Poems

கவிப்பூம்புனல்

  • யாகுத்பா ( அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்க் அப்துஸ்ஸமத் மௌலானா (றலி) அவர்கள் பாடியது).

அல்ஹம்து லில்லாஹிஹம் த ன் தாயி தமன்அபதா
வஷ்ஷுக்று ஷக்றன்கஸீ றன்வாஸி பன்றகதா
தும்மஸ்ஸ லாத்து அலா வாகில் அனாமிறதா
வல்ஆலி வஸ்ஸஹ்பிவத் துப்பாயி பித்தீனி

அல்ஹம்து லில்லாஹியெப் புகழாதி யொருவனுக்காம்
நல்லதிக ஷுக்றுஞ்சிறப் பும்நாய னொருவனுக்காம்
சொல்லெந்த நாள்ஸலவாத் திறைதூதர் நபிதமக்காம்
வல்ஆலி வஸ்ஸஹ்பிவத் துப்பாயிபித்தீனி  ………….(Continue..)  

**************************

  • அக்கரைப்பற்று அல்முனவ்வரா கனிஷ்ட வித்தியாலத்திற்காக குத்புனா மக்கத்தார் வாப்பா நாயகம் (றலி) அவர்கள் இயற்றிய பாடசாலைக் கீதம்

ஏகனே உன்னைப் போற்றினோம்-எங்கள்
ஏந்தல் வழியில் சேரவே
கல்வியில் நாம் ஓங்கிட- உந்தன்
கருணை தந்தெம்மைக் காருமே
(ஏகனே)

முத்து நிகர் கலைக்கூடமே
முனவ்வறா கனிஷ்ட கல்லூரி
கல்வி தரும் அரசாங்கமும்,
கலை ஆசான், அதிபர், பெற்றோர்களும்
காலம் முழுதும் வாழவே-இரு
கைகளை நாம் ஏந்தினோம்
(ஏகனே)………….(Continue..)  

 **************************

  • ஏ மனிதா! நான் பார்த்தேன்

என் கவி சமர்ப்பணம்
ஏழைத் தாய்
அவ்வா உம்மாவிற்கு !!!
தூபா உம்மாவிற்கும்
அப்துஸ்ஸமது ஆலிமுக்கும்
பிறந்த பிள்ளையாக – ஏ மனிதா
நீ பார்த்தாய்

அகிலத்தின் ஒளிச்சுடராம்
அண்ணல் நபி(ஸல்)
அவர்கள் வமிசத்தில்
அரும் பொக்கிசமாயுதித்த
அற்புத தாரகையாய்
நான் பார்த்தேன்…………(Continue..) 

**************************

  • (நிலவே என்னிடம் நெருங்காதே என்ற மெட்டு)

ஹல்லாஜ் மன்ஸூர் இறைகாதல்
அகிலம் போற்றும் உயர் நேசர்
உள்ளம் உருகி பாடுகிறோம்- நாம்
உன்னை என்னி வாழுகிறோம்
(ஹல்லாஜ்)

ஹலுல் பைத்தில் ஹுலங்கி நிற்கும்- எம்
அற்புத ஜோதி நீயன்றோ
சந்தன மேனியில் கமழும் அதை
சாந்தமாய் எம்மில் சேர்த்திடுவீர்
(ஹல்லாஜ்)…………(Continue..)

**************************

அந்த்ரோத் வாழும் பேரரசே
அள்ளி வழங்கிடும் வள்ளரசே
அஹமியம் உள்ள இறை முரசே
அடிமைக் கருள்வீர் என் அரசே

கண்ணிமை கொண்டிடுங்கள் மஹ்ழறாவை
கண்ணியமாகக் காத்திடுவேன்
கண்ணீர் வடித்து வேண்டுகின்றேன்
கடைக்கண் பாருங்கள் நாயகமே

அக்கறை ஊருக்கு நான் வருவேன்
அல்லல்கள் நீங்கிடக் கேட்டிடுவேன்
அள்ளி வழங்கிட நீர் மறுத்தால்
அண்ணலிடம் நான் முறையிடுவேன்…………(Continue..)

**************************

  • கவிஞர் பாலமுனை பாறூக் அவர்கள் எழுதிய

வாருங்கள் நாங்கள்
வாப்பாவை வரவேற்போம்!
வாசமலர் பாசாலர்
வாஞ்சையுள்ள நேசமலர்
ஆசைமலர் எங்கள்
அகம் பூத்த அன்பு மலர்
மக்கத்தார் என்றே நாம்
மகிழ்ந்தேற்றுக் கொண்ட மலர்
இப்போதும்……. இங்கே
எம்மோடு இணைந்தபடி……………….

வாருங்கள் நாங்கள்
வாப்பாவை வரவேற்போம்!
வாசமலர் அதனின்
வாசத்தை நுகர்ந்தவரே
பாச மலர் அதனில்
பரிவில் நனைந்தவரே!
இறை—
நேசர்தம் வாழ்வியலை
நினைவூட்ட ……….நினைவூட்ட……..
நேர்கண்டு சுகித்தவரே!…………(Continue..)

**************************

  • ஆசிரியை எம்.ஐ. தாஜுன்நிஸா அவர்கள் பாடிய

இன்னுமொரு நாள்… இந்த நாள்…

இந்த இனிய நாள்..
இன்பமுடன்
மொட்டவிழ்ந்து
இதழ் விரிந்து
கனமாய், காரமாய்
பூத்து விரியட்டும்!
அதனால்
மனித மனங்கள்
விழிக்கட்டும்!

சன்மார்க்க கீதமும்
ஸலவாத்தின் சங்கை நாதமும்
முழங்கட்டும்!
சத்திய போதகர் நெறியும்
சத்திய வழியும்
ஓங்கட்டும்! – அதை
சனங்கள் குடி கழிக்கட்டும்!…………(Continue..)

**************************

  • மௌலவி எம். ஏ. பிர்னாஸ்(மன்பஈ) அவர்கள் பாடிய

நல்லாசி பொழிந்து வருகவே..

ஏக இரட்சகனின் ஏக நாதரே – எம்
மனம் நிறைந்த நபி போதகரே!
ஏவல் செய்திடும்
இழி அடியோர்களின்
அன்பு நிறை
எங்கள் ஸலாம்!

அண்ணல் நபியின்
அமைதி வழியில்
அகிலம் காக்கும்-இறை
நேயர்களே!
எங்கள் ஸலாம்!………..(Continue..)

**************************

  • ஆசிரியர் முஹம்மது அலியார் பைஸர் அவர்களின் 

அருள் கூடவே வழி நாடவே

அஹதான நாயனால்
மணம் வீசும் மல்லிகை
அஹமது தூதரால்
ஒளிவீசும் தாரகை!!
ஹல்லாஜ் மன்ஸூரே..(ஆல்)
தீன் வீசும் புன்னகை
மக்கத்தார் வாப்பாவே..
அருள் நல்குபீர்களோ !!
(அஹதான)

அந்ரோத்தே தீபகட்ப
அன்பு முகம் கண்டீர்
பாடும் உமை போற்றினோம் மர்ஹபா,
ஆனந்தமே வாழ்வோ
மெய்ஞ்ஞானமே அறிவோ
நாம் உன் புகழ் பாடவா
பூரணமான ஷெய்க்கே
பூமான நபியின் கண்ணே
அருள் கூடவே வழி நாடவே
மக்கத்தாரைப் போற்றிப் போ..!!
(அஹதான)……….(Continue..)

**************************

  • ஆசிரியர் மீராலெப்பை மஹ்பூர் அவர்களின்

வானிருக்கும் நாள்வரைக்கும்..

அக்கரைப்பற்றில்
ஆத்மீக ஞான பீடம்
அக்மியம் போதிக்கும் தரீக்கா பீடம்
மஹ்ழறத்துல் காதிரிய்யா – எனும்
ஆன்மபீட ஆத்மகுரு
அறப்பணி பிரியும் அருளெ எம் வாப்பா…

அப்பாஸிக் குலத்தின் மேதை
அப்துஸ் ஸமது மௌலானாவின்
அருமைப் பேரனாய் – அவர்
வழி தொடர்ந்த – தியாகச் செம்மல்
அப்துல் வாஹிது மௌலானாவின்
பெருமைமிகு மருமகனாய் – மக்கத்தார்
அப்துஸ் ஸமது ஆளிமின்
எழில் மிகு ஏக புதல்வனாய்
உயர் குடும்பத்தில் அவதரித்த
உத்தமர் எம் வாப்பா……….(Continue..)

  • ஆசிரியர் முஹம்மது அலியார் பைஸர் அவர்களின்

தருமத்தின் நாதரே..

வருக வருக வருகவே
மக்கத்தார் வாப்பா வருகவே
எங்கும் அருள் மழை பொழியவே
உங்கள் நல்லாசி பெருகவே !!
(வருக)

பேரிறைவன் விலாயத் பெற்ற
பேரின்ப நேசராய்
நபிநாதர் ஒளியில் நிலைத்த
நாயிபுர் றஸூல் தனாய்
முஹையித்தீன் தரீக்கா வழியில்
முத்தலக்கே வருகவே!!
(வருக)……….(Continue..)

**************************

  • கவிஞர் பாலமுனை பாறூக் அவர்கள் எழுதிய

ஷேகே இல்லாத பாதை திசைமாறுமே

ஷேகே உம் பாதையில்
சீர் கண்டு வாழ்கிறோம்
ஷேகென்று உம்மைத்தான்
உளமாற ஏற்கின்றொம் ஷேகே
(ஷேகே)

ஷேகே இல்லாத பாதை
திசை மாறுமே
நேசம் உம் பாசம் கண்டால்
நிலை பேறுமே
உணர்விலே உயர்ந்து நாம்
உளமாறப் போற்றுவோம் ஷேகே
(ஷேகே)……….(Continue..)

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *