குத்புனா அஸ்ஸெய்யித் அப்துர் ரஹ்மான் மௌலானா (றலி)
இவர்களின் பரம்பரையில் அநேகமானவர்கள் ஷெய்க்காவும், இறைநேசச்செல்வர்களாகவும் விளங்கியுள்ளார்கள். அந்ரோத்தில் ஸமாதி கொண்டிருக்கும் ஐதரூஸிய்யி மௌலானா (றலி)ன் மகன், ஹல்லாஜுல் மன்ஸுர் (றலி)ன் தந்தை, அப்துர் றஹுமான் (றலி) ஆவார்கள். மங்கர்ர் ஜும்ஆ மஸ்ஜித்தில் ஸமாதி கொண்டிருக்கும் ஸெய்யித் முஹம்மத் பர்ல் கோயா தங்கள் (றலி), ஐதரூஸிய்யி மௌலானா (றலி)யின் தந்தை ஆவார்கள்.(11. தகவல் : தினகரன் – 2009).
அஷ்-ஷெய்க் ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி)ன் தந்தை அஷ்-ஷெய்க் அப்துர் றஹுமான் மௌலானா (றலி) காதிரிய்யதுல் ஐதரூஸிய்யித் தரீக்காவின் இஜாஸத்துக்குரிய ஷெய்க்காகும். இவர்கள் இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் தரீக்காப் பணிகளையும் ஆத்மீக, சமூக பணிகளையும் செய்தவர்கள். இலங்கையில் யாழ்ப்பாணம், புத்தளம், நாவலப்பிட்டி, மூதூர், தோப்பூர் ஆகிய பிரதேசங்களில் தைக்காக்கள் பலதை அமைத்துள்ளார்கள். இவர்களின் பெயரில் அநேக சொத்துக்கள் காணப்பட்டுள்ளன. அனைத்தையும் இப்பணிக்காகவே செலவிட்டுள்ளனர். தோப்பூர் முஹையத்தீன் ஜும்ஆ மஸ்ஜித்தை உரிமை கோரி, ஒரு தமிழர் நீதிமன்றில் மனு செய்தபோது தமக்குரிய கால்நடைகளை விற்று வழக்காடி ஜும்ஆ மஸ்ஜிதை மீட்டிக் கொடுத்துள்ளார்கள்.(12. தகவல் : மர்ஹும் ஏ.வி. முஹம்மட் (முந்நாள் கல்வி அதிகாரி) மூதூர்).
இவ்வகையான பரவுபகாரம் நிறைந்த ஒருவராகவே தந்தை அப்துர் றஹுமான் (றலி) விளங்கியுள்ளார்கள். இவர்கள் ‘சன்மார்க்க இலகுபோதம்’ எனும் நூலையும் வெளியிட்டு இஸ்லாம் சம்பந்தமான அடிப்படை விஷயங்களையும் மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
ஐதரூஸிய்யியா மகாம், யாழ்ப்பாணம் (கி.பி. 2012),Figure – 05
Leave a comment