 அஷ்-ஷெய்க் அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி)ன் மகள் அஸ்-ஸெய்யித் பாத்திமத்துல் ஸஹ்ரா (வலிதா உம்மா)வின் திருமணத்தை நடத்தி வைப்பதற்காக அக்கரைப்பற்றுக்கு வருகையளித்து தந்தையாகவிருந்து அத்திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்கள்.

சேவைகள்

மேலும், இலங்கையில் அக்கோமான் பலருக்கு திருமணம் செய்து வைத்தும் பலரின் திருமணத்திற்கு தலைமையும் தாங்கியுமுள்ளார்கள். பலருக்கு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து திருமணம் செய்து வைத்துள்ளார்கள். நூற்றுக்கணக்கான ஏழைகளின் வாழ்வை நிறைவேற்றுவதற்காக தாமே முன்நின்று திருமண வாழ்வுக்கு தேவையான சகல செலவுகளையும் செய்துள்ளார்கள். இலங்கை,இந்தியாவில் அம்மஹானின் தர்ம சிந்தையால் பலருக்கு வாழ்வளிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு முரீதீன் முஹீப்பீன்களுக்கும் திருமணம் நடத்தி வைத்துள்ளார்கள். எம்.ஏ. காலித் -ஸித்தி ஜனூஸா (1994), எம்.ஏ. அப்துல்வாஹித் – ஸாஹினா (1997), எம்.ஏ.சி.எம். ஜுஹைஸ் -தாஜுன் நிஸா(2000), ஏ.எம். ஜெஸீம் – ஹாபீதா (2000), சுபைத்தீன் – உம்முசல்மா (2000), அஸ்-ஸெய்யித் ஏ.எம். திஸ்ஸிமாலைன் – நஸ்ரி (2003), முதலான சோடிகளுக்கு ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸுர் (றலி) திருமணம் செய்து வைத்திருப்பதை மேற்கோளாகக் கொள்ளலாம்.

I have learnt that the noble quality of compassion and selfless service displayed by His Holiness inspired the Muslim community to be of service to others. Being born into the nobility Hallajul Mansoor immersed himself in the Thareeq tradition at the young age of twenty years, imbibing the teachings of his Guru, Al-Quthb, As-sheikh, Asseyed Mohamed Jalaludeen Al-Hafil. (57. தகவல் :  குத்புனா ஹல்லாஜுல் மன்ஸூர் நி.ம, 2005, Former President Chandrika Bandara Nayake Kumarathunge)

1996,1997-1998, 1999-2000, 2001, 2002, 2004 ஆகிய ஆண்டுகளிலும் ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்கள். இதற்கு முந்திய காலப்பகுதியில் நான்கு ஐந்து வருடங்களின் பின் இலங்கை வருகை தந்த ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி)ன் பெயரைப் குறுகிய கால இடைவெளியில் இக்கால பகுதியில் வந்து சென்றுள்ளார்கள்.

This mean’s disciple and future successor, a local man from Akkaraipattu named Makkathar Majeed, repeatedly told me the miraculous story of how Moulana Vappa recognized Majeed as his murid how he cured his nearly fatal kidney disease, and how he eventually  designated his as him successor. Because of conflicting travel schedules I was never able to meet Maulana vaapa in person last summer, but at least I spoke to him twice by cell phone, which was thought to have been a great honor ( 60. தகவல் DennisB McGilvray – Colorado)

ஆத்மீகத்தில் மாத்திரமன்றி சமூக, அரசியல், கலாசார, பாரம்பரிய பரப்புக்களிலும் ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர்(றலி)ன் பணிகள் வியாபித்து நின்றுள்ளன. இவர்கள் சர்வதேச நாடுகளிலும் பலசேவைகளையாற்றியுள்ளார்கள். இலங்கை, இந்தியா, மலேஷியா, சிங்கப்பூர் முதலான நாடுகளிலும் நாடு தாண்டிய பணிகளைச் செய்துள்ளார்கள். 2002ல் முந்நாள் கௌரவப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா, 2004ல் மேன்மை தங்கிய முந்நாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆகிய தலைவர்களோடு இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி கலந்துரையாடியுள்ளார்கள்.( 61 தகவல்:  இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வும் முஸ்லிம்களும், – xxx)

Figure 21

சங்கைக்குரிய குத்புல் அக்தாப் ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) முன்னாள் கௌரவப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவை அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடியபோது (கி.பி. 2002) Figure – 21

சென்ற 2002.10.17ம் திகதி அன்று இந்தியாவின் அந்ரோத்தீவிலிருந்து தன் ஆத்மீகப் பணியை மேற்கொள்ள இலங்கை வந்துள்ள அஷ்-ஷெய்க் அஸ்-ஸெய்யித் ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) அவர்கள் நம் தாய்த் திரு நாட்டின் விடுதலை விமோசனம் சாந்தி சமாதான முன்னெடுப்புக்கள் சம்மந்தமாக ரணில் விக்ரமசிங்காவை கொள்கை திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சின் ஆலோசகர் ஸெய்யித் அலி ஸாஹிர் மௌலானாவின் தலைமையில் பிரதமரின் உத்தியோகப் பூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையில் சந்தித்து சுமார் 45 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவ்வமையம் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் சமாதான முன்னெடுப்புக்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டது. இக்குழுவில் மௌலானாவின் கலீபா சங்கைக்குரிய அஷ்-ஷெய்க் மக்கத்தார் ஏ மஜீத் (றலி) பிரபல தொழில் அதிபர், அல்-ஹாஜ், ஏ.எஸ்.எம். ஸாதிக் முதலானவர்களும் பங்குபற்றினர்.  (62. ஆதாரம் :தினகரன் – 2002).

இலங்கை அரசியலின் பாதையை திசை திருப்பி, வரலாறு படைத்தவர்கள் ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி). இலங்கையர் அனைவரும் பேதங்களைக் கடந்து சமாதானமாக வாழ வேண்டும் என்பதில் பேராவாக் கொண்டவர்களும் கூட.

ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) பல புதிய பாரம்பரியங்களையும் இலங்கையில் தோற்று வித்துள்ளார்க்ள. பேச்சு மொழி வழக்கில் பல சொற்களும் சொற்றொடர்களையும் அறிமுகப்படுத்தியுமுள்ளார்கள். இவை நம் பிரதேச பேச்சு வழக்கை சார்ந்த மொழி தொடர்களல்ல. அவர்களின் முரீத்தீன்கள். முஹீப்பீன்கள் பேசுகின்ற போது இம்மொழி வழக்கு வெளிப்பட்டு நின்கின்றன. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா? உங்க வீட்டிற்கு வந்தா நீங்க என்னதருவிங்க, எங்க வீட்டிற்கு வந்த நீங்க என்ன கொண்டு வருவீங்க. இது வாஸ்தவம் போன்றவைகளும் உயர்திணையை அஃறிணைப்படுத்தி பேசும் (நான் சொல்து) வழக்கத்தையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இப்பேச்சு மொழி மரபு மலையாளத்திலிருந்து ஷெய்குனா ஹல்லாஜ் (றலி) வழியாக இங்கு வந்துள்ளது.

பாரம்பரியங்களை பாதுகாப்பதில் அதிக கரிசனை காட்டி இம்மஹான் தரீக்கா பாரம்பரியத்திலும் தவறான பல செயல்முறைகளை அகற்றி, அதன் யதார்த்தத்தில் உள்ளவைகளையும் அறிமுகம் செய்துள்ளார்கள். கிலாபத் வழிமுறைக்குரிய காதிரிய்யி, ஜிஸ்திய்யி, ஸில்ஸிலாக்கள், அமானுஸ்ஸாலிக்கீன், ஜலாலியா மௌலித், ஸாலிக்கீன், அஸ்ராருல் முஹக்கிகீன், முரீத் முனாஜத் முதலானவைகளை இவர்கள் இலங்கைக்குக்கொணர்ந்துள்ளார்கள். இந்தியாவிலும்ஷெய்குனா ஹல்லாஜ் (றலி) பல புதிய பாரம்பரியங்களைக் கொணர்ந்துள்ளார்கள்.

அந்ரோத்தில் அக்கரைப்பற்றில் ஸமாதி கொண்டிருக்கும் அல்-குத்ப் அப்துஸ்ஸமத் சின்ன மௌலானா (றலி), காத்தான் குடியில் ஸியாரங் கொண்டுள்ள அல்-குத்ப் அப்துல் வஹாப் மௌலானா (றலி), சாய்ந்தமருதில் மக்பராக் கொண்டிருக்கும் அல்-குத்ப் அப்துல் வாஹித் மௌலானா (றலி) ஆகியோருக்கு நாள்தோறும் அஸருக்குப்பிற்பாடு யாஸீன் ஓதி வருடவிறுதியில் கந்தூரி கொடுத்து வரும் வழமை அவ்விறை நேயரால் உருவாக்கப்பட்டது. அக்கந்தூரி ஷெய்குனா ஹல்லாஜ் (றலி)க்கு, அல்-குத்ப் அப்துல் வாஹித் மௌலானாவின் கிலாபத் கிடைத்ததை உறுதிப்படுத்துகின்றது. ஆண்டுதோறும் ஷெய்குனா முஹம்மது ஜலாலுத்தீன் (றலி)க்கு கந்தூரி கொடுத்து வரும் நடைமுறையை இலங்கையில் அமுல்படுத்தியவர்கள் ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி)யே ஆவார்கள். இப்பெரியார் பல கந்தூரிக்கு தலைமையும் தாங்கியுள்ளார்கள். குறிப்பாக 2000, 2001,2002, 2004 ஆகிய ஆண்டுக் கந்தூரிகளை குறிப்பிடலாம்.(63.ஆதாரம் :  ஹல்லாஜ் மகாம், கந்தூரி பிரசுரங்கள், அக்கரைப்பற்று).

(கி.பி. 2004 செப்டம்பர்) Figure – 22

சங்கைக்குரிய குத்புல் அக்தாப் ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) குத்புல் அக்தாப் முஹம்மது ஜலாலுத்தீன் (றலி)ன் 2004 கந்தூரியின் போது இறுதியாக தலைமை தாங்கி கலந்து கொண்டமை.

இந்த ஆத்மீகப் பேரரசரின் வருகை, சேவை, ஞாபகார்த்தங்கள் போன்றவைகளை நினைவு கூறும் தடயங்கள் அக்கரைப்பற்றிலும் ஏனைய பிரதேசங்களிலும் ஏராளம் காணப்படுகின்றன. ஹல்லாஜ் மகாம், ஹல்லாஜ் வீதி, ஹல்லாஜ் நகர், ஸாவியத்துல் ஹல்லாஜ், ஹல்லாஜ் தகவல் வள நிலையம். ஹல்லாஜ் மன்றம், ஹல்லாஜ் மெரைன்பாம், குத்புனா ஹல்லாஜுல் மன்ஸூர் நினைவு மலர், ஹல்லாஜின் போதனைகள், ஹல்லாஜ் தகவல் வள மையம் என்பவைகள் ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி)ன் சரித்திர சுவடிகளாகும்.

His multifarious contribution saw very wide horizons. His great prowess in every aspect of human activity was almost congenital. It has to be only divine providence and spiritual up lifting that made for the continued success of his versatile approach in any field of activity. In the execution of any building project, his was the most penetrating engineering and architectural substance, in mundane administrative issue, he had the highest reach of human resource management and in settlement of the most concerned dispute his verdict reached the acme of justice and equity that the most trained judges would envy ( 64.தகவல்- மே.ப, நினைவு மலர் – 2005, பக்-07;அஸ்-ஸெய்யித் எம்.எச்.ஏ. ஸமத் (அமைச்சர் அதாஉல்லாவின் அந்தரங்கச் செயலர்)

எழுத்து துறைக்கும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சில பணிகளை ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) செய்துள்ளார்கள். முரீத் முனாஜத், அஃகாமுல்முஸ்லிமீன், அஸ்ராருல் கன்ஸிபைஅத் றிழ்வான், ஜலாலியா மௌலித், பாத்திமா பைத் ஆகிய நூற்களை எழுதியுள்ளார்கள். ‘பைஅத் றிழ்வான் பொக்கிஷ இரகசியங்கள்’ எனும் நூல் தமிழ் மொழியில் 2001ம் ஆண்டு கொழும்பு, ஸ்ரீ ஜெயவர்த்தன றிசப்ஷன் ஹோலில் வெகுவிமர்சையாக வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் வெளியீட்டு விழாவில் கௌரவ அஸ்-ஸெய்யித் அலவி மௌலானா, கௌரவ அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா போன்றோர்களும் கலந்து கொண்டுள்ளார்கள். (65.தகவல் : சுடர் ஒளி – 2001)

இந்நூல் நேர்வழி நாடும் முரீத் கவனிக்க வேண்டிய அம்சங்களும் அவர்களிடம் காணப்படும் பண்புகளும் ஒரு காமில் ஷெய்க்குக்கு இருக்க வேண்டிய சிறப்பியல்புகளையும் பற்றி விரிவாகப்பேசுகின்றது.

எனது உயிரிலும் மேலான குத்புல் அக்தாப், ஷெய்குனா ஸெய்யிதினா ஹல்லாஜுல் மன்ஸூர் காதிரிய்யி, ஜிஸ்திய்யி றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி அவர்களால் இதுகாலவரை யாராலும் தெளிவாகக் கூறப்படாத தரீக்கா சம்பந்தமான நடைமுறைகள், உண்மைகள், கருத்துக்கள் என்பன இந்நூலில் எழுதப்பட்டுள்ளமை அதன் வழி நடப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். நாயிபு றஸூல் என முத்திரையிடப்பட்ட ஹகீக்கியான முர்ஷித்தீன் தன்மைகள், நிலைமைகள் என்பன மிகத் தெளிவாக இந்நூலில் கூறப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கது. தரீக்கா வழியில் நடப்பவர்கள் பித்அத், நஸீஹத், இஜாஸத், பைஅத், ஷரீஅத்தின் ஏவல், விலக்கல் தரீக்கா, ஹகீக்கத், மஃரிபத் என்பன கட்டம் போட்டு ஒரே பார்வையில் விளக்கப்பட்டுள்ளமை இந்நூலில் ஒரு தனிச் சிறப்பாகும். (66. தகவல் பைஅத் றிழ்வான் பொக்கிஷ இரகசியங்கள் – ஆசிச்செய்தி, அல்-குத்ப்அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி) ).

ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி)யை நோக்கி முரீதீன்கள், முஹீப்பீன்கள் தொடர்பு ஏற்படுவதற்கு பல காரணிகள் அடிப்படையாக அமைந்துள்ளன. தேவைகள், நோய் நொடிகளின் பொருட்டும் அறிவிப்பு, தரிசனங்களின் பெயரிலும் கனவுகள் மூலமாக அவர்களுடன் தொடர்புப்பட்டுள்ளனர். தான் மௌலானா வாப்பாவோடு தொடர்புபட அடிப்படையாக அமைந்த காரணம் பற்றி மௌலவி ஏஆர். சபா முஹம்மத் (நஜாஹி, காதிரிய்யி) பின்வருமாறு விளக்கினார்.

ஒரு நாள் இரவு தான் தூங்கிக் கொண்டிருக்கும் போது படிவழியாக தானும் நண்பரும் ஏறிக் கொண்டு மேல் செல்கின்ற போது குத்புமார்கள் கூடி இருக்கின்ற அச்சபையில் ஒரு பெரியார் தலைமை தாங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அவர் என்னை கண்டதும் அச்சபையில் அமருமாறு வேண்டினார்கள். என ஒரு கனவு கண்டு தன் தாயிடம் கூறினேன். பின் நோன்பு திறப்பதற்காக தான் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு செல்ல நேரிட்டு அந் நண்பரின் ‘Album’ தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, தான் கனவில் கண்ட அச்சபைக்குத் தலைமை தாங்கிய பெரியாரின் புகைப்படத்தை கண்டு ஆச்சரியத்தோடு அவர்கள் பற்றிய விபரத்தை நண்பரிடம் விசாரித்தேன். அப்பெரியார் இந்தியாவிலிருந்து அக்கரைப்பற்றிக்கு வந்து செல்பவர்கள் என்று நண்பன் கூறினார். பின் அவர்களை நேரடியாக சந்திப்பதற்காக அவர்கள் வரும்வரைக் காத்திருந்தேன். அவர்கள் அக்கரைப்பற்றுக்கு வருகை தந்திருப்பதை கேள்விப்பட்டு உடன் 1999ல் சந்திக்க வந்தனிமிர்தமே ஷெய்குனா ஹல்லாஜ் வாப்பாவோடு தொடர்புப்பட்டதாகத் தெரிவித்தார். ( 67. தகவல் : ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி)ன் 4வது ஞாபகார்த்த சொற்பொழிவில் – மௌலவி ஏ.ஆர் சபா முஹம்மத், கல்முனை, 2009 டிசம்பர் 10)

ஷெய்குனா ஹல்லாஜ் (றலி) வபாத்தாகிய பிற்பாடும் அவர்களைப் பலர் நேரடியாகவும், கனவிலும் தரிசித்துள்ளார்கள். ஹுஸைன் என்பவர் 2009ல் ஹஜ் கடமைக்காக மக்கா சென்றுள்ளார். செல்வதற்கு  சில தினங்களுக்கு முன் நோய் வாய்ப்பட்டு வைத்தியசாலையில் இருந்த நிலையில்தான் மக்கா சென்ற அவருக்கு எழும்பி நடமாட முடியாத அளவு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தன்னை தன் நண்பர் கஃபத்துல்லாஹ்விற்கு செல்ல அழைத்த போது தன்னால் வரமுடியாது எனக்கூறி அறையில் தூங்கிக் கொண்டிருக்கும் போது ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) கனவில் தோன்றி ஓதிப்பார்த்து விட்டு தன்னை எழும்புமாறு கூறிச் சென்றார். விழித்து பார்த்த போது உடலில் வியர்வை பொலபொல வென கொட்டியது. தான் நோயிலிருந்து சுகம் கண்டு ஹஜ் கடமைகளை முடித்ததாகக்கூறினார். (68. தகவல் :  எம்.ஐ.ஹுசைன் ஆசிரியர், அக்கரைப்பற்று)

அக்கரைப்பற்றிலிருந்து இந்தியா செல்கின்ற போதும் மார்க்க உபந்நியாஷங்கள் முடிந்ததன் பிற்பாடும் ‘துஆ’ இரந்துவது ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி)ன் வழமையாக இருந்துள்ளது.

துஆப் பிராத்தனையின் பிற்பகுதியில் ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி), நாயனே! றஹுமானே! மஹ்ழறத்துல் காதிரிய்யியாவை கேந்திர நிலையமாக மாற்றித்தா! நாயனே! றஹுமானே! அக்கரைப்பத்தை தலைப்பட்டினமாக்கிதா! நாயனே! றஹுமானே! எனது ஒவ்வொரு பிள்ளைகளும் (முரீத், முஹீப்) சோதனைகள் எல்லாவற்றிலும் (F)பெஸ் கிளாஸில் (P)பாஸ் பண்ண அருள் செய் நாயனே!. நாயனே! றஹுமானே! சீதனக் கொடுமையால் பல ஏழைக் கொமர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது யா அல்லாஹ்! அவர்களை கரை ஏத்தித்தந்தருள் றஹுமானே! கென்சர், பிறேசர், காட்டெடெக் போன்ற மாராயமான வியாதிகளை விட்டும் என் பிள்ளைகளை காப்பத்தியருள் நாயனே! என்பன போன்றவைகளை அவர்கள் தொடராகப் பிரார்த்தித்து வந்தார்கள்.

ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) இந்தியா சென்றாலும் முரீதீன்கள் முஹீப்பீன்களோடு கடிதத்தின் வாயிலாகத் தொடர்புபட்டிருந்தார்கள். அக்கடிதங்களை ஆங்கிலம், தமிழ் மொழியில் எழுதியுள்ளார்கள். பெரும்பாலான கடிதங்கள் ஆங்கில மொழில் எழுதப்பட்பட்டுள்ளன. அக்கடிதங்கள் அந்ரோத், தஞ்சாவூர், திருச்சி, கொச்சின், பதிமங்களம், சிங்கப்பூர் போன்ற இடங்களில் வைத்து எழுதப்பட்டுள்ளன. அக்கடிதங்கள் அனைத்தும் இதுகாலம்வரை முரீதீன்கள், முஹீப்பீன்களிடம் பாதுகாப்பாக உள்ளன. தம் கலீபாவிற்கு இருநூறுக்கு மேற்பட்ட கடிதங்களை ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) வரைந்துள்ளார்கள்.

அஷ்-ஷெய்க் அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி)க்கு பாதின், லாஹிர் இரண்டுக்குமான முத்தலக்கான கிலாபத்தையையே ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) வழங்கியுள்ளார்கள். கலீபா அவர்களுக்கு ‘முத்தலக்குன் கிலாபத்தை’ 1982 ல் வழங்கியுள்ளதை ஷெய்குனா ஹல்லாஜ் (றலி) வரைந்த கடிதம் உணர்த்துகின்றது. ஆத்மீகம், லௌகீகம் இரண்டிற்குமுரிய கிலாபத்தை கலீபத்துல் ஹல்லாஜ் அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி)க்கு கொடுக்கப்பட்டுள்ளதை ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி)ன் ‘அஸ்ராறுல் கன்ஸி பைஅத் றிழ்வான்’ எனும் நூலின் முகப்பட்டையில் பொறித்துள்ளார்கள்.

 Bai_Athur_Rilwan_Pokkisha_Irakashiyangal_front

(முன்னட்டை :பைஅத் றிழ்வான் பொக்கிஷ இரகசியங்கள்)

இதுகாலம் வரையும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஷெய்கை தேடி முரீத் செல்வதிலிருந்து சற்று மாற்றமாக ஷெய்க் முரீத்தை (கலீபாவை)த் தேடிச்செல்லும் புதிய நடைமுறையொன்றை ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி)ன் வருகையிலிருந்து அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவர்களின் வருகையினால் இன்னுமொரு சிறப்பும் காணப்படுகின்றது. இக்கிலாபத் வழிமுறை ஸில்ஸிலாவில் இதுவரை இலங்கையர் எவரும் இடம் பெறவில்லை என்பது சுட்டிக்காட்டத் தக்கது. இந்த ஸில்ஸிலாவில் அல்-குத்ப் அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி)யே முதன் முதல் இடம் பெறும் இலங்கையர் ஆவார்கள்.

இறுதியாக ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) 2004ல் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்கள். குத்புல் அக்தாப் முஹம்மது ஜலாலுத்தீன் (றலி)ன் 36வது கந்தூரிக்கு 2004 தலைமை தாங்கி மஹ்ழறதுல் காதிரிய்யியா தைக்காவின் மேல் கட்டுமானத்தை ஆரம்பித்து வைத்து கொழும்பு சென்றார்கள். அங்கிருந்து தம் முஹீப்பீனின் சகோதரரின் திருமணத்திற்காக கொழும்பிலிருந்து ‘ஹெலிக்கொப்டரில்’ 2004.09.16;ஆம் திகதி அக்கரைப்பற்று அதாஉல்லா விளையாட்டரங்கத்தில் வந்திறங்கி, திருமண வீட்டிற்கு (சாய்ந்தமருதிற்கு) சென்று ஹல்லாஜ் மகாமிற்கு வந்து சுமார் ஒரு மணிநேரம் தங்கி, பின் மாலை 3மணியளவில் ‘ஹெலியில்’ ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) கொழும்பு சென்றார்கள். இவர்கள் அக்கரைப்பற்றிற்கு இறுதியாக வந்து சென்ற நிகழ்வு இதுவே ஆகும். ( 71. தகவல்:  எம்.எஸ். சம்சுத்தீன் ஆசிரியர், அட்டாளைச்சேனை.*. இறுதியாக கொழும்பிலிருந்து இந்தியா சென்ற கடவுச் சீட்டு)

இம்மஹான் இலங்கைக்கு வருகைதந்து, அண்மித்த காலப்பகுதியில் அரசியல் மாற்றங்கள் அல்லது வரலாற்று நிகழ்வுகள் அல்லது இயற்கை அனர்த்தங்கள் நடைபெற்றுள்ளதை காணக்கூடியதாக உள்ளன. 1943-1944ல் இலங்கை சுதேசிகளால் ஆளப்படுவதற்கான சோல்பரி அரசியல் திட்டம் அமுலுக்கு வருதலும் 1972-73ல் இலங்கை குடியரசாக்கப்படலும் சோசலிச ஜனநாயக யாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டதும் 1978ல் சூறாவளியும், புதிய ஆட்சி மாற்றமும், 2ம் குடியரசு யாப்பு அமுலும் 1983ல் ஜுலைக் கலவரமும் 1987 இலங்கை – இந்திய ஒப்பந்தமும் 1994ல் பொதுத் தேர்தலும் ரணில்-பிரபாகரன் ஒப்பந்தமும் 2004ல் சுனாமியும் இலங்கை வரலாற்றில் சந்திக்கக்கூடியதாக உள்ளன.

இறைத்தத்துவங்களைத் தன்னுள் சுமந்த ஒரு மெய்ஞானியின் அனைத்துச் செயல்களும் மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தி நிற்கும். தெய்வீகத்தில் தன்னை அழித்து தன்னுணர்வுளை மாய்த்து இறை காதலில் மூழ்கிய அடியானை, இறைவன் வழிநடத்தி நிற்பான். அம்மெய்ஞானியிடம் இயற்கைக்கு மாற்றமான பல விடயங்களைத் தரிசிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஷெய்குனா, ஸெய்யிதினா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி)ன் வாழ்வியல் இதை நிறுவுகின்றது. அவர்களிடமிருந்து வியக்கத்தகும் பல செய்திகளை கூறியும் கண்டுமுள்ளனர்.

குத்புனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி)ன் சொல் செயல் அனைத்தும் கறாமத்துக்களைச் சொரிந்து நின்றன. வாய், முகம், கண்கள் ஞானங்களை கக்கிக் கொண்டிருந்தன. ஸூபித்துவ தஸவுஃப் ஞானங்களையும் மறைவான செய்திகளையும் சாராய்ப்பிளிந்து அருள் மழையில் நனையச் செய்து கொண்டிருந்தன. பற்பல தீர்க்க தரிசனங்களை எதிர்வு கூறி நின்றன.. ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) 1997ல் பயங்கரவாதம் அழிக்கப்படும் என்றும் கௌரவ ஏ.எல்.எம். அதாஉல்லா (1994) எம்பீயாகவும், அமைச்சராகவும் சமூகத் தலைவராகவும் ஆக்கப்படுவார் என்றும் தற்போதைய மாற்றுக்கட்சித் தலைமை ஒரு போதும் ஜனாதிபதி பதவிக்கு வராது (1998) என்றும், ஒரு கலீபாவின் வெளிப்பாட்டால் அக்கரைப்பற்றும், நாடும் அருள் பெற்று அபிவிருத்தியடையும் என்றும் பல தீர்க்க தரிசனங்களை முன்னறிவித்துள்ளார்கள். தனது மரணத்தை கூட இருவருடங்களுக்கு முன் பிரயாண விடை பெறுவதற்கான உரையில் (2002) விளக்கிய, பரிசுத்த ஆன்மாதான் ஷெய்குனா நாயகம் அவர்கள்.( 72 தகவல்: ஐ.எல்.எம். ஹாமீத் – ஆசிரியர், அட்டாளைச்சேனை).

‘உங்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்க்காகவும், நீங்கள் பயந்து நடப்பதற்காகவும், (அல்லாஹூவால்) அருள் செய்யப்பட வேண்டும் என்பதற்காகவும், உங்களில் உள்ள ஒரு மனிதர் மீது உங்களுடைய இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நல்லுபதேசம் வருவதைப் பற்றி ஆச்சரியப் படுகிறீர்களா? ‘(73. ஆதாரம்:  அல்-குர்ஆன்- அல்-அஃராஃப் 7:63) என்றும் கூறினார்.’

இவ்வாயத்து நான் ‘அல்லாஹ்விடமிருந்து நீங்கள் அறியாதவற்றை நான் அறிகின்றேன்’ என்ற ஆயத்தின் கீழிடம் பெறுகின்றது. முர்ஷிதுனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி)ன் சிந்தனைப்போக்கு, நடைமுறை வாழ்வியல் தாக்கம், தனிப்பட்ட மனிதர்களை, பிரதேசங்களை, நாட்டைப் பலமாகப் பாதித்துள்ளதை அவர்களோடு ஒன்றி வாழ்ந்தவர்களின் நாளாந்த நடவடிக்கைகளிலிருந்து நிதானித்துக் கொள்ளலாம்.

இந்திய மண்ணிலுள்ள ‘அந்தரதீவில்’ இருந்து நம் நாட்டை தரிசித்த, அஷ்-ஷெய்க், அஸ்-ஸெய்யித் ஹல்லாஜுல் மன்ஸூர்  வொலியுல்லாஹ் அவர்கள், அக்கரைப்பற்று மண்ணையும் மக்களையும் ஆத்மார்த்தமாக நேசித்து தனது ஆன்மீகத் தளத்தை இங்கேயே அமைத்துக் கொண்டார். தான் நிறுவிய ஞானாலயத்தினூடாக, நம் மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்து, நம்மக்களுக்காக நம் மண்ணின் மெய்ஞான எழுச்சிக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருக்கின்றார். தேடல்களே இயல்பூக்கமாகக் கொண்ட நம் மக்களுக்காகப் பல்வகை அறிவு நலனும், வாழ்க்கை நலனும் கைபட வேண்டும் என்பதால் நிறையே இறைவனைப் பிரார்த்திக்கின்றார். தவிரவும், அன்னார் நம் மண்ணின் மாண்பு சிறக்கத் தன்னையே முழுதுமாய் ஒப்படைத்து மிருக்கின்றார். அத்தகையதொரு ஞானவானின் பிரார்த்தனைகளும் வேண்டுதல்களும் நமக்கும் நம் மண்ணுக்கும் வாய்த்த ஒரு அருஞ் செல்வமாகும்(74. ஆதாரம் : வளம்-2010, பக் – XXV, கௌரவ அமைச்சர், அல்ஹாஜ் ஏ.எல்.எம். அதாஉல்லா – தேசாளுமன்றங்கத்தவர், உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர்).

ஓர் அரசரைப் போல் வாழ்ந்த ஒரு மஹான்தான், ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி). அவர்கள் அன்பினாலேயே மனிதர்களின் உள்ளங்களை ஆண்டார்கள். அவர்களின் அன்பிற்கு வசப்படாதவர்கள் எவரும் அவர்களை அண்மித்துவிருக்கவில்லை. அவர்களுக்கு குற்றவேல் புரிபவர்களும் அவர்களின் கட்டளைகளை நிறைவேற்றுகின்ற அரசியல் தலைவர்களும், மார்க்க அறிஞர்களும் அவர்களை சூழ்ந்து காணப்பட்டார்கள். அவர்கள் அனைவரையும் அன்பினாலேயே வழி நடத்தினார்கள். அவர்கள் பிறந்த இடமான அந்ரோத்தின் அரசராகவே விளங்கினார்கள்.

“அந்ரோத்தில் விமான தளமொன்றை அமைப்பதற்கு அவர்களிடம் இந்தியா அரசு அனுமதி கேட்டதற்கு அவர்கள் அங்கு விமானத் தளத்தை அமைப்பதற்கு ஆட்சேபித்ததால் அதன் இணைத் தீவான கவரத்தியில் விமானத்தளத்தை அரசு அமைத்தது”. (75. தகவல் :  குத்புனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி))

கரை கடந்த அறிவுகளையும் ஞானங்களின் தொகுதிகளையும் கொண்ட தலைப்பட்டினமாக விளங்கி ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) அறபு இலக்கியத்திலும் புலமையுடையவர்களாகக் காணப்பட்டார்கள். அறபுக் கவிதைகளையும், ஞானார்த்தப் பாடல்களையும் மீட்டிகருத்தும் பொழிப்புரையும் செய்து விளக்கி நிற்பார்கள். அவர்களின் அறப்பிலக்கியப் புலமையை ‘ஜலாலியா மௌலித், பாத்திமா பைத்’ முதலானவைகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். தாளநயத்தோடு உரிய ராக ஆலாபனையோடு மிக இனிமையாக பாடக்கூடியவர்களாகவும் ஷெய்குனா ஹல்லாஜ் மன்ஸூர் (றலி) விளங்கினார்கள். மெய்ஞானத்துவப் பாடல்களையும், மலையாளப் பாடல்களையும் அடிக்கடி பாடி வந்தார்கள். பன்மொழிப் புலமையும் ஆழ்ந்த ஞானமும் அவர்களின் அணிகலனாக ஒளி சிந்தியது. அந்திம காலத்தில் தம்மோடு தொடர்புப்பட்ட சகலரின் பெயர் குறித்து சோபனம் பாடிக் கொண்டிருந்தார்கள்.

தமது கலீபாவிற்கு கிலாபத் கொடுத்ததன் பிற்பாடு தொடராக ஒன்றரை நாட்கள் தூங்கினார்கள் பின் அந்ரோத் சென்று பதின் மூன்று நாட்கள் தொடராக தூங்கியுள்ளார்கள். வபாத்தடைவதற்கு முன், அந்நாள் எழுந்து வெண்ணீரால் குளித்து சரம் ஷேட், தலைபாகை அணிந்து அவர்களின் அறையில் உள்ள சாய்மானத்தில் சாய்ந்து தூங்கினார்கள். பி.ப 3.00 மணியளவில் மறுவுலகம் சென்றார்கள். (83. தகவல்: அஸ்-ஸெய்யித் மஹ்றுப் தங்கள், அந்ரோத், இந்தியா).

காதிரிய்யி, ஜிஸ்திய்யி, நக்ஷபந்த்pய்யி, றிபாஇய்யி ஆகிய தரீக்காக்களின் ஷெய்குனா, சங்கைக்குரிய அல்ஹாஜ், அல்-குத்ப், அஷ்-ஷெய்க், அஸ்-ஸெய்யித் பி.ஏ. ஸெய்யித் முஹம்மதுக் கோயா தங்கள் ஹல்லாஜுல் மன்ஸூர் கதஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ்) அவர்கள் 2005 பெப்ரவரி 2 (1426 துல்ஹஜ் 22) புதன்கிழமை பிற்பகல் இலங்கை நேரப்படி 3.30 மணியளவில் தமது சொந்த இடமான அந்ரோத்தில் வபாத்தானர்கள். அன்னார் இஷாத் தொழுகையின் பின் அந்ரோத்தில் தன்னை ஈன்ற அன்னையின் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். (84. தகவல் :  தினகரன் – 2005).

சங்கைக்குரிய குத்புல் அக்தாப் ஹல்லாஜுல் மன்ஸூர்(றலி)ன் ஸியாரம்

(கி.பி. 2006) Figure – 24

Dargah_Hallajul_Mansoor_Vaappa_1 Dargah_Hallajul_Mansoor_Vaappa_2

சங்கைக்குரிய குத்புல் அக்தாப் ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) ஸியாரங் கொண்டுள்ள மக்பரா, அந்ரோத், இந்தியா.

(கி.பி. 2009 டிசம்பர்) Figure – 20

இந்தியா,அந்ரோத், படையான் பள்ளியில் ஸியாரங் கொண்டிருக்கும் சங்கைக்குரிய குத்புல் அக்தாப், அஷ்-ஷெய்க், அஸ்-ஸெய்யித் ஹல்லாஜுல் மன்ஸூர் காதிரிய்யி, ஜிஸ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி (றலி) இலங்கையில் பல பிரதேசங்களிலும் சேவை புரிந்துள்ளார்கள். இம்மஹான் ஞாபகார்த்தமாக ஆண்டு தோறும் அக்கரைப்பற்றில் கந்தூரி கொடுக்கப்பட்டு வருகின்றது.

ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) வெற்றிகரமான ஓர் ஆத்மீக வைத்திய சேவை செய்த இவர்கள் ஆங்கில மருத்துவ, ஆயுர்வேத மருத்துவ வில்லைகள், மருந்துகளின் பெயர்களையும் அவை பயன்படுத்தப்படும் நோய்களையும் அறிந்து வைத்திருந்தார்கள். ‘அல்சர், கென்ஸர்’ கிருமிகளால் வருகின்ற நோய் என்ற கருத்தை முன்வைத்துள்ளார்கள். சகல பிணிகளையும் இஸ்ம்அஸ்மா மூலம் குணப்படுத்தலாம் என்பதை அனுபவ ரீதியாக உணர்த்தியவர்கள் ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) ஆவார்கள். அவர்களிடம் வைத்தியர்களால் கைவிடப்பட்ட பலவகையான நோயாளர்கள் வருகை தந்தனர். இஸ்ம் அஸ்மாக்களால் தான் அந்நோயாளர்களைக் குணப்படுத்தினார்கள்.(59. தகவல் : அஸ்-ஸெய்யித் ஏ.எம். திஸ்ஸிமாலைன் – (MBI- London)கொழும்பு.

ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) எப்படியான ஷெய்க் என்பதை பலரும் அறிந்திருக்கிறார்கள். அவர்களின் சகல நடவடிக்கைகளும் தெய்வீக ஒளியில் நடைபெற்றுள்ளன. உண்ணுவது துவங்கி உறங்குவது வரையில் இறை விருப்பத்தின் சாயல் படிந்திருந்தது. அன்னவர்கள் முத்திரையிடப்பட்ட ‘குத்ப்’ என்பதற்கு அவர்களின் பார்வையொன்றே ஆதாரப்படுத்தி நிற்கும். ஒருவரை அவர்கள் பார்வை ஆக்கிரமித்தால் அவரின் இதயம் துளும்பி உடல் தளர்ந்து அச்சத்தால் படபடத்து விடுவர். அனல் கக்கிச் கொண்டிருந்த அவர்களின் கண்கள் பார்ப்பவரை எரித்து விடுமோ என்ற அச்ச உணர்வைத் தோற்றி வைத்தது. ஆய்வாளர்கள் கூட இவர்களை ஒரு பெயரியார் என உணர்ந்துள்ளனர்.

சங்கைக்குரிய குத்புல் அக்தாப் ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி)ன் ஞாபகர்த்தமாக அமைக்கப்பட்ட தகவல்வள மையம், அக்கரைப்பற்று  (கி.பி. 2010) Figure – 25

Figure  27

அக்கரைப்பற்று கடற்கரை (ஸாலாவாடி)யில்  (கி.பி. 1996) Figure – 27)

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *