அஸ்-ஸெய்யிதா துஹ்பா உம்மா (வலி)
பொத்துவிலில் அல்-குத்ப் அப்துல் வஹாப் மௌலானா (றலி)ன் முதல் விவாகத்தில் அஸ்-ஸெய்யிதா பூஆத் உம்மா (வலி)ன் மகளாக அஸ்-ஸெய்யிதா துஹ்பா உம்மா (வலி) பிறக்கின்றனர். அல்-குத்ப் அப்துல் வாஹித் மௌலானாவின் தமக்கையாகவும், அல்-குத்ப் அப்துஸ்ஸமத் மௌலானாவின் பேத்தியாகவும், அல்-குத்ப் யாஸீன் மௌலானா ஐதரூஸ்ஸியின் (றலி)ன் மகளின் இரண்டாம் மழலையாகவும் ஷெய்க் இஸ்மாயீல் (றலி)ன் பேரனின் மகளாகவும் இவர்கள் விளங்கின்றனர்.
அஸ்-ஸெய்யிதா துஹ்பா உம்மா (வலி) பிறப்பால் ‘ஸபீத்திய்யி அஹ்லுல் பைத்திய்யி யெமனிய்யி’ இலங்கை வாரிஸுவாக காணப்படுகின்றனர். இவர்கள் இருவழி தூயஸெய்யித்தாகும். இப்புனித மஹானி ஸெய்யிதினா அபூபக்கர் (றலி)னதும், ஸெய்யிதினா அப்பாஸ் (றலி)தும் ஸெய்யிதினா ஹுஸைன் (றலி)னதும் குடும்பக் கலப்பில் வந்துள்ளனர். அல்-குத்ப் யாஸீன் மௌலானா (றலி)ன் தாய்வழி ஹுஸைனியும், தந்தை வழி உமரியும் கொண்டுள்ளனர். அல்-குத்ப் ஷெய்க் இஸ்மாயீல் (றலி)ன் நான்காம் தலைமுறையுடையனர்.
தம் தந்தையின் இஸ்லாமியப் பணியும், தாயின் வபாத்தும் இவர்களை இளமையில் தனிமைப்படுத்தப்படுகின்றனர். தாயின் சகோதரிகளின் அரவணைப்பில் வளர்ந்துள்ளனர். அஸ்-ஸெய்யிதா துஹ்பா உம்மா (வலி)யை நிர்பந்தித்து அறபி ஒருவரிற்கு விவாகஞ் செய்து வைத்துள்ளனர. இத்திருமணத்தில் இவர்களுக்கு விருப்பமில்லாததனால் அல்-குத்ப் அப்துல் வாஹித் மௌலானா (றலி) அன்றே இத்திருமண ஒப்பந்தத்தை இரத்துச்செய்து இவர்களை அக்கரைப்பற்றிற்கு அழைத்து வந்து தன் தாயின் சகோதரிகளிடம் ஒப்புக் கொடுக்கின்றனர்.
அக்கரைப்பற்று, பிரதான வீதியில் (தற்போது செயின் பிள்டிங்) வசித்து வந்த தாயின் இளைய சகோதரியின் வீட்டில் இவர்கள் வளர்ந்து வந்துள்ளனர். பின் அல்-குத்ப் யாஸீன் மௌலானாவிடம் வளர்ந்து வந்துள்ளனர்.
கி.பி 1936ல் அல்-குத்ப் கலீபத்துல் காதிரிய்யி(றலி)க்கு அஸ்-ஸெய்யித் துஹ்பா உம்மா (வலி)யை திருமணஞ் செய்து வைக்கின்றனர். இத்திருமணத்தில் மாப்பிள்ளை தரப்பில் அஸ்-ஸெய்யித் றைஹானத்தும்மா (வலி)ன் தலைமையிலும் பெண் தரப்பில் அல்-குத்ப் யாஸீன் மௌலானா (றலி)ன் தலைமையிலும் நடைபெற்றுள்ளது.
இம்மாப்பிள்ளைக்கு அல்லாஹ்வையும், றஸூலையும்சீதனமாக வழங்குவதாக அல்-குத்ப் யாஸீன் மௌலானா கூறியுள்ளனர்.
இவ்விருவருக்கும் அஸ்-ஸெய்யித் றைஹானத்தும்மா தன் வாழ்விடத்தை வழங்கினார். அவ்விடத்திலேயே இறுதிவரை இருவரும் வாழ்கின்றனர். அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்திருக்கும் சின்னப்பள்ளியின் கிழக்குப் புற வீதியின் மருங்கில் இவர்கள் வாழ்ந்திருக்கின்றனர். தற்போது இவர்களின் மகளும் மகளின் மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இத்தம்பதிகளுக்கு பல குழந்தைகள் பிறந்துள்ளனர். அவர்களில் மூவர் குழந்தைப் பருவத்திலேயே வபாத்தாகியுள்ளனர். 1940, 1941, 1943லும் பிறந்த குழந்தைகளே எஞ்சியுள்ளனர். அவர்களில் இருவர் பெண்களும் ஒருவர் ஆணுமாகும். மூத்தவர் அஸ்-ஸெய்யித் ஸித்தீ றபியத்துல் ஆஸாரா, அடுத்தவர் குத்புனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி) இளையவர் ஹப்ஸா உம்மாவும் ஆவார்கள்.
குத்புனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி),(கி.பி 2010) Figure – 41
அஸ்-ஸெய்யித் துஹ்பா உம்மா (வலி) அல்-குத்ப் அப்துல் வாஹித் மௌலானா (றலி)யால் தர்பியத் செய்யப்பட்டாலும் தபரூக்காக இந்தியா ஜிப்ரி மௌலானா (றலி)யிடம் பைஅத் பெற்றுள்ளனர்.
இவர்கள் பிள்ளைகளையும் பேரக் குழந்தைகளையும் பேரக்குழந்தைகளின் பிள்ளைகளையும் கண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் போது 2001ல் வபாத்தை தழுவுகின்றனர். குத்புனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி)ன் உத்தரவிற்கு அமைவாக அக்கரைப்பற்று, சேர் றாஸிக் வித்தியாலய வீதியில் வீற்றிருக்கும் ஸாவியத்துல் ஹல்லாஜியா மக்பராவில் மருமகளின் (கிழக்காக) விலாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
1. அஸ்-ஸெய்யித் பஸ்லுனும்மா (வலி)ன் ஸியாரம்
2. அஸ்-ஸெய்யித் துஹ்பா உம்மா (வலி)ன் ஸியாரம்
Figure – 51
இவர்களின் ஜனாஸா நல்லடக்கத்தில் சங்கைக்குரிய குத்புனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி)ம், கலாநிதி தீன் முஹம்மத்தும் கலந்துள்ளனர்.
Leave a comment