Kuthubuna Sheik Ismail Yemani (Raliyallahu Anhu)

 அல்-குத்ப், ஷெய்க் இஸ்மாயீல் யமானி (றலி)

 பிறப்பு :

இவர்கள் இஸ்லாமிய பேரரசு நிலவிய காலப் பகுதியில் யெமன் நாட்டு ஆளுநராக செங்கோலாட்சி செய்த ஸபீதிய்யி அல்யமானி என்ற கடைப்பெயரால் அழைக்கபட்ட அரசரின் குடும்பத்தில் உதித்த ஷெய்க் இஸ்ஸதீன் யமானி (றலி)ன் மகனாக பிறந்தவர்கள். அவ்வரசரின் பெயரில் யெமனில் ‘ஸபீத்’ எனும் தலை நகரமும் காணப்படுகின்றது.

இலங்கைக்கான வருகை:

18ம் நூற்றாண்டின் மத்திய காலப் பகுதியில் யெமனிலிருந்து தன் சீடரும் மைத்துனருமாகிய அஸ்-ஸெய்யித் அப்துல் காதிர் மௌலானா (வலி), இந்திய நண்பர் ஹாஸிம் பாய் ஆகியவரோடு ஷெய்க் இஸ்மாயீல் ஸபீத்திய்யி அல்யமானி (றலி) இலங்கைக்கு வருகை தந்திருக்கின்றார்கள். இது ஒல்லாந்தர் ஆட்சியின் கடைக் கூற்றில் நடைபெற்றுள்ளது. இம்மஹானின் இலங்கை வருகைக்கு தன்சகோதரர்களுக்கு இடையிலான சொத்துப் பாகவினை பின்புலமாக அமைந்துள்ளது.

Qutub Shiekh Ismail Yemani Moulana was the co-owner of extensive wheat fields and land together with his brothers in Yeman.Due to certain disputes arising out of the shares accruing to him which he felt he was denied of he left Yemen in company of a devoted friend of his namely Sayed Abdul Cadir Moulana and emigrated to Sailan (Ceylon) ( 87. ஆதாரம்: Qutub As-Sheikh Yehya Al-Yemeni – Page No.03).

Amongst the early migrants from the Arabian Peninsular to Sri Lanka (Then Ceylon), during the rule of the Sinhala Monarchs – that is, long before the South Indian Tamil kings and the Roman Catholic Protuguese colonists invaded Ceylon – was Al-Qutb Al-sheikh Ismail Al-Yamani Al-Sailani, also known affectionately as “Arabi Appa”,a tamilphrase, meaning Arab GrandFather.

Arabi Appa was a great Islamic and Arabic scholar and also a widely respected theologian, His immediate ancestors were Al- Seyed Sheikh Shaoosi Al- Rabahiyyi Zabeediyil Abbasi wa Siddiqui, Al-Seyed Salith Abdullah, Al-Sheikh Salith, and Al-Sheikh Izzadeen. He married three times, first in Kerala, South India, then in Ceylon and was blessed with ten children. Arabi Appa was interred at the Mohideen Jummah Mosque grounds at New Street, Weligama. (88. ஆதாரம் : Sri Lanka Muslim Family Genealogy, Page No-47).

“இவ்விருவர்களின் இலங்கை வருகையையிட்டு யெமன் நாடு ஆழ்ந்த துக்கமடைகின்றது” என்று யெமன் நாட்டு பிரபல்ய பத்திரிகையொன்று கீழேயுள்ளவாறு செய்தி வெளியிட்டுள்ளது.

When the two left Yemen to Ceylon, a leading News Paper of the time entitled, “Kashf Ur Ran an Qalbil Jan” referred to them thus: Two pearls have left Yemen to domicile in Sailan (Ceylon), by this Yemen has become very poor’’ (89. ஆதரரம் : Qutub AS-Shikh Yehya Al-Yemeni)

ஷெய்க் இஸ்மாயீல் யமானி (றலி) தன் சீடரும் மைத்துனருமாகிய அஸ்-ஸெய்யித் அப்துல் காதிர் மௌலானா (வலி)யுடனும் இந்தியாவைச் சேர்ந்த வர்த்தக கனவான் ஹாஸிம் பாயுடனும் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்கள். இவர்கள் யெமனிலிருந்து பாய்க்கப்பல் மூலம் இந்தியா வந்து அங்கிருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக கிழக்குப்புறம் வருகின்ற போது சூறாவளி ஏற்பட்டு அப்பாய் மரக் கப்பல் உடைந்து ஒரு பலகையைப் பிடித்து கரையை அடைந்துள்ளார்கள்.

அரபியப்பாவும் இந்தியாவைச் சேர்ந்த முஹம்மது ஹாஸிம் பாயும் ஒரு கப்பலில் இலங்கை வந்த பொழுது நடுக்கடலில் கப்பல் உடைந்து போய் அவர்கள் இருவரும் பலகையைப் பிடித்துக் கொண்டு தென்னிலங்கையிலுள்ள வலிகாமத்தை வந்தடைந்தனர். ( 90. ஆதாரம் : இஸ்லாமிய கலைக் களஞ்சியம், பாகம்-2 பக்-314)

ஷெய்க் இஸ்மாயீல் மௌலானா தன் தோழரான ஸெய்யித் அப்துல் காதிர் மௌலானாவுடன் சேர்ந்து யெமன் தேசம் துறந்து கிழக்கு நாடுகள் நோக்கி பயணத்தை மேற்கொண்டார்கள். ஒரு பாய் மர வள்ளத்தின் மூலம் அவர்கள் பயணஞ்செய்து, அவர்களின் படகு கடல் சூறாவளியில் சிக்கி சேதமடைந்து அவர்கள் ஈற்றில் இரு கரையை அடைந்தார்கள். அப்துல் காதிர் மௌலானா வெலிகாமத்தையும் இஸ்மாயீல் மௌலானா அக்கரைப்பற்று சின்ன முகத்துவாரக் கடற் கரையையும் அடைந்தார்கள். இது ஒல்லாந்தர் ஆட்சிக் காலமாகிய கி.பி. 18 நூற்றாண்டளவிலாகும். (91.ஆதாரம் : அம்பாறை மாவட்ட முஸ்லிகள், பக்-153.,* ஷெய்க் இஸ்மாயீல் யமானி (றலி))

அகிலத்தின் காரண குத்பாக விளங்கிய ஷெய்க் இஸ்மாயீல் யமானி (றலி) இலங்கைக்கு வரும் போது இஸ்லாமும் முஸ்லிம்களும் பலத்த சோதனைக்குட்பட்டுக் கொண்டிருந்தனர். மார்க்கமும், கலாசாரமும் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த வரண்ட சூழ்நிலை போத்துக்கேயர் ஒல்லாந்தர் ஆட்சியாளர்கள் முஸ்லிம்களையும் இஸ்லாமிய மார்க்கத்தையும் அடியோடு துடைத்தெறியும் நோக்கோடு கங்கனங்கட்டி செயல்பட்டுக்கொண்டிருந்தனர். முஸ்லிம்களை தமது பரம எதிரிகளாக கருதி மனிதாபிமானமற்ற மிலேச்சத்தனங்களை கட்டவிழ்த்துவிட்டிருந்தனர். முஸ்லிம்கள் வாழ்வும், இஸ்லாமும் கேள்விக் குறியாக்கப்பட்டது.

போத்துக்கேய காலனித்துவ ஆட்சியின் போது மினாரா எருக்கிலம்பிட்டியில் வாழ்ந்திருந்த முஸ்லிம்களுக்குப் பல இன்னல்கள் இழைக்கப்பட்டன. மினாராப் பகுதியில் இருந்த முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டனர். (92. ஆதாரம் : மன்னார் மாவட்ட முஸ்லிம்கள், பக்-55).

போர்த்துக்கேயராலும் டச்சுக்காரராலும் மாத்தறை நகரில் வாழ்ந்த முஸ்லிம்கள் கொடுமைக்கும் இம்சைக்கும் ஆளாக்கப்பட்டனர். மாத்தறை பிரதேசத்திற்குப் பொறுப்பாகவிருந்த போத்துக்கேய தளபதி “அன்டோனி டி அமரல் டி மென்ஸிஸ் (Anotonic De Amaral de manezis) மாத்தறை முஸ்லிம்கள் மீது பயங்கர கொடுமைகளை இழைத்தான். 1643ம்மாண்டு மாத்தறை முஸ்லிம்கள் வாழும் கடை வீதியை முற்றுகையிட்டு 200க்கும் 300க்கும் உட்பட்ட முஸ்லிம் ஆண்களையும் இளைஞர்களையும் வெட்டி கொலை செய்ததோடு, பெண்களையும் குழந்தைகளையும் கொழும்புக்கு அடிமைகளாக அனுப்பி வைத்தான்”. (93. தகவல் : மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள், பக்-37. (கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி)).

1659ல் டச்சு அதிகாரியாக செயற்பட்ட ‘மட்ஸியுகெர்’ முஹம்மதியா சமயத்தை ஒழித்துக்கட்டி கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புவதற்கான கொள்கையைப் பிரகடனப்படுத்தினர். இப்பிரகடனத்தைக் தொடர்ந்து மாத்தறை மாவட்டத்திற்கு பொறுப்பாகவிருந்த அதிகாரி ‘வான்கொயன்’ முஸ்லிம்களின் மதக் கடமைகளை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டாம் என தம் கீழ் பணிபுரிந்த அதிகாரிகளுக்கு கட்டளைப் பிறப்பித்து வன்முறை வழியில் முஸ்லிம்களின் மத அனுஷ்டானங்களைத் தடுத்தார். மஸ்ஜித்துக்களில் ‘அதான்’ ஒலித்தல் ஐங்கால ஜும்ஆ தொழுகைக்காக ஒன்று கூடல் போன்றவை தடுக்கப்பட்டன. போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆட்சியில் முஸ்லிம்களின் சுதேச இடங்களிலிருந்து விரட்டப்பட்டனர். அங்கெல்லாம் காணப்பட்ட மஸ்ஜித்துக்கள் தகர்க்கப்பட்டும், சிலது கிறிஸ்தவ ஆலயமாக மாற்றப்பட்டும் முஸ்லிம்களின் வாழ்வியல் அடையாளங்கள் அழித்தும் ஒழிக்கப்பட்டன.

16,17ம் நூற்றாண்டு கால இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை அறிய முடியாதுள்ளது. ஏனெனில் முஸ்லிம்களின் வரலாற்றைக் கூறும் நூற்கள் இல்லாமையும் முஸ்லிம்கள் பற்றிய விபரங்களை எல்லாம் போர்த்துகேயர், ஒல்லாந்து ஆட்சியாளர்களினால் அழித்தொழிக்கப் பட்டமையுமாகும். (94. தகவல் : அபேயசிங்க -1986)

இவ்வாறான கடின சூழலொன்றில் இலங்கை முஸ்லிம் அகப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு காலப்பகுதியில்தான், ஷெய்க் இஸ்மாயீல் யமானி (றலி) ன் வருகை அமைந்துள்ளது. உயிருக்கும் நாளாந்த வாழ்வுக்கும் போராடிக் கொண்டிருந்த இலங்கை முஸ்லிம்களுக்குப் இப்பெரியாரின் வருகை மன ஆறுதலையளித்தது. முஸ்லிம்கள் புதிய நம்பிக்கையோடு புத்துணர்வு பெற்றார்கள். மீண்டும் சன்மார்க்கத்தையும், தீனுல் இஸ்லாமிய நெறிமுறைகளையும் அல்-குத்ப், ஷெய்க் இஸ்மாயீல் யமானி (றலி) போதித்து இலங்கையில் இஸ்லாத்தை நிலை நிறுத்தினார்கள். அவர்கள் இரவு பகலாக இஸ்லாமியப் பணிக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்தார்கள். இலங்கை இஸ்லாமியர் வரலாற்றில் ‘தீனை உயிர்ப்பித்தவர்’ என்ற பெயரை ஷெய்க் இஸ்மாயீல் யமானி (றலி)க்கு வழங்கலாம்.

இஸ்லாமிய சன்மார்க்க நெறிகள் மறுக்கப்பட்டும், கைவிடப்பட்டும் பிற கலாசாரத் தாக்கங்கள் முஸ்லிம்களிடையே தோன்ற ஆரம்பித்த கால கட்டங்களிலே வெளிநாடுகளிலிருந்து வரத்தக்க நோக்கில் இலங்கை வந்த முஸ்லிம் பெரியார்கள் தமது நோக்கத்தினை மறந்து சமயக்கல்வியை வளர்ப்பத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்கள் என்பதை அறிய முடிகின்றது. வெலிகாமத்தில் அல்-குத்ப் ஷெய்க் இஸ்மாயீல் யமானி (றஹ்), மாத்தறை அல்-குத்ப் ஷெய்க் யெஹ்யா ஹாஜியாரப்பா (றஹ்), தென்னிலங்கையில் காதிரிய்யா தரீக்காவை வளர்த்த மஹான் அல்லாமா ஸெய்யித் முஹம்மது மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (றஹ்), 1866ல் இலங்கைக்கு விஜயம் செய்த ஸெய்யித் அஹமதுல் பின் ஸாலிஹுல் யமானி ஷாதலி (றஹ்) ஆகியோரின் பணிகள் மகத்தானவை. (95. ஆதாரம் : மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள், பக்-86).

குடும்பப் பின்ணணி :

அல்-குத்ப், ஷெய்க் இஸ்மாயீல் யமானி (றலி)ன் இலங்கை திருமண வழியில் கிடைத்த மகன் அல்-குத்ப், ஷெய்க் யெஹ்யா (றலி) ஆவார்கள். ஸெய்யத் அஹமதுல் பின் ஸாலிஹுல் யமானி (றலி)ன் தந்தை ஷெய்க் இஸ்மாயீல் யமானி (றலி)ன் சிறிய தந்தையாவார்கள். இப்பெரியாரிடமிருந்தே ஷாதுலிய்யாத் தரீக்கா உத்தரவை ஷெய்க் இஸ்மாயில் யமானி (றலி) பெற்றுள்ளதாக ஒரு தகவலுண்டு.

அரபி அப்பா, அரபி ஸாஹிப் அப்பா என அழைக்கப்படும் அல்-குத்ப் ஷெய்க் இஸ்மாயீல் இப்னு இஸ்ஸத்தீன் யமானி அவர்கள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் (றலி) அவர்களின் நேரடி வழித்தோன்றலும் ஷாதுலிய்யாத்தரீக்கா ஷெய்க்குமாவார். (96. ஆதாரம்: மே. பா, பக் – 62)

அரேபியா தென்கோடியில் அமைந்துள்ள யெமன் பகுதியில் ஷெய்க் இஸ்மாயீல் யமானியின் குடும்பம் பரவி வாழ்கின்றார்கள். ஹழ்றமௌத், ஸபீத், திரியம், அதன் முதலான பிரதேசங்களில் இவர்களின் பரம்பரையினர் வாழ்ந்துள்ளார்கள். இக்குடும்பத்தில் உள்ளோர்கள் முப்திகளாகவும், இமாம்களாகவும் விளங்கியுள்ளார்கள். இவர்கள் ஐதரூஸி என்ற பெயரால் அழைக்கப்பட்டுள்ளார்கள்.

‘ஐதரூஸி’ ஹழ்றமௌத்தைச் சேர்ந்த ஸெய்யித் குடும்பமொன்றின் பெயராகும். இக்குடும்பத்தில் தோன்றி பலர் பெரிய ஸுஃபிகளாகவும் மஷாயிகுகளாகவும் இருந்திருக்கின்றனர். இவர்கள் தென்னரபியா, இந்தியா, இந்தோனேஷியா ஆகியவிடங்களில் பரவி பெரிதும் மதிப்புக்குரியவர்களாக விளங்கினர். இக்குடும்பத்தில் பிறந்த சிலர் சிறந்த அறிஞர்களாகவும் விளங்கி, மார்க்கம் பற்றிய நூற்கள் பல எழுதியுள்ளார்கள். (97. ஆதாரம் : இஸ்லாமியக் கலைக் களஞ்சியம், பாகம்-2, பக் 570).

யெமன் தேசத்தில் இமாம் ஜஃபர் ஸாதிக் (றலி)ன் குடும்பத்தினரே குடிபோந்துள்ளார்கள். இவர்கள் பரிசுத்த அஹ்லுல் பைத் ஸெய்யிதினா இமாம் ஹுஸைன் (றலி)ன் வாரிஸுகளாகும்.

ஷெய்க் இஸ்மாயீல் யமானி (றலி)யே இலங்கைக்கு முதன் முதல் பரிபூரணமான தரீக்கா வழிமுறைகளை அறிமுகப்படுத்தியவர்கள். இவர்கள் காதிரிய்யி, ஐதரூஸிய்யி, ஷாதலிய்யி தரீக்காக்களை முதலில் நிறுவி, அவ்வழிமுறையில் முஸ்லிம்களை பயிற்றுவித்து தீனுல் இஸ்லாம் தழைத்தோங்க உழைத்த உத்தம மஹானாவார்கள். இம் மார்க்க மேதை யெமன், இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் ஆன்மீக தொண்டாற்றிய பெரியார்களின் வரிசையில் கனதியான தாக்கத்தை உண்டு பண்ணியுள்ளார்கள். குறிப்பாக இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் என்றும் நீங்கா இடம் பற்றியுள்ளார்கள். வெலிகாமம், திக்வெல்லை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கொழும்பு, பொத்துவில், அக்கரைப்பற்று, சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை, காத்தான்குடி, கிண்ணியா, மன்னார், புத்தளம், போன்ற பிரதேசங்களில் ஆத்மீக பணிகள் பல செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்களின் பரம்பரையினரான ‘அஹ்லுல்பைத்’கள் வெலிகாமத்தில் கணிசமான அளவு குடியேறினர். இம்மாவட்டத்தில் (மாத்தறை) இன்னுமொரு சிறப்பம்சம் ஸூஃபித் தரீக்காக்களின் செல்வாக்குகளும் யெமன் நாட்டைச் சேர்ந்த ஸூஃபி மஹான்களின் வருகையும் காயல்பட்டண கீழ்க்கரை, மலபார் தொடர்பும் ஸூஃபித் தரீக்காக்களின் செல்வாக்கிற்கு காரணமாக விளங்கின. ஷெய்க் இஸ்மாயீல் இஸ்ஸதீன் யமானி எனும் ஸூஃபி மஹான் யெமனிலிருந்து இலங்கைக்கு வருகையும் அவரது புதல்வர் யெஹ்யா அல்-யமானி மாத்தறையில் வாழ்ந்து சன்மார்க்க பணி புரிந்தார். (98. ஆதாரம் :  கலாநிதி எம.;ஏ.எம். சுக்ரி – மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள்,பக் – 38)

The House of Sheikh Ismail was popularly known as ‘‘Arabi Appa’s House’’ in Weligame, which was not only a place for living but also a place from which the shining lights of the religion of Islam was successfully radiated. He was the greatest authority on Islam at that time and people from near and afar congregated daily to hear his discourses and seek his advice. He was a living monument of patience, learning and knowledge. ( 99. ஆதாரம் :Qutub AS-Shikh Yehya Al-Yemeni,Page,-04 )

திருமணம் மற்றும் பிள்ளைகள்:

முதலாவது திருமணம்;

இலங்கையில் ஷெய்க் இஸ்மாயீல் யமானி (றலி) மூன்று திருமணங்களை செய்துள்ளார்கள். பௌத்த சமயத்தை சேர்ந்த ஓர் இளவரசியையும், ஏனைய இரு முஸ்லிம் பெண்களையும் திருமணம் முடித்துள்ளார்கள். இப் பெண்கள் வெலிகாமம், திக்வெல்லை, ஹம்பாந்தோட்டைப் பிரதேசத்தைச் சேந்தவர்கள். அம்மூவரிலும் பௌத்த இளவரசி அதிக சொத்துக்கள் உள்ளவராக காணப்பட்டுள்ளார். இன்றும் திக்வெல்லையில் ‘இராசகுமாரி வத்தை’ என்று அழைக்கப்படும் காணி, இவ்விளவரசி மூலமாக ஷெய்க் இஸ்மாயில் யமானி (றலி)க்கு வந்த காணியாகும். அக்காணியின் ஒரு பகுதி  ‘ஸெய்யித் வளவு’ என அழைக்கப்படுகின்றது.

ஷெய்க் இஸ்மாயீல்  யமானி (றலி) வெலிகாமத்தில் ஹேரத்  முதியான்ஸலாகே விஸ்வகுமாரி ஹாமி என்ற இளவரசியை இஸ்லாத்திலாக்கித் திருமணம் செய்தார்கள். இளவரசிக்கு இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். மூத்த மகன் பாதிலி ஸெய்யித் இப்றாஹீம் லெவ்வை நொத்தாரிஸ் ஆகும். இரண்டாம் மகன் ஷெய்க் யெஹியா அவர்களாகும். முதலாம் மனைவி இளவரசி காலமாகி விட காணிகளைப் பராமரிக்க திக்வெல்லைக்கு வந்தார்கள். அங்கு தனது மனைவியின் ஆஸ்தியான 4500 ஏக்கர் காணியில் தங்கினார்கள். இராசகுமாரி வத்தை என்று இன்றும் அழைக்கப்படும் அக்காணியின் ஒரு பகுதி ‘ஸெய்யித் வளவு’ என்று அழைக்கப்படும் இடத்தில் அரபியப்பா வசித்தார்கள். (100.ஆதாரம் : தினகரன், 2008)

இரண்டாவது திருமணம்;

முதல் திருமணத்தில் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த ஷெய்க் இஸ்மாயீல் யமானி (றலி) இரண்டாம் பந்தத்தில் இரு ஆண் மக்களையும் மூன்று பெண் மக்களையும் ஈன்றெடுத்துள்ளார்கள். ஷெய்க் அப்துல்லாஹ் மௌலானா (றலி) (பெரிய மௌலானா), ஷெய்க் அப்துஸ்ஸமத் மௌலானா (றலி) (சின்னமௌலானா), ஸெய்யித் பாத்திமா (வலி), ஸெய்யித் ஹலீமா (வலி), ஸெய்யித் மூமினா (வலி)  ஆகியோர்களாவார்கள். இரண்டாம் மணம் மாத்தறையில் ஸெய்யிதினா அபூபக்கர் ஸித்தீக் (றலி)ன் வம்சத்திலுள்ள ‘கமூஸ்தர்’ ஆலிமின் மகளை ஷெய்க் இஸ்மாயீல் யமானி (றலி) திருமணம் செய்துள்ளார்கள். இத்திருமணஞ் செய்த குடும்பத்தை ‘முகத்தம் குடும்பம்’ (Mukaddam) என்ற பெயரால் அக்கால மக்கள் அழைத்துள்ளார்கள்.

மிகவும் மதிப்புக்கும் அன்புக்குமுரிய அரபியப்பா அவர்கள் அரேபியாவிலிருந்து இந்நாட்டிற்கு வந்ததும் இலங்கையிலேயே வசிக்கத் தீர்மானித்தார். முகத்தம் குடும்பத்தின் புனிதத்துவத்தை கேள்விப்பட்ட அரபியப்பா அவர்கள் அக்குடும்பத்தின் உதவியைப் பெரிதும் நாடினார். அத்தோடு அக்குடும்பத்திலேயே விவாகப் பந்தமும் செய்து கொண்டார்கள். ( 101. ஆதாரம் :  எங்கள் தலைவர் பதியுத்தீன், பக்-34).

மூன்றாம் திருமணம்;

ஷெய்க் இஸ்மாயீல் யமானி (றலி) மூன்றாம் விவாகத்தை ஹம்பாந்தோட்டையில் செய்துள்ளார்கள். அவ்விவாகத்தில் மூன்று பிள்ளைகள் என்றும் நான்கு பிள்ளைகள் என்றும் கூறுகின்றனர்.  அப்பிள்ளைகள் ஷெய்க் அப்துர் றஸாக் மௌலானா (றலி), ஷெய்க் அப்துல் அஸீஸ் மௌலானா (றலி), ஷெய்க் அப்துல் வாஹித் மௌலானா (றலி) ஆகிய மூவர் என்றும் நான்காமவர் ஷெய்க் அப்துல்காதிர் மௌலானா (றலி) என்றும் கூறுகின்றார்கள்.

ஷெய்க் இஸ்மாயீல் யமானி (றலி)

01ம் திருமணம்

1. ஷெய்க் பாதிலி ஸெய்யித் இப்றாஹீம்லெவ்வை மௌலானா (றலி)
2. ஷெய்க் யெஹ்யா மௌலானா (றலி)

02ம் திருமணம்

1. ஷெய்க் அப்துல்லாஹ் மௌலானா (றலி)
2. ஷெய்க் அப்துஸ்ஸமது மௌலானா (றலி)
3. ஸெய்யித் பாத்திமா உம்மா (வலி)
4. ஸெய்யித் ஹலிமா உம்மா (வலி)
5. ஸெய்யித் மூமினா உம்மா (வலி)

03ம் திருமணம்

1. ஷெய்க் அப்துர் றஸாக் மௌலானா (றலி)
2. ஷெய்க் அப்துல் அஸீஸ் மௌலானா (றலி)
3. ஷெய்க்க் அப்துல் வாஹித் மௌலானா (றலி)
4. ஷெய்க் அப்துல் காதர் மௌலானா (றலி)

ஸில்ஸிலா :

மெய்ஞான மோட்ச கிலாபத்திற்குரிய ஸில்லிலா இரு பிரிவுகளினூடாக வந்துள்ளன. குத்பியத்திற்குரிய ஸில்ஸிலா குத்புஸ்ஸமான் வழியாகவும் குத்புக்குரிய ஸில்ஸிலா பரம்பரையினூடாகவும் பயணித்திருக்கின்றன. அப்பரம்பரை வழி ஸில்ஸிலா ஷெய்க் இஸ்மாயீல் யமானி (றலி)ன் குடும்பப் பாதையில் இலங்கை வந்திருக்கின்றது. கௌதுனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (றலி)ன் மகன் ஷெய்க் அப்துர் றஸாக்குல் காதிரிய்யி (றலி)னூடாக ஷெய்க் அஹமது நஸறுல்லாஹில் காதிரிய்யி (றலி) வழியில் ஷெய்க் இஸ்மாயீல் (றலி)ன் குடும்பத்திற்கு இச் ஸில்ஸிலா வருகை தந்திருக்கின்றது. (102.  ஆதாரம் :குடும்ப காதிரிய்யியா ஸில்ஸிலா, ஷெய்க் அப்துல் வாஹித் மௌலானா (றலி), ஸமதிய்யியாறாதிப் கிதாப், பக் 9-13, சாய்ந்தமருது).

ஒரு குத்புஸ்ஸமான் உட்பட 440 பேர்கள் இவ்வுலகில் இருந்து கொண்டு  இருப்பார்கள். அவர்கள் பல்வேறு படித்தரங்களில் காணப்படுவார்கள். கௌது ஒருவரும் முக்தார் மூவரும் அவ்தாது நான்கும், அன்வார் ஐந்தும், உறபா (ஆரிபின்) ஏழும், அஃயார் பத்தும், அப்தால் நாற்பதும், நுஜபா எழுபதும், நுகபா முந்நூறும் ஆகிய நாநுற்று நாற்பது வலிமார்களாகும். (103. ஆதாரம் : மஆனி பக்-38, அல்லாமா மாப்பிள்ளைலெப்பை ஆலிம் (றலி), இந்தியா) குத்புடைய அந்தஸ்த்தில் உள்ளவர்களை ‘முக்தார்’ என்று அழைக்கின்றனர்.

குடும்ப முறை காதிரிய்யி ஸில்ஸிலாவில் ஷெய்க் இஸ்மாயீல் யமானி (றலி) இருபத்து நான்காவது ஷெய்க்காக இடம் பெற்றுள்ளார்கள். இவர்களின் ஷெய்க் யெமன் நாட்டு ஹழ்றமௌத்து வாசியான ஷெய்க் ஹஸனுப்னு ஸெய்யித் அலியுர் றிபாஇய்யி (றலி) ஆவார்கள். இப்பெரியார் காதிரிய்யி, றிபாஇய்யி ஷெய்க்காக விளங்கியவர்கள். ஷெய்க் இஸ்மாயீல் யமானியை சந்திப்பதற்கு இலங்கைக்கு பலமுறை வருகை தந்துள்ளதாக அறியக் கிடக்கின்றது. இலங்கையில் றிபாஇய்யி தரீக்காவை அறிமுகப்படுத்தியவர்களும் இவர்களேயாவார்கள். இம்மஹான் ஷெய்க் இஸ்மாயீல் யமானி (றலி)க்கு காதிரிய்யி, றிபாஇய்யி தரீக்காக்களின் கிலாபத்தை வழங்கியுள்ளார்கள்.

ஜிஸ்திய்யி தரீக்குக்குரிய உத்தரவும் கொண்ட ஒருவராக ஷெய்க் இஸ்மாயீல் யமானி (றலி) இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் பாடல்கள் இயற்றுபவராகவும், பாட்டிசைப்பவராகவும் மிளிர்ந்துள்ளார்கள். வழமைக்கு ஒரு ‘ஷெய்க்’ காதிரிய்யி என்றோ, றிபாஇய்யி என்றோ அழைக்கப்பட்டிருக்கலாம். யதார்த்தத்தில் காதிரிய்யில் ஜிஸ்திய்யி அன்றேல் றிபாஇய்யில் ஜிஸ்திய்யி ஆகத்தான் ஷெய்க்மார்கள் காணப்பட்டுள்ளதால், ஷெய்க் இஸ்மாயீல் யமானி (றலி)க்கும் ஜிஸ்திய்யி இருந்திருக்க கூடும் என்று அனுமானிக்கலாம். இவர்களின் பேரன் காத்தான்குடியில் தர்ஹா வாசம் செய்யும் அல்-குத்ப், அஷ்-ஷெய்க், அஸ்-ஸெய்யித் அப்துல் வஹாப் மௌலானா (றலி), நெறிமுறைப்பாடகனாகவும், வாத்தியங்கள் வாசிக்கக்கூடியவராகவும் விளங்கியுள்ளார்கள் என்பதிலிருந்து அவர்களின் பாட்டனாருக்கு ஜிஸ்திய்யி உத்தரவு கொடுக்கப்பட்டிருக்கலாம் என்பது ஏற்றுக் கொள்ளப்படத்தக்கது.

குர்ஆன், ஹதீஸ், பிக்ஹூ, இஜ்மா, கியாஸில் புலமைத் தேர்ச்சியும், தஸவ்வுஃப் ஞானங்களில் உயர் தகுதியும், இலங்கை மக்களிடையே ஷெய்க் இஸ்மாயீல் யமானி (றலி)யினை மேன்மைப்படுத்தி நோக்க உதவியுள்ளன. காமில் வலி, காமில் ஷெய்க்காக பரிணமித்து, கலப்பற்ற சமூக ஆன்மீக சேவைகளால் அவர்களின் பால் இலங்கை முஸ்லிம்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர்.

சேவைகள் :

இவர்களின் அறிவாற்றலும் மதப்பற்றும் இந்நாட்டு முஸ்லிம்களிடையே மிகவும் கௌரவிக்கப்பட்டும் மதிக்கப்பட்டும் வந்துள்ளன. அரபியப்பாவும், அவர் புதல்வர் ஹாஜியார் அப்பாவும் அக்காலங்களிலே இஸ்லாம் பற்றிய சன்மார்க்கப் போதனைகளையும் சேவைகளையும் மக்களுக்குச் செய்து கொண்டு வந்தனர். இதனால் தான் அப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் இஸ்லாத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு வாய்ப்புக்கள் ஏற்பட்டதோடு அப்பகுதிகளில் வாழ்ந்த மக்களும் பெரிதும் சன்மார்க்கப் பயன்களை அடைந்தனர். அத்தோடு அவர்களது புகழும் மேலும் அதிகரித்தது. அவர்களோடு மிக மரியாதையுடன் நடந்து கொண்டனர். (104. தகவல் : எங்கள் தலைவர் பதியுத்தீன், பக் – 35)

ஓர் ஆத்மீக வைத்திராகவும் தடயம்பதித்த ஷெய்க் இஸ்மாயீல் யமானி (றலி) கலாசாரப் பண்பாட்டு பாரம்பரியத்திற்கும் உயிரூட்டியுள்ளார்கள். இவர்கள் இலங்கையில் இஸ்லாமிய ஆன்மீக கலாசாரப் பாரம்பரியங்கள் பலதை அறிமுகம் செய்துள்ளார்கள். யெமன், இலங்கை கலாசாரப் பிணைப்பால் புதிய பாரம்பரியமொன்றை தோற்றி வைத்துள்ளார்கள். இம்மாஹானால் தோற்றி வைக்கப்பட்ட பாரம்பரியம் இன்று வரை முஸ்லிம்கள் கடைப்பிடித்து வருகின்றனர். ஷெய்க், முரீத், தரீக்கா வழிமுறை, திக்ர், மஜ்லிஸ், ஹதீஸ் மஜ்லிஸ், றாதீப் மஜ்லிஸ், மக்தாப், மத்ரஸா முறை, ஸூஃபித்துவ கவிஞானப் பாடல் இயற்றுதல் போன்றவைகளை எடுகோளாகக் கொள்ளலாம். யெமன் நாட்டு ஸுஃபிகளின் தாக்கத்தால் தோன்றிய கலாசாரப் பாரம்பரியத்தை ‘ஹஸ்ரமி கலாசாரம்’ எனப் பேராசிரியர் டிர்மிங்கம் வர்ணிக்கின்றார். (107 : ஆதாரம் : அக்கரைப்பற்று வரலாறு, பக்கம் 275) மற்றும் அவர்களின் மைத்துனர் ஸெய்யித் அப்துல் காதர் (றலி)னூடாக சீனடி, சிலம்படி, கோலாட்டம் முதலிய விளையாட்டுகள் இலங்கையில் அறிமுகஞ் செய்யப்பட்டுள்ளது இவர்கள் கிண்ணியா, மாஞ்சோலையில் ஸமாதி கொண்டிருக்கின்றனர்.

கராமாத்துக்கள்:

மாபெரும் மார்க்க ஞான மேதையாக ஜோதி செய்க் அல்-குத்ப், ஷெய்க் இஸ்மாயீல் யமானி (றலி) பல அற்புதங்களின் காரணபுருஷராக சுவடுகள் படைத்துள்ளதை அவர்களின் வரலாறு உணர்த்துகின்றது. அந்திமத்தை இனிதே முடித்து கைவாய் கட்டப்பட்டு அவர்களிருக்கின்றபோது அவர்களின் வபாத்தை கேள்வியறிந்து ஸெய்யித் அப்துல் காதிர் (றலி), அவர்களின் சந்நிதி வந்து நின்றபோது இரு கண்களையும் திறந்து புன்னகைத்து விட்டு, பழைய படியானதை அவர்களின் அகன்ற ‘கறாமத்’ வெளிக்கு ஓர் உதாரணமாக நாம் காட்டலாம்.

இவர்கள் ஒரு கவிஞரும், ஒரு பாடகருமாவார்கள். பல கவிதைகளையும் பாடல்களையும் இயற்றியுள்ளார்கள். இருந்தும் நூற்களியற்றியவை பற்றி எதுவுமறிய முடியாதுள்ளது.

 He established Madrass and gave baiaath to number of people who were his devoted Murids. He preached and sponsored the Quadiriyya Thareeqah to his disciples and made them pukkah Mussalmans. He was well known for his knowledge of sarf and Irfan, which gave an in sight to truth, and his theological acquisitions were of a very high

order. At the commencement of his Qaseedah or poems he exhorts human beings to strive to know themselves….(105. ஆதாரம் : Qutub As-Sheikh yehya Al-yemi, Page- 03)

இலங்கை முஸ்லிம்களின் மதக் கல்வி கலாசாரப் பண்பாட்டுப் பாரம்பரியங்களை மீள நிறுவிய இப்பெரியார் மக்தாப், மத்ரஸா முறைகளை ஏற்படுத்தி பைஅத், இஜாஸத், நஸீஹத் மூலம் இஸ்லாத்தைப் போதித்துள்ளார்கள்.

முரீதீன்கள்:

யெமன், இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் இவர்களுக்கு சீடர்கள் இருந்துள்ளார்கள். ஸெய்யித் அப்துல் காதிர் மௌலானா (றலி) (யெமன்) முஹம்மது ஹாஸிம் பாய் (இந்தியா), ஷெய்க் அஹமது ஆலிம் (காயல்பட்டணம்) உமர் லெப்பை ஆலிம் (இலங்கை) போன்றோர்களைக் குறிப்பிடலாம்.

கலீபா :

ஷெய்க் இஸ்மாயீல் யமானி (றலி) இரண்டாவது விவாகத்தில் கிடைத்த மகன் அல்-குத்ப் அப்துஸ்ஸமது மௌலானா (றலி)க்கு தம் கிலாபத்தை மாற்றி, ஹிஜ்ரி 1262ல் வபாத்தாகி வெலிகம, ஜும்ஆப் பள்ளி மையவாடியில் ஸமாதி கெண்டார்கள்.

அரபியப்பா வெலிகாமத்தில் மணமுடித்து வாழ்ந்து வந்தார்கள். கி.பி. 1846 (ஹி1262)ல் இங்கேயே காலமாகி அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். ஷெய்க் அஹமது அவர்களை குர்ஆன்ஓதிக் கொடுக்குமாறு பணித்தார்கள். இவர்களிடம் ஓதியவர்கள் தான் உமர்லெப்பை ஆலிம்.இவர்கள் அரபி ஸாஹிப் அப்பாவின் சிஷ்யராகவுமிருந்துள்ளார்கள். (106. தகவல் : மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள், பக்-62)

காதிரிய்யி, ஜிஸ்திய்யி, றிபாஇய்யி, ஷாதலிய்யி, ஐதரூஸிய்யி ஆகிய தரீக்காக்களின் ஷெய்க்காக விளங்கிய ஷெய்க் இஸ்மாயீல் யமானி (றலி)யை ஞாபகிக்கும் சரித்திரவியல் சின்னங்கள் இலங்கையில் பல காணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ‘ஸெய்யித் வளவு’ (திக்வெல்லை) ஷெய்க் இஸ்ஸத்தீன் டௌவுன் (மாத்தறை) யெஹியா மாவத்தை (மாத்தறை) மௌலானா வத்தை (ஹம்பாந்தோட்டை) போன்றன.

தற்போதைய அதிஉத்தம ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவின் வீடு அமைந்துள்ள இடம் மௌலானா வத்தையில் என்பது இங்கு காட்டல் சிறப்புக்குரியது.

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *