Kuthubuna As-Seyyidh As-Sheikh Abdul Majeed Makkatthar (Rahmathullahi Alaihi)

குத்புல் அக்தாப், அஷ்-ஷெய்க், அஸ்-ஸெய்யித் அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்)

 

makkattar waappa 01

 

வாரிசு வழிமுறை :

ஸபீத்திய்யிக் குடும்பத்து, அஹ்லுல் பைத் வம்சத்து யெமன் நாட்டு இலங்கையின் 5ம் தலைமுறை வாரிஸாக ஷெய்குனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்)  விளங்குகின்றார்கள். பலத்த பரம்பரை சங்கமமுடைய வம்சவியலாக பெருக்கெடுத்து வருகை தந்த ஒரு புனிதக் குடும்பத்தில் இப்பெரியார் பிறந்துள்ளார்கள். இக்குடும்பம் அப்பாஸிய்யி, ஸித்திக்கிய்யி, ஹுஸைனிய்யி நஸபுக் கலப்புடையது. இம்மஹானின் தாய் வழி. ஸித்தீக்கிய்யி, ஹுஸைனிய்யியும் தந்தை வழி அப்பாஸிய்யியுடையதுமாக இருந்துள்ளது. அக்கரைப்பற்று, தைக்கா நகரில் நீள்துயில் கொள்ளும் அல்-குத்ப் யாஸீன் மௌலானா (றஹ்)ன் வழியில் உமரிய்யி கலந்திருப்பதற்கு வாய்ப்புள்ளது.

பிறப்பு :

இலங்கையின் கிழக்கே அக்கரைப்பற்று எனும் பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மஹான், அல்-குத்ப் அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்), அவர்கள் பரிசுத்த அஹ்லுல் பைத் குடும்பத்தில் வந்தவர்கள். தாய் தந்தை இருவழியும் அஹ்லுல் பைத் குடும்பத்தையுடையவர்கள். இப்பெரியார் யெமன் தேசத்திலருந்து கி.பி 1750களின் பிற்பாடு இலங்கை வருகை தந்த ஷெய்க் இஸ்மாயீல் யமானியின் மகன் வழியில் வருகின்ற ஒருவராவார்கள்.

அஷ்-ஷெய்க் அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) 2ம் உலக மகாயுத்தத்தின் அந்திமத்திலும் டொனமூர் ஆட்சி கால இறுதிப் பகுதியில் 1941 ஆகஸ்ட் 18 (ஹிஜ்ரி 1360 ரஜப் 26)ம் திகதி திங்கள் கிழமை மிஹ்ராஜுடைய தினம் ஜனனித்திருக்கின்றார்கள். அவர்களின் தாய் அஸ்-ஸெய்யித் துஹ்பா உம்மா (வலி), தந்தை கலீபத்துல் காதிரிய்யி, அஸ்-ஸெய்யித், முஹல்லம் அப்துஸ் ஸமத் ஆலிம் மக்கத்தார் (றஹ்)யும்ஆவார்கள். (85. ஆதாரம் : பிறப்பத்தாட்சிப் பத்திரம்).

ஷெய்குனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்), தாயின் கருவறையில் சமைந்திருக்கும் போது, தாய் இந்தியா நாகூரில் ஸமாதி கொண்டிருக்கும் குத்புல் மஜீத் ஷெய்க் ஷாஹுல் ஹமீத் மீரான் ஸாஹிப் நாயகம் (றஹ்) அவர்களால், தான் அருள் பெறும் காட்சியை கண்டதன் நிமிர்த்தம் அதன் நினைவாக தன் மகனுக்கும் ‘அப்துல் மஜீத்’ என்ற பெயரை சூட்டியுள்ளார்கள். (86. தகவல் : அஸ்-ஸெய்யித் துஹ்பா உம்மா (வலி) – 1998ல்).

திருமணம் :

1969 ம் ஆண்டு பஸ்லுனும்மா (வலி) அவர்களுக்கும் அல் – குத்ப் அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) அவர்களுக்கும் திருமணம் நடைபெற்றது. இவ்விருவர்களின் சிறுபராயத்திலே இருவீட்டு தாய், தந்தையர்களும் பேசி நிச்சயித்துக் கொள்ளப்பட்ட திருமணம்தான் அது. இஸ்லாமிய பாரம்பரியங்களை தழுவிக் கொண்ட திருமணமாக அது அமைந்தது.

 Figure 04 Wedding Invitation

  (கி.பி. 1969 மார்ச்)  Picture – 04

 

இப்புண்ணியசீலர்கள் இருவருக்கும் இருபிள்ளைகள் பிறந்தனர். மூத்தவர் 1970 ஆம் ஆண்டு பிறந்த ஸெய்யிதா பாத்திமத்துஸ் ஸஹ்றா (வலீதா) இளையவர் 1973 ஆம் ஆண்டு பிறந்த அஸ்ஸெய்யித் திஷ்ஷிமாலைன்.

 

வாழ்விடம் :

‘மக்கத்தார்’ என்ற பெயரால் அறியப்பட்ட ஷெய்குனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் உத்தமதெய்வ நேயர் ஆவார்கள். இவர்கள் அக்கரைப்பற்று, பிரதான வீதியில் கம்பீரமாக காட்சி தந்து கொண்டிருக்கும் சின்னப்பள்ளியின்முன் கிழக்கு புறமாக உள்ள வளவில் பிறந்து வளர்ந்தவர்கள். இவர்களின் வீட்டின் வடபுறம் பிரதான வீதியோடு சின்ன மௌலானா வீதி சந்திக்கின்றது. தற்போது இவர்கள் பிரதான வீதியிலுள்ள மேற்குப் புறமாகச் செல்லும் மக்கத்தார் வீதியின் வட புறமாகவும் சென்றல் வீதியின் கிழக்கு புறமாகவும் உள்ள வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

1978 -1980 வரையான காலப்பகுதியில் றாதிப் மஜ்லிஸ் நடைபெற்று வந்த கலீபத்துல் ஹல்லாஜ் அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்)ன் வீடு.

Figure 15 - The House of Kuthubuna Makkathar Vappa., Akkaraippattu

 

மக்கத்தார் வாப்பா தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் வீடும் இதுவே (கி.பி. 2010 நவம்பர்) Figure – 15

இவ்வீடு அமைந்திருக்கும் காணி பல சிறப்புக்களை உடையன. அல்லாஹூவின் திருப்பொருத்தம் பெற்ற வலிமார்களின் பாதங்கள் பதிந்த மண்ணிது. அல்-குத்ப் அப்துஸ்ஸமத் மௌலானா (றஹ்)- அல்-குத்ப் அப்துல் வஹாப் மௌலானா (றஹ்)- அல்-குத்ப் அப்துல் வாஹித் மௌலானா (றஹ்)- அல்-குத்ப் ஹல்லாஜுல் மன்ஸூர் (றஹ்) போன்ற பெரியார்களின் பாதங்கள் இக்காணியில் பதிந்துள்ளன. அல்-குத்ப் அப்துஸ்ஸமத் மௌலானா (றஹ்)ன் மகள் அஸ்-ஸெய்யித் ஸித்தீ றபீயத்துல் ஆஷாரா உம்மாவின் மூலம் கிடைத்த காணியிது. இக்காணியில் அல்-குத்ப் அப்துல் வஹாப் மௌலானா (றஹ்) வாழ்ந்திருக்கின்றார்கள். அவர்களால் அமைக்கப்பட்ட கிணறு இன்றுவரை காணப்படுகின்றது.

ஷெய்குடனான சந்திப்பு :

“1973ல், ஒருநாள் 11 மணியளவில் குளித்து விட்டு தலை முடிகளை உலர்த்திக் கொண்டிருக்கும்போது அரிசிக்கார மாமா தன் வீட்டிற்கு வந்து அவரின் மனைவிற்கு ஏற்பட்ட புற்று நோயை குணப்படுத்தும் பொருட்டு தன்னை மௌலானாவிடம் வருமாறு வேண்டியதற்கு அமைவாக மௌலானா தங்கி இருக்கும் சஹாப் ஸ்ரோஸ், பிரதான வீதி, அக்கரைபற்று எனும் விலாசத்தையுடைய ஜவுளி கடையின் பின்அறைக்குச் சென்றேன். மௌலானா என்னை கூர்ந்து அவதானித்துவிட்டு நீ ஓதுவாயா? என வினவே ஆம் என்றேன். உடன் அங்கு என்னை அமரச் சொல்லி டீ குடிக்கச் சொன்னார்கள். பின் சிகரெட்டுத் தந்து இங்கிருந்து புகைக்குமாறு கூறினார்கள். இறுதியாக அருகில் அழைத்து தொடராக நாற்பது நாட்கள் குறித்த குர்ஆன் பாடத்தை ஓதி, தண்ணீரில் ஊதி, நோயாளிக்கு அந்நீரை கொடுத்து வரவேண்டும் என்ற கட்டளைக்கு செவிசாய்த்து நீர் ஓதிக்கொடுக்கப்பட்டு வந்தது. புற்று நோயிலிருந்து அவர் மனைவி சுகம் கண்டார்” என சங்கைக்குரிய ஷெய்கு நாயகம் அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) கூறி, தான் ஷெய்க்கோடு தொடர்புபட்ட முறை பற்றி விளக்கினார்கள்.

ஒரு நோயாளியின் நிமிர்த்தம் நடைபெற்ற இச்சந்திப்பில் சில நோய் தீர்க்கும் பிணிகளுக்கும் ஆத்மீக நடைமுறைகளுக்கும் உத்தரவு வழங்கியுள்ளார்கள்.(48. ஆதாரம் :மழைத்தூறல் – பக்-10).

அஷ்-ஷெய்க் அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றஹ்)யை, ஒரு நேர்வழி காட்டும் உண்மையான ‘ஷெய்க்’காக இனங்கண்டுக் கொள்வதற்கு மேற்கூறப்பட்ட நோய்க்கான உத்தரவு காரணமாக அமைந்துள்ளது.

அஷ்-ஷெய்க் அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) அந்நோய் குணப்படுத்துவதற்கான உத்தரவை ஏற்று தொடராக 40 நாள் ஓதியதன் பிற்பாடு, நோயாளியின் நோய் குணமானதோடு பாரதூரமான நோய்க்கு இவர்கள் ஆளாகியுள்ளார்கள். இந்நோய்க்கு ஆளாக்கப்பட்ட மருமகனை மாமனார் ஹனிபா, டொக்டர் ஹமீதிடம் அழைத்துச் சென்று பரீட்சித்த போது சிறுநீரகம் வெடித்திருப்பதாகவும், மட்டக்களப்பு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று சத்திரசிகிச்சை செய்யுமாறு வைத்தியர் ஆலோசனை கூறியுள்ளார்.

மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு தான் செல்வதில்லை என மறுத்து வீடு வந்து; தான் சந்தித்த மௌலானா உண்மையான பெரியாராக காமில் ஷெய்க்காக இருந்தால் இந்நோயை குணப்படுத்த வேண்டுமென மனதில் திடசங்கற்பம் பூண்டு இருக்கும் வேளை 14ம் நாள் இரவு தூங்கும் போது பெரியார் ஹல்லாஜுல் மன்ஸூர் (றஹ்) தன் தரிசனத்திற்கு வந்து அந்நோயை குணப்படுத்தி எழும்புமாறு உத்தரவிட்டதற்கு அமைவாக தான்எழுந்து பரீட்சித்த போது அந்நோய் குணப்பட்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டதாகக் கூறி ஹல்லாஜுல் மன்ஸூர் (றஹ்) உண்மையான பெரியார் எனக்கொண்டு தான், அவர்களை பின் தொடர்ந்ததாக அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) கூறியுள்ளார்கள். ( 49. ஆதாரம் : குத்புனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) இச்சம்பவத்தை வீடு, அக்கரைப்பற்று மஹ்ழறா- கொழும்பு போன்ற பல இடங்களில் பல்வேறு வேளைகளிலும் விளங்கப்படுத்தியுள்ளார்கள்).

அல்-குத்ப் அப்துல் வாஹித் மௌலானா யமானி (றஹ்) அவர்களின் அங்கீகாரம்:

ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றஹ்)யை பற்றி தப்பு தவறான கருத்துக்களை சங்கைக்குரிய அஷ்-ஷெய்க் அப்துல் வாஹித் மௌலானா யமானி (றஹ்)யிடம் சிலர் முன் வைத்தனர். அதன் உண்மை நிலையை அறிவதற்காக மஹ்ழறத்துல் காதிரிய்யியா தைக்காவுக்கு அவர்கள் சென்று ஹல்லாஜுல் மன்ஸூர் (றஹ்) சந்தித்த பிற்பாடு அப்பெரியார் உயர்ந்த படித்தரத்தை உடைய இறைமுடுகுதல் எய்தி உண்மையான புனிதரும் தூய அஹ்லுல் பைத்தினரும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

பரிசுத்த அஹ்லுல் பைத் நமது குடும்பப் பாரம்பரியத்தில் உதித்த நேர்வழி காட்டக்கூடிய உண்மையுள்ள ஒரு முறப்பி ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றஹ்). அவர்களைத் தாங்கள் பின்பற்றுமாறு தனது மருமகன் அஷ்-ஷெய்க் அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்)க்கு பணித்துள்ளார்கள். ( 56. ஆதாரம் : அல்-குத்ப் அப்துல் வாஹித் மௌலானா யமானி (றஹ்)’  1983).

கிலாபத் வழங்கப்படுவதற்கான உத்தரவு :

1973ல் ஷெய்குனா முஹம்மது ஜலாலுத்தீன் (றஹ்)ன் உத்தரவுக்கு அமைவாகவே கலீபா அஷ்-ஷெய்க் அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்)யை காண்பதற்காக ஷெய்க் நாயகம் ஹல்லாஜுல் மன்ஸூர் (றஹ்) இலங்கைக்கு விஜயம் தந்துள்ளார்கள்.

“இங்கு வருவதற்கு முன் நான் சிங்கப்பூரில் இருக்கும் வேளை ஓர் இரவு என் ஷெய்க் முஹம்மது ஜலாலுத்தீன் (றஹ்) ‘மஜீதின்’ முகத்தைக் காட்டி இவர் தான் உம் கலீபா! என என்னை விளித்து உடன் இலங்கை, அக்கரைப்பற்றுக்குச் செல்லுமாறு கட்டளையிட்டு மறைந்தார்கள். பின் நான் இந்தியா அதிராம் பட்டினத்திற்கு வந்து; அங்கிருந்து திருச்சி மார்க்கமாக இலங்கை வந்திறங்கினேன். என்னை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ஐதரூஸிய்யி மகாம் முஹீப்பீன்கள் அழைத்துச் சென்றார்கள். சில நாட்கள் அங்கு கழித்து புத்தளம் நெய்னார் மரைக்காரின் வீடு வந்து; அவருடைய வாகனத்தில மட்டக்களப்பு ஊடாக அக்கரைப்பற்றை அடைந்தேன்” என்று தன் வருகை பற்றி விபரத்தை ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றஹ்) தெளிவு செய்துள்ளார்கள்.(50. தகவல் : எம்.ஐ. ஸவாஹிர் ஆசிரியர், அக்கரைப்பற்று, வை.சி.எம். ஆஸிக் – நீர்வழங்கல் ‘ சாய்ந்தமருது).

மேலும், ஆத்மீக கிலாபத்தை இங்கையில் நிறுவுதற்காக குத்புமார்களின் அறிவிப்பின் பேரிலேயே குத்புனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றஹ்) இலங்கை வந்து சென்றுள்ளார்கள். புனித இந்நோக்கத்தை தவிர வேறு எத்தேவைக்காகவும் அவர்கள் இங்கு வரவில்லை என்பது அத்தாட்சிப்படுத்தப்பட்டுள்ளது. “நான் அக்கரைப்பற்றிற்கு வரவேண்டும் என ஒரு போதும் திட்டமிட்டவனல்லேன். ஷெய்குனாவின் பணிப்பின் பேரிலும் ஆளுமிடமும் காட்டப்பட்டதன் பேரிலுமே வந்துள்ளேன்” என அவர்கள் பொதுவாக கூறிவந்ததுண்டு.

கிலாபத் :

1978ல் ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றஹ்) அக்கரைப்பற்றுக்கு வருகை தந்து இக்கிலாபத்தின் கலீபா (பகரமானவர் அல்லது பிரதிநிதி)விற்குரிய உத்தரவை ஷெய்குனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்)க்கு வழங்கியுள்ளார்கள். ஒரு இலட்சம் திக்ருக்குரிய இஜாஸத் உத்தரவையும் வழங்கியுள்ளார்கள். (51. ஆதாரம் :  ஷெய்குனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) யிடம் காணப்படும் இஜாஸாத்திற்குரிய அத்தாட்சிக் கடிதம், – 1979 டிசம்பர் 27).

அமானுஸ்ஸாலிக்கீன் போன்ற கிதாபுக்களையும் வழங்கி றாதீப் மஜ்லிஸை திங்கள், வெள்ளி இரவுகளில் நடத்தி வருமாறு வேண்டியுள்ளார்கள்.

ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றஹ்) 1978 இந்தியா சென்று 1983ல் அக்கரைப்பற்றுக்கு வருகை கொடுத்து ஷெய்குமார்கள் தங்கள் கலீபாக்களுக்கு அணிவித்து கௌரவப்படுத்திய ‘ஹிர்க்கத்துல் இராதா’ எனும் ஆடையை தம் கலீபா அஷ்-ஷெய்க் அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்)க்கு அக்கரைப்பற்று, டீன்ஸ் வீதியிலுள்ள சஹாப் முதலாளியின் வீட்டில் அவ்வுடையை இவர்களுக்கு அணிவித்து கௌரவப் படுத்தியுள்ளார்கள். இம்மஹாத்மீக மேதை இவ்வாண்டுதான் அக்கரைப்பற்று கிழக்கு வீதியில் அமைந்திருக்கும் ஹல்லாஜ் மகாமின் துவக்க ஓலைக் குடிசையையும் (1983) திறந்து வைத்து அவ் ஓலை குடிசை தைக்காவில் தொடராக 40 நாட்கள் தங்கியுள்ளார்கள். (52.ஆதாரம்: குத்புனா ஹல்லாஜுல் மன்ஸூர் நி.ம, பக்-10,*. ஏ.எஸ்.எம். ஸாதீக் திருமணம். 1983 ஏப்ரல்) முதன் முதல் அதிக நாட்கள் அக்கரைப்பற்றில் தரித்து நின்ற காலப்பகுதியும் இதுதான்.

 background-top

சங்கைக்குரிய மௌலானா வாப்பாவினால் திறந்து வைக்கப்பட்ட ஒலைக்குடிசைக் தைக்கா, (கி.பி. 1981) Figure – 16

காதிரிய்யி, ஜிஸ்திய்யி தரீக்காக்களுக்குரிய ஆணைகளை கலீபத்துல் ஹல்லாஜ் அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்)க்கு வழங்கி, இந்தியா சென்ற ஹல்லாஜுல் மன்ஸூர் (றஹ்) 1984ல் ஜிஸ்திய்யி ஸில்ஸிலாவையும் 1986ல் காதிரிய்யி ஸில்ஸிலாவையும் தபாலில் அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்)க்கு அனுப்பி வைத்துள்ளார்கள். அவர்கள் குத்புல் அக்தாப் கௌதுல் அஹ்லம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் (றஹ்), குத்புல் மஜீத் நாகூர் மீரான் ஸாஹிப் (றஹ்), குத்புல் ஹிந்து காஜா முஹியீனுதீன் அஜ்மீர் (றஹ்) ஆகியோர்களுடன் கலந்து ஆலோசித்த பின்பே இச் ஸில்ஸிலாவை கலீபத்துல் ஹல்லாஜிக்கு அனுப்பியுள்ளார்கள். ( 53. ஆதாரம் : 1986 மார்ச் 14, 1987 ஏப்ரல் 21 கடிதங்கள்).

1987ல் இலங்கை வந்த ஹல்லாஜுல் மன்ஸூர் (றஹ்) அக்கரைப்பற்று மஹழறத்துல் காதிரிய்யியா, ஹல்லாஜ் மகாமை திறந்து வைத்துள்ளார்கள். அப்போது மனாரா, கூபா கட்டப்படதே தைக்காவாக அது விளங்கியுள்ளது. புதிதாகக் கட்டப்பட்ட தைக்காவில் அஷ்-ஷெய்க் அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்)க்கு பல லௌகீக, ஆத்மீக உத்தரவுகளையும் தரீக்கத்துல் றிபாஇய்யின் இஜாஸத்தையும், விஷக்கல் ஓதிவைப்பதற்கான உத்தரவுகளையும் ஹல்லாஜுல் மன்ஸூர் (றஹ்) வழங்கியுள்ளார்கள். அவை ஸெய்யிதினா அஹமதுல் கபீர் றிபாஇய்யி (றஹ்) அவர்களின் நேரடி வழி வந்த உத்தரவுகள்.

1998ல் ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றஹ்) காதிரிய்யி ஸில்ஸிலாவில் 43வது ஷெய்க்காக அஷ்-ஷெய்க் அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்)யை பதிவு செய்துள்ளார்கள். இந்நிகழ்வின் போதும் ‘ஹிர்க்கா’ அணிவித்து கௌரவப்படுத்தியுள்ளார்கள். இந்நிகழ்வை தாறுல் இஸ்லாம், 308, பழைய சோனகத் தெரு, கொழும்பு என்ற தமது மகாமிலே ஒழுங்கு செய்திருந்தார்கள். நாவலப்பிட்டி, கண்டி, கெலிஓயா, புத்தளம், கொழும்பு, நீர் கொழும்பு, யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது, கல்முனை போன்ற பிரதேசங்களிலிருந்து வருகை தந்தோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.(58.  தகவல்: எம்ஏ. அப்துஸ் ஸலாம் – ஆசிரியர், அக்கரைப்பற்று).

அஷ்-ஷெய்க் அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்)க்கு லாஹிர், பாதின் இரண்டுக்குமான முத்தலக்கான கிலாபத்தையையே ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றஹ்) வழங்கியுள்ளார்கள். கலீபா அவர்களுக்கு ‘முத்தலக்குன் கிலாபத்தை’ 1982 வழங்கியுள்ளதை ஷெய்குனா ஹல்லாஜ் (றஹ்) வரைந்த கடிதம் உணர்த்துகின்றது. ஆத்மீகம், லௌகீகம் இரண்டிற்குமுரிய கிலாபத்தை கலீபத்துல் ஹல்லாஜ் அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்)க்கு கொடுக்கப்பட்டுள்ளதை ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றஹ்)ன் ‘அஸ்ராறுல் கன்ஸி பைஅத் றிழ்வான்’ எனும் நூலின் முகப்பட்டடையில் பொறித்துள்ளார்கள். (70. ஆதாரம் :பைஅத் றிழ்வான் பொக்கிஷ இரகசியங்கள்).

இதுகாலம் வரையும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஷெய்கை தேடி முரீத் செல்வதிலிருந்து சற்று மாற்றமாக ஷெய்க் முரீத்தை (கலீபாவை)த் தேடிச்செல்லும் புதிய நடைமுறையொன்றை ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றஹ்)ன் வருகையிலிருந்து அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவர்களின் வருகையினால் இன்னுமொரு சிறப்பும் காணப்படுகின்றது. இக்கிலாபத் வழிமுறை ஸில்ஸிலாவில் இதுவரை இலங்கையர் எவரும் இடம் பெறவில்லை என்பது சுட்டிக்காட்டத் தக்கது. இச் ஸில்ஸிலாவில் அல்-குத்ப் அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்)யே முதன் முதல் இடம் பெறும் இலங்கையர் ஆவார்கள்.

2004ல், ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றஹ்) கொடிவல்லி வீதி, பதிமங்களம், கோழிக்கோடு, இந்தியா எனும் விலாசத்தில் அமைந்திருக்கும் பஸால் தங்களின் (ஷெய்குனாவின் மருமகளின் கணவன்)ன் வீட்டில் இரவு 8.00 மணிக்கு தமது சகல கிலாபத் பிரகாரங்களையும் அல்-குத்ப், அஷ்-ஷெய்க், அஸ்-ஸெய்யித் அப்துல் மஜீத் மக்கத்தார் காதிரிய்யி, ஜிஸ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி, ஐதரூஸிய்யி (றஹ்)க்கு கொடுத்துள்ளார்கள். அவர்கள் இத்தினத்திலிருந்து 40வது நாள் தம் உலக வாழ்வை முடித்துள்ளார்கள். இந்நிகழ்வு ஒரு குத்பின் மறைவில் இன்னுமொரு குத்பின் வெளிப்படுகையை காட்ட முனைவதினூடாக ‘குத்ப்’ என்று சொல்லப்படுகின்றவர் தொடராக உலகில் இருந்து கொண்டே இருப்பர் என்பது பெறப்படுகின்றது.

பொக்கிஷங்கள் முத்திரையிடப்படுவதன் மூலம் பாதுகாக்கப்படுவது போல இந்த உலகத்தை கலீபாவின் மூலமாக அல்லாஹூதஆலா பாதுகாவல் செய்து வருகிறான். அவர்தான் இந்த உலகத்திற்கு குத்பாக இருக்கிறார். ஆகவே, உலகில் ஒவ்வொரு காலத்திற்கும் ஒரு குத்புக்கு மேல் அதிகம் பேர் இருக்க மாட்டார்கள். (76.  ஆதாரம் :தப்ஸீறுல் ஹமீத் பீ தப்ஸீரில் குர்ஆன் மஜீத், பாகம் – 1, பக்கம் ‘ 83).

சங்கைக்குரிய ஷெய்குனா அவர்கள் 2004.12.25 ஆம் திகதி (துல்கஃதா பிறை 12) அன்று தனது ஏக கலீபாவான இலங்கையின் அக்கரைப்பற்றை பிறப்பிடமாகக் கொண்ட அல்-குத்ப், அஸ்-ஸெய்யித் அப்துஸ் ஸமத் ஆலிம் அப்துல் மஜீத் (மக்கத்தார்) அவர்களுக்கு தனது சகல பொறுப்புகளையும் கடமைகளையும் பன்னிரண்டு சாட்சிகள் (01. அல்-குத்ப், அஸ்-ஸெய்யித், அஷ்-ஷெய்க் அப்துஸ்ஸமத் ஆலிம் அப்துல் மஜீத் (மக்கத்தார்) அக்கரைப்பற்று -02, 02. அல்-ஹாஜ் ஏ.எஸ்.எம். ஸாதிக் – ஜே.பி, கொழும்பு,03. எம்.ஏ.எம். கலீல் – அதிபர், அக்கரைப்பற்று, 04. எம்.ஏ.எம். நவாஸ்- ஏ.எஸ்.பி, கொழும்பு, 05. ஏ. ஹபீபுர் றஹுமான், தஞ்சாவூர், 06.அஹம்மது மன்ஸூர், தஞ்சாவூர், 07. முஹம்மது ஹனீப், தஞ்சாவூர், 08. பீ.ஏ. பூக்கோயா தங்கள், அந்ரோத்தீவு, 09. டீ.ரி. அஹமது பாட்ஷா, தஞ்சாவூர், 10. எம். மிஹ்ளார், புத்தளம், 11. ஏ.சீ.எம். நிஸார் – வை.சி.எம். ஆஷிக், சாய்ந்தமருது, 12, யாஸீர், அக்கரைப்பற்று ஆகியவர்களின் முன்னிலையிலும் தனது குடும்பத்தார் மற்றும் உலமாக்கள் முன்னிலையிலும் இந்தியாவின் கோழிக்கோடு, கொடிவல்லி றோட்டில் பதிமங்களம் எனுமிடத்தில் அமைந்துள்ள மருமகள் வீட்டில் வைத்து ஒப்படைத்தார்கள்.(77. ஆதாரம் : வீரகேசரி ‘ 2005).

ஷெய்குனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்)க்கு கிலாபத் வழங்கும் வைபவத்தில் 300 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள். நூறுல் இர்பான் பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரையாளர்கள்; அதிபர் ஸக்காபஃத்துஸ்த்துஸ் ஸுன்னிய்யா அறபுக் கலாசாலை மாணவர்கள்; விரிவுரையாளர்கள்; அதிபர், அந்ரோத்வாசிகள், குடும்பத்தார்கள் போன்றோர்கள் இவ்வைபத்தில் பங்குபற்றியுள்ளனர்.

ஒரு நீதிபதியும் சட்டத்தரணியும் இதில் இடம் பெற்றுள்ளனர். கிலாபத் வழங்கி பிற்பாடு ஒரு விருந்து உபசாரமும் நடைபெற்றுள்ளது. மௌலானா வாப்பா இவ்விருந்துபசாரத்திற்கு வெள்ளைக் கடா ஆடு அறுக்கப்பட வேண்டுமெனவும் கூறியுள்ளார்கள். (78. தகவல் :ஏ.சீ.எம். நிஸார் (சீசீ) ஆர்.டி.ஏ. சாய்ந்தமருது).

முன்னுள்ள நான்கு ஷெய்க்மார்களின் ஆட்சிக்காலம் நூறு வருடங்களாகும். இந்நூற்றாண்டு முடிவுறும் இறுதி நாளிரவுதான் ஷெய்குனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்)க்கு கிலாபத் கொடுக்கப்பட்டுள்ளது. குத்புனா, ஷெய்க் அப்துல் காதிர் ஹைதராபாத்தி மஜ்தூபி (றஹ்), குத்புனா, ஷெய்க் முஹம்மது ஸூஃபி கூத்தாரி (றஹ்), குத்புனா, ஷெய்க் முஹம்மது ஜலாலுத்தீன் அந்ரோத்தி (றஹ்), குத்புனா, ஷெய்க் ஹல்லாஜுல் மன்ஸூர் அந்ரோத்தி (றஹ்) ஆகிய நான்கு ஷெய்க்மார்களின் கிலாபத் காலப் பகுதி நூறு வருடங்களாகும்.

கலீபத்துல் ஹல்லாஜுக்கு கிலாபத் கொடுத்ததன் பின் ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றஹ்) உரையாற்றியுள்ளார்கள். எதிரே நடைபெறப்போகும் நிகழ்வுகளையும், ஷெய்குனா அப்துல் மஜீத் மக்கத்தார்(றஹ்)க்கு, தான் ஏன் கிலாபத் வழங்கினேன் என்பது பற்றியும் இனிவருங் காலத்தில் எனக்குப் பகரமாக நிற்கும் ஷெய்குனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்)யைப் பின்பற்றி நடக்குமாறும் வேண்டி, கலீபாவை நோக்கி “மாமா அப்துல் வாஹித் மௌலானாவைப் பற்றி பேசுமாறும் அன்னவர்களை மிக விரைவில் தான் சந்திப்பேன்” எனவும்கூறி ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றஹ்) உரையை நிறைவு செய்தார்கள்.

எனக்கு ஷெய்குனா முஹம்மது ஜலாலுத்தீன் (றஹ்) கிலாபத்தை இதே நேரத்தில் தந்தார்கள். அன்றிரவுக் காலை அந்ரோத் 4 அடிஉயரமான நீரால் மூழ்கியது. இன்றிரவோடு நூறு வருடங்கள் முடிவுற்றிருப்பதனால் இக்கிலாபத் மாற்றத்தினால் உலகின் பெரும்பகுதியை நீர் தொடும். மஜீத்தின் கிலாபத் காலப்பகுதியில் உலகு பாரிய அளவு மாறும். காலநிலை, பௌதீகம், அரசியல், பொருளியல், கலாசாரம் போன்ற எல்லாத் துறைகளிலும் மாற்றங்கள் நிகழும் என ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றஹ்) கூறியுள்ளார்கள். ( 79. தகவல் :எம்.ஏ.எம்.நவாஸ் – உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், கொழும்பு).

குத்புனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றஹ்) குடும்பத்தார்களை நோக்கி நீங்கள் பொருளுக்கும் பணத்திற்கு என்னிடம் வந்தீர்கள், நீங்கள் எதிர்பார்த்ததை விட பல மடங்கு உங்களுக்குப் பணம் தந்திருக்கின்றேன். மத்ரஸா மாணவர்கள் கிதாப்களுக்காகவும் உடுப்பு, காசுக்காவும் வந்தீர்கள் அதை நான் நிறைவேற்றியுள்ளேன். ‘அழாய் பழாய்’ தீர்ப்பதற்காகவும் நோய்கள் தீர்பதற்காகவும் வந்தீர்கள் அதையும் நிறைவேற்றியுள்ளேன். எனக்காக வந்தவர் மஜீது மட்டுந்தான். மற்றவர்கள் உங்கள் தேவைக்காக என்னிடம் வந்தீர்கள். மஜீதுக்கு கடந்த 28 வருடங்களாக ஏசி இருக்கின்றேன். ஒரு கனம் கூட மஜீது முகம் சுளிக்கவில்லை. அவன் அப்படி ஏச்சு வாங்கக்கூடியவனுமல்ல, அவனுக்கு ஏசியது போன்று உங்க யாருக்காவது அரை மணி நேரம் ஏசினா, நின்ற இடத்தை விட்டு போயிரிங்க, அதையெல்லாம்தாண்டி என்னோடு எனக்காக மட்டும் வந்தவன் மஜீது மட்டுந்தான். கடந்த ஏழு வருடங்களாக துன்பத்திற்கும் ஊனண் உறக்கமின்றி கஷ்டத்திக்குள்ளும் இருந்து வந்திருக்கன், கிலாபத் ஏத்துக் கொள் என்று மஜீதிடம் பலமுறை கூறி வந்துள்ளேன். ஆனா மஜீது மறுத்து வந்திருக்கு “அதற்குரிய அந்தஸ்துடைய ஒருவருக்கு ஷெய்க் கிலாபத் வழங்க உத்தேசித்தால் அத்தகைமையுடையவர் கிலாபத்தை ஏற்க மறுத்தால் ஷெய்க்குரிய சொந்தமான அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்நபருக்கு கிலாபத்தை வழங்கலாம்” என கௌதுனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (றஹ்) கூறியுள்ளதை மேற்கோள் காட்டி எனக்கு சொந்தமான சக்தியைப் பயன்படுத்தி மஜீதுக்கு பைப்போஸாக கிலாபத் வழங்கியுள்ளேன் என்றும் அவர்கள் விளக்கினார்கள். (80. தகவல் : அல்-ஹாஜ் ஏ.எஸ்.எம். ஸாதிக் – அகில இலங்கை சமாதான நீதிவான், கொழும்பு).

1998லிருந்து தன்னை (கலீபத்துல் ஹல்லாஜ்) கிலாபத் பொறுப்பை ஏற்குமாறு வாப்பா ஹல்லாஜுல் மன்ஸூர் (றஹ்) என்னை பல தடவை வேண்டி வந்துள்ளார்கள். அதை மறுத்து தங்கள் மருமகன் பூக்கோயாவிற்கோ அல்லது வேறு எவருக்கோ கிலாபத்தைக் கொடுக்குமாறு பலமுறை நான் வாப்பாவிடம் கூறிவந்துள்ளேன் என இவர்கள் பல சந்தர்ப்பங்களில் விளக்கியுள்ளார்கள். (81. தகவல்: குத்புனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்)).

 ஆன்மீக மருத்துவ சேவை :

குத்புனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) இளம் வயதிலிருந்து ஆத்மீக மருத்துவ சேவையில் ஈடுபட்டுக் கொண்டுவருகின்றார்க்ள. நீண்ட காலங்களாக இம்மருத்துவ சிகிச்சை செய்து வந்து கொண்டிருக்கின்றார்கள். பல இலட்சத்ததிற்கு மேற்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்துள்ளார்கள். இவர்களின் குடும்பப் பாரம்பரிய ரீதியாக இம்மருத்துவத்திற்கான உத்தரவு கிடைக்கப் பெற்றிருக்கின்றது. அல்-குத்ப் கலீபத்துல் காதிரிய்யி முஹல்லம் அப்துஸ்ஸமது ஆலிம் மக்கத்தார் (றஹ்) அவர்கள் தம் மகன் ஷெய்குனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்)க்கு இம்மருத்துவ உத்தரவுகளை வழங்கியும் பயிற்றுவித்துமுள்ளார்கள். இப்பிராந்தியத்தில் இஸ்ம்அஸ்மா மருத்துவத்தை ஷெய்க் இஸ்மாயீல் யமானி (றஹ்)யே துவக்கி வைத்துள்ளதை கோடிட்டுக் காட்டப்படுதல் வேண்டும்.அவர்களின் குடும்பத்தினரே தொடர்ந்து இங்கு தங்கிச் சேவை செய்த அஷ்-ஷெய்க் இஸ்மாயீல் ஸபீத்திய்யி யமானியுடன் தொடங்குகின்ற இம்முறை பல தலை முறைகளாக இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இவரின் நேரடிவாரிசுகளும் இவரின் முரீதாக அறிவிக்கப்பட்டவர்களும் இத்துறையில் பிரபலம் பெற்றுக் காணப்படுகின்றனர். அஷ்-ஷெய்க் அப்துல்லா மௌலானா, அஷ்-ஷெய்க் அப்துஸ் ஸமத் மௌலானா, அஷ்-ஷெய்க் அப்துல் வஹாப் மௌலானா, அஸ்-ஸெய்யித் றைஹானத்தும்மா, கலீபத்துல் காதிரிய்யி அபூபக்கர் லெப்பை ஆலிம், அல்-குத்ப் அப்துல் வாஹித் மௌலானா, அஸ்-ஸெய்யித் துஹ்பா உம்மா, அல்-குத்ப் முஹல்லம் அப்துஸ்ஸமத் ஆலிம் மக்கத்தார் அஸ்-ஸெய்யித் அப்துர் றஷீத் (சீனி) ஆலிம், அல்-குத்ப் அஷ்-ஷெய்க் அப்துல் மஜீத் மக்கத்தார் வரையிலானவர்கள் தொடச்சியாக இவ்வைத்திய முறையில் ஈடுபட்டு வந்தும் – வருவதும் குறிப்பிடத்தக்கது.(153. ஆதாரம் : கொடிமலர், பக்-127,அக்கரைப்பற்று வரலாறு, பக்-122).

1970களின் பிற்பாடு குத்புனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றஹ்) வருகையோடு கிலாபத் வழிமுறை சிகிச்சை உத்தரவுகள் ஷெய்குனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்)க்கு வழங்கப்பட்டுள்ளன. ‘கென்ஸர் நோய் தீர்க்கும் உத்தரவே’ இவ்விருவர்களின் முதல் சந்திப்பிற்கு அடிகோலியுள்ளது.

நவீன மருத்துவத்திற்கு சவால் விடுக்கும் அபார நோய்களைக் கூட இவர்கள் குணப்படுத்தியுள்ளார்கள். புற்று, சக்கரை, மாரடைப்பு, குருதி அமுக்க உடலியல், உளவியல், ஆத்ம வியாதிகளுக்கு சிகிச்சையளித்துள்ளார்கள். தமது அஸ்மா இஸ்மின் மூலம் 95 சத வீதமான நோயாளர்கள் சுகம் கண்டுள்ளார்கள் என அவர்கள் கூறியுள்ளார்கள். இப் பெரியாரின் ஆத்மீக மருத்துவத்தின் மூலம் பலர் சுகங்கண்டிருப்பதை காணமுடிகின்றது.

குத்புனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) 1970களின் முன்னே  இத்துறையில் பிரபலமிக்க ஒருவராக காணப்பட்டுள்ளார்கள். இருவருக்கு ஏற்பட்ட நோய்களை குணப்படுத்திய இத்துறையில் இவர்கள் பிரபல்யமடையக் காரணமாக அமைந்துள்ளது. மீன் பிடிக்க கடலுக்குச் சென்று தந்தை வீடு வந்து சேரவில்லை என்ற அதிர்ச்சிக்குற்பட்டு சித்த சுவாதினத்தை இழந்த இளம் பெண் பிள்ளையை இவர்கள் இஸ்ம் அஸ்மா வாயிலாக குணப்படுத்தியமை மற்றையது கலாநிதி தீன் முஹம்மத் கிதாப் மதராஸாவில ஓதிக் கொண்டிருக்கும் போது அவர் ஜின்னால் ஆக்ஞாபிக்கப்பட்டு அந்நோய்குட்பட்டிருந்துள்ளார். நோய்க்கு ஆளாகிய இவரை குத்புனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) ஆத்ம சிகிச்சையளித்து சுகப்படுத்தியுள்ளார்கள். இவ்விரு சம்பவங்களுமே இவர்களின் ஆத்மீக மருத்துவத்தின் மகிமையை பிறர் அறியச் செய்துள்ளது.

மனைவியின் புற்றுநோயைக் குணப்படுத்தல் :

1989ல் குத்புனா மக்கத்தார் வாப்பாவின் மனைவி பஸ்லூனும்மா வலியுல்லாஹ் அவர்கள் பாரதூரமான நோய்க்கு உட்பட்டனர். இடுப்பில் திரட்டியெழுந்த கட்டியை சத்திர சிகிச்சை செய்து அகற்றுவதற்காக மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு சென்றபோது இவர்கள் என்பு புற்றுநோயால் பீடிக்கப்பட்டுள்ளனர் என கிழக்காசியாவில் புகழ்பெற்ற புற்றுநோய் வைத்தியர் ‘ஜெயத்திலக்க’யினால் மருத்துவப் பரிசோதனையின் மூலம் கூறப்பட்டது. கட்டியகற்றப்பட்டாலும் அவ்வைத்தியசாலைக்கு மாதாந்த மருத்துவ பரிசோதனைக்காக செல்ல வேண்டியேற்பட்டது. அவ்வாறு அவ்வைத்தியசாலைக்கு 1994ல் சென்றபோது கடுமையான என்பு புற்றுநோய்க்குட்பட்டிருப்பதாக கூறி வைத்தியசாலையில் அனுமதித்தனர். ஒரு சில வாரங்களின் பின் இன்னும் சில நாட்களில் இவர்கள் மரணித்து விடுவார்கள் என புற்றுநோய் வைத்திய நிபுணர் ‘ஜெயத்திலக்க’ கூறி, மருத்துவ மனையிலிருந்து வீடு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியதற்கு அமைவாக வீடு கொண்டு வரப்பட்டனர்.

அவர்களுக்கு மக்கத்தார் வாப்பாவால் அஸ்மா, இஸ்ம் எழுதிக் கொடுக்கப்பட்டது. இஸ்மையும் ஓதிய தண்ணீரையும் குடித்த பஸ்லூனும்மா சிறிது நேரத்தில் கட்டி கட்டியாக வாந்தியெடுத்ததுடன் புற்றுநோய் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இதற்கு நான்கு மாதங்களுக்குப் பிற்பாடு ‘மகரகம’ வைத்தியசாலைக்கு வைத்தியர் ‘ஜெயதிலக்க’விடம் கொண்டு சென்றபோது வியப்புடன் நோக்கி, “இவர் இன்னும் உயிரோடு இருக்கின்றாரா?” என வினாவெழுப்பி பரிசோதித்தார். புற்று நோய்க்கான எவ்வித அறிகுறிகளும் அவர்களின் உடலில் தென்படாததனால் வைத்தியர் ‘ஜயத்திலக்க’வுக்கு அது ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியமாகவிருந்தது. இருந்தும் அவர் மனம் நம்ப மறுத்தது.

அதனால் முழுமையான வைத்திய பரிசோதனைக்குட்படுத்தி, மருத்துவ பரிசோதனை சான்றிதழ் கொண்டு காண்பிக்குமாறு வேண்டியதற்கு அமைவாக மருத்துவச் சான்றிதழ் கொண்டு செல்லப்பட்டது. அச்சான்றிதழ் புற்றுநோய் இல்லையென தெரிவித்தது.

அம்மருத்துவ பரிசோதனை தவறாக செய்யப்பட்டிருக்குமோ? ஏன சந்தேகித்து, தான் நேரடியாக பரிசோதித்தறிய விரும்பி என்பு புற்று நோய்க்கான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டார். 15 நாட்களின் பிற்பாடு புற்றுநோய் இல்லை என கூறி மருத்துவச் சான்றிதழ் வழங்கினர்.(151. தாவல் : எம்.ஏ. அப்துல் வாஹித் Msc, அக்கரைப்பற்று).

கனவில் தோன்றி சிகிச்சையளித்தமை;

அது மாத்திரமின்றி இம்மஹான் பிறர் கனவிலும் தோன்றி சிலருக்கு நோய்களைச் சுகப்படுத்தியுமுள்ளார்கள். எம்.ஐ. சவாஹிர் என்பவருக்கு 1999ல் இடப்பக்க கழுத்தில் கட்டியொன்று திரட்டி மேலெழுந்துள்ளதை இங்குள்ள வைத்தியர்களின் சந்தேகத்தின் பேரில் கொழும்பு, மகரகம, புற்றுநோய் வைத்தியர் ஜெயத்திலக்கவிடம் அவர் சென்றுள்ளார். அவ்வைத்தியர் அவரின் தோல் புய கட்டியை பரிசோதித்து பார்க்குமாறு தனது உதவி வைத்தியருக்கு கோரியுள்ளார். அவ்வுதவி வைத்தியர் இது புற்றுநோய் எனக்கூறி ‘ஆசிரி’ வைத்திசாலையில் கட்டியை வெட்டி பரிசோதிக்குமாறு சவாஹிரிடம் கூறியதற்கு அமைவாக பரிசோதிப்பதற்காக வெட்டப்பட்டு சில தினங்களின் பின் அவ்வைத்திய பரிசோதனை அறிக்கையைப் பெறுமாறு கோரிவிருந்தார். பரிசோதனை அறிக்கை பெறுவதற்கு முதலுள்ள நாளிரவு குத்புனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) அவரின் கனவில் தோன்றி “அக்கட்டியை கரத்தால் தடவி, இப்பரீட்சையில் தாங்கள் சித்தியடைவீர்கள்” என்று சொல்லி மறைந்தார்கள். அவர்கள் சொன்னதற்கு அமைவாகவே பரிசோதனை அறிக்கை வந்திருக்கின்றது. அவர் இதுவரையும் புற்று நோய் இன்றி வாழ்ந்து வருகின்றார்.(154. தகவல் : எம்.ஐ. சவாஹிர்- ஆசிரியர், அக்கரைப்பற்று).

ஒரு காமிலான ஷெய்கின் தன்மை :

ஒரு உண்மையான ‘காமில் ஷெய்க்’ மனிதர்களுக்கு ஏற்படுகின்ற சகல நோய்களையும் குணப்படுத்தக்கூடியவராக விளங்குவார். உடல், உள, ஆன்ம வியாதிகளுக்கு சிகிச்சை அளித்து சுகப்படுத்தக்கூடியவராக அவர் விளங்க வேண்டும். பரிசுத்த ஆத்மா நபி ஈஸா (அலை) நோய்களை குணப்படுத்தக்கூடிய தத்துவங்களை கொண்டிருந்தது போல் ஒரு ஷெய்க்கும் அத்தத்துவங்களைக் கொண்டிருப்பார். நபி ஈஸா (அலை) ‘றூஹுல் குத்ஸ்’ கொண்டு பலப்படுத்தப்பட்டுள்ளார்கள். ‘றூஹுல் குத்ஸ்’ எனும் மகாமை எத்திக் கொண்ட ஒருவருக்குத்தான் ‘ஷெய்க்’ என்று ஸூஃபிகள் கூறுகின்றார்கள் இம்மகாமத்தை எத்திக் கொள்ளாத எவரையும் ஸூஃபிகள் ஷெய்க் என்று ஒருபோதும் அழைப்பதில்லை, அத்தோடு “உண்மையான நேர்வழி காட்டும் ஷெய்க்மாரிடத்தில் எந்த நோய்களும் காணப்படமாட்டாது”. 

“புற்று நோய், மாரடைப்பு, குருதியமுக்கம், சக்கரை நோய் இது போன்ற குரூர நோய்கள் ‘காமில் ஷெய்க்’ என்று சொல்லப்படுபவருக்கு ஒரு போதும் காணப்படமாட்டாது”  ஓர் இளைஞனைப்போல சுறுசுறுப்பும் முகப் பொலிவுங் கொண்டவர்களாகவும் ‘ஷெய்க்’ என்ற உயர்வர்கத்தினர் இருப்பார்கள். ஷெய்குனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்)க்கு மேல் விளக்கிய எந்த நோய்களும் அவர்களிடம் ஒரு கனமுமிருக்கவில்லை. அறுபத்தொன்பது வயது கடந்தும் முதுமையின் வாட்டமோ, வாழ்வின் அந்திம தாக்கங்களோஅவர்களிடம் காண முடியாது. சோர்வின்றி தொடராகவியங்கி கொண்டிருக்கின்றார்கள். இந்நாள் வரை ஆங்கில, யூனானி மருத்துவ மாத்திரைகள் எதுவும் அவர்கள் பாவிக்கவில்லை என்பது அவர்களின் சிறப்பிற்கு அது ஒரு நேர்புள்ளியாக இருந்து வருகின்றது. 

ஷெய்குனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) வெளிநாடுகளில் உள்ளவர்களும் இம் மருத்துவத்தின் வாயிலாக சிகிச்சை செய்து கொண்டு வருகிறார்கள். இவர்களை டுபாய் சாஜாவை சேர்ந்த ஸாலிம் பின் அப்துல்லா 1993ல் அவரின் நாட்டிற்கு இவ்வைத்தியத்திற்காக அழைத்துள்ளார்.(155. ஆதாரம் : அஸ்ராருல் கன்ஸி பைஅத்துர் றிழ்வான், பக்-குத்புனா ஹல்லாஜுல் மன்ஸூர்(றஹ்)).

ஸாலிம் பின் அப்துல்லா சாஜா குறு நில அரசனின் மகனாவார். இவர் சிகாக்கோ, கேம்பிரிச் பல்கலைக் கழங்களில் Double Engineer முடித்த ஒருவராவார். ஒபேக் அமைப்பில் ஓர் அங்கத்தவருமாவார். இவரின் பெற்றோல் நிலையத்தில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஆசிரியர் அபா சுபைதீன் பணிபுரிந்துள்ளார். இவரிடம் ஸாலிம் பின் அப்துல்லா “உங்கள் நாட்டில் மரபு வழி வைத்தியம் செய்கின்றவர்கள் எவருமுண்டா” என்று கேட்டதற்கு மக்கத்தார் வாப்பாவின் தொலைபேசி இலக்கத்தை கொடுத்து தொலைபேசியில் கதைக்குமாறு கூறியுள்ளார்.

ஸாலிம் பின் அப்துல்லா தொலைபேசியில் அஷ்-ஷெய்க் அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) யுடன் தன் நோய்களையும், தன் பிரச்சினைகளையும் பேசியுள்ளார். அவர் பிரச்சினைகளிலொன்றுக்கு இங்கிருந்து ‘இஸ்ம்’ எழுதி அவருக்கு அனுப்பி மூன்று நாட்களுக்குள் தீர்வு கிடைக்கும் என்று கூறியுள்ளார்கள். இவர்கள் கூறியவாறே அது நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இவர்களை ஸாலிம் பின் அப்துல்லா சாஜாவிற்கு அழைத்து மூன்று மாதம் அங்கு தொடராகத் தங்க வைத்துள்ளார். அவர் நோயும் பிரச்சினைகளுக்கும் தீர்வு எட்டியுள்ளன. ஸாலிம் பின் அப்துல்லா ஷெய்குனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்)யிடம் ‘பைஅத்’ கேட்டுமுள்ளார். அவருக்கு ‘நஸீஹத்’ கொடுத்து நாடு திரும்பியுள்ளார்(156. தகவல் : குத்புனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்)).

குத்புனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) 1990களின் தசாப்த பிற்பகுதிகளில் சில நோய்களுக்கு நிவாரணஞ் செய்யும் ஸுல்தானுல் அவ்லியாய்யி ஸெய்யித் அஹமது கபீர் றிபாஇய்யி (றஹ்)ன் பெயரில் மூன்று கற்களை ஓதியும் வைத்துள்ளார்கள். அக்கற்கள் கடுப்பு, வாதம், பிடிப்பு, பாம்புக்கடி விஷம் போன்றவகைளைக் குணப்படுத்துந் தத்துவங் கொண்டன.

அம்பலத்தாறு பள்ளிவாசலில் வைக்கப்பட்டுள்ள கல்;

அம்பாறை மாவட்டத்தில் இறக்காமப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வாங்காமம் எனும் கிராமத்தை அண்டியுள்ள அம்பலத்தடிப்பள்ளியில் தென்இந்தியாவிலிருந்து வந்த ஸெய்யித் குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மகனாகி மூவரும் அடக்கப்பட்டுள்ளார்கள். இந்த அடக்கஸ்தலங்களின் பக்கத்தின் இரு அதிசய கற்கள் உள்ளன. இவை மனிதனுக்கு ஏற்படும் கடுப்பு, பிடிப்பு, வாதம், பாம்புக்கடி விஷம் போன்றவற்றை குணப்படுத்தும் தன்மையுள்ளவை (157. ஆதாரம் : நவமணி, 1998 டிசம்பர் 20).

பணிகள் :

புண்ணிய சீலர் குத்புனாஅப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) பல மக்பராக்களை அமைத்தும் பராமரித்தும் வருகின்றார்கள். மஹ்ஃஜறத்துல் காதிரிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் (ஹல்லாஜுல் மகாம்), ஸாவியத்துல் ஹல்லாஜ் ஆகியவற்றை அமைத்தும் ஷெய்க் ஷிக்கந்தார் வொலியுல்லாஹ்வின் மஸ்ஜித்துன் நூறானிய்யியை புனரமைத்துமுள்ளார்கள். நாவலப்பிட்டி; ஐதரூஸிய்யதுல் காதிரிய்யியா, கொழும்பு; தாறுல் இஸ்லாம், யாழ்ப்பாணம்; ஐதரூஸிய்யி மகாம்களையும் பராமரித்து வருகின்றார்கள்.

அம்பலத்தாறு ஷெய்க் ஷிக்கந்தர் ஒலியுல்லாஹ் தர்கா;

குத்புனாஅப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) அவர்களால் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட (ஷெய்க் ஷிக்கந்தர் ஒலியுல்லாஹ் ஸமாதியுற்றிருக்கும்) அம்பலத்தாறு மஸ்ஜித்துன் நூறானிய்யி ஜும்ஆ பள்ளிவாயலை சங்கைக்குரிய அஷ்- ஷெய்க், அஸ்-ஸெய்யித் ஹல்லாஜுல் மன்ஸூர் காதிரிய்யி, ஜிஸ்திய்யி தங்களின் அருட்கரத்தினால் கடந்த ஹிஜ்ரி 1481 ரஜப் பிறை 23 (1997.11.24) திங்கட் கிழமை அன்று திறந்து வைக்கப்பட்டு லுஹர் தொழுகையும் நிறைவேற்றி வைக்கப்பட்டது.

அல்குத்ப் மஸ்தான் ஸாஹிப் அப்பா தர்கா:

குத்புனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) அட்டாளைச்சேனை அல்-குத்ப் மஸ்தான் ஸாஹிப் (றஹ்) மக்பரா, அக்கரைப்பற்று ஈச்சம்பட்டி (வலி) மக்பராவையும் கட்டியுள்ளார்கள். 2002யில் மஸ்தான் ஸாஹிப் மக்பராவை புனரமைக்கின்ற போது சில நிகழ்வுகளை மேசனும் புனரமைப்பில் ஈடுபட்டோரும் தரிசித்திருக்கின்றனர்.

மக்கத்தார் வாப்பாவின் பணிப்பின் பேரில் தைக்கா நகரைச் சேர்ந்த ‘மனாப்’ எனும் மேசன் மஸ்தான் ஸாஹிப் (றஹ்)ன் ஸியாரத்தைச் சுற்றி 2002 ஒக்டோபரில் வியாழன் பகல் தளம் அமைக்கப்பட்டு எஞ்சியவைகளை மறு நாள் செய்வதற்காக வீடு சென்றனர். அன்று வெள்ளி இரவு மனாப் மேசனின் கனவில் மஸ்தான் ஸாஹிப் (றஹ்) தோன்றி “உன்னை யாராடா இப்படிக்கட்டச் சொன்ன, என் நெஞ்சின் மேல் கல்லை வைத்துக் கட்டிருக்கின்றாய்” எனக்கூற பீதியடைந்த மேசன் மக்கத்தார் வாப்பதான் கட்டச் சொன்னார் என்று மறுமொழி பகர “சரிசரி என் நெஞ்சின் மேல் உள்ள கற்களை மேற்குப் புறமாக நகர்த்திக் கட்டச் சொல்” என மஸ்தான் ஸாஹிப் வொலியுல்லா கூறிச் சென்றுள்ளார்.

மேசன் அதிகாலையில் குத்புனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) யிடம் நடந்தவற்றை கூற, மஸ்தான் ஸாஹிப் (றஹ்) கூறியதுபோல் மேற்குப்புற கற்கள் அகற்றப்பட்டு ஸியாரத் தளம் அமைக்கப்பட்டது.

அன்றிரவு மஸ்தான் ஸாஹிப் (றஹ்) மேசனின் கனவில் மீண்டும் தோன்றி; இப்போது சரியாக அமைக்கப்பட்டுள்ளது. என் காற்பாதத்தின் மேல் “லாஇலாஹ இல்லல்லாஹூ முஹம்மத்துர்றஸூலுல்லாஹி” என்று இடப்பட்ட பச்சை கொடி கட்டுமாறு சொல்லியதற்கு ஒப்ப பச்சைக் கொடியொன்று மேசனால் சனிமாலை கட்டப்பட்டுள்ளது.(161. தகவல் : எம்.எல். மஹ்பூர் – ஆசிரியர், அட்டாளைச்சேனை).

 

 Figure 59.1  Figure 59

சங்கைக்குரிய அல்-குத்ப் மஸ்தான் ஸாஹிபு வலியுல்லா ஸியாரமும் மக்பராவும், அட்டாளைச்சேனை., கி.பி. 2010நவம்பர்) , Figure – 59

நற்பண்புகள்:

இவர்கள் சமுதாய மக்கள் வாழ்வுக்கான பணிகளிலும் தம் வாழ்வின் அநேக நேரங்களை செலவு செய்து வருகின்றார்கள். குத்புனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்), தம்மை நாடி வருகையளித்துக் கொண்டிருக்கின்ற தனி மனித வாழ்வில் எதிர் நோக்குகின்ற இடர்களைக் களைந்து இவர்கள் மற்றவர்களுக்கு ஆறுதலளித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களிடம் சகல தரத்திலுள்ள மனிதர்களும் வந்து செல்கின்றனர். அவரவர் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் கொடுத்தும் வருகின்றார்கள்.

எங்களால் வாப்பாவிடம் பல சிறப்பான முன்மாதிரிகளை அவதானிக்கக் கூடியதாகவிருகின்றன. ஏழை எளியோர்களுக்கு அளப்பெரிய தர்மங்களால் உதவி புரிந்து, அவர்களின் மகிழ்ச்சியில் தாம் திருப்தி கண்டு வருகின்றார்கள். ஏழை, செல்வந்தர்கள், கற்றோர், கல்லாதவர், நோயாளி, சுகதேகி என்ற பேதம் போக்கி சமத்துவம் என்ற சொல்லுக்கு உயிரூட்டி, சொல்லும் செயலும் ஒருமித்த வழிகாட்டல்களையும் வழங்கி, நம் நடைமுறைவாழ்க்கையில் ஏனையோருக்கு முன் மாதிரியாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.(162.தகவல் : எஸ்.டிஸ்மத் Bsc- முகாமையாளர், கணினி வள நிலையம், அக்கரைப்பற்று).

கலை ஈடுபாடுகளும் விருதுகளும் :

சங்கீதம், சித்திரம், கவிதை, கட்டுரை, நூலியல், அறபு எழுத்தணி, கைப்பணி போன்ற துறைகளிலும் சிறு வயதிலிருந்து ஈடுபட்டு வந்து கொண்டிருக்கின்றார்கள் இம்மஹான். இத்துறைகளிலே பல விருதுகளையும் அவ்வக்காலங்களில் பெற்றுள்ளார்கள்.

கவிஞராக;

இவர்கள் கர்நாடக, இஸ்லாமிய இசைகளை முறையாகக் கற்றுள்ளார்கள், வாழ்த்து, வரவேற்பு, இஸ்லாமியப் பாடல்களென எண்ணற்ற பாடல்களை இயற்றியுமுள்ளார்கள். அக்கரைப்பற்று, மத்திய கல்லூரி, ஷெய்க் ஷிக்கந்தார் வொலியுல்லாஹ் வித்தியாலயம், கொழும்பு, அல்-ஹிதாயா வித்தியாலயம், அக்கரைப்பற்று, அல்-முனவ்வரா கனிஷ்ட கல்லூரி ஆகியவைகளுக்கு பாடசாலை கீதங்களையும் இயற்றி இசையமைத்துள்ளார்கள். தேசிய காங்கிரஸ் கட்சி கீதத்தையும் இவர்கள் யாத்துள்ளார்கள். இக் கீதத்தில் புதிய மரபொன்றையும் புதுமுகம் செய்துள்ளார்கள். தமிழ் சிங்களம் மொழிகளில் இக் கீதம் அமைந்துள்ளதானது இரசிப்பிற்குரியதாகும்.

இசை ஞானியாக;

ஷெய்குனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) இனிய குரல் வளமும் நாத ஸ்வர நுண்ணுணர்வுகளை இயற்கையாகப் பெற்றுள்ளார்கள். றபான், புல்லாங்குழல் வாத்தியக் கருவிகளிலும் ஈடுபாடு கொண்டவர்.

ஆத்மீக குரு நாதர்களிடம் காணப்படும் இசைவுணர்வு இப்பெரியாரிடமும் மேலோங்கி நிற்கின்றது. ஸபூர் வேதம் வெளிக் கொணர்ந்த நபி தாவூத் (அலை)யின் குரல் வள இசையும் அவர்களின் இசையை மீட்டிய எதிரொலித்த மலைகளினதும், பறவைகளினதும் பக்கவாத்திய இசையும் ஷெய்க்மாரிடம் உள்ளமைந்து விளங்குவது சம்பிரதாயமே!

ஓய்வு பெற்ற அதிபரான இவர் கல்வி கற்கும் போதிலிருந்து கலைத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். கவிதை, கட்டுரை நாடகம், அறபு எழுத்தணி, இசை, சித்திரம், கைப்பணி, றபான் போன்ற கலைகளில் பரீச்சயமுள்ளவர். இப்பிரதேசத்தில் புல்லாங்குழல் வாசிப்பதில் பிரபல்யமானவரும் கூட, இரு சமய சார் புத்தகங்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இலங்கை வானொலிக்கு 20க்கு மேற்பட்ட பாடல்களை  இசையமைத்துப் பாடியுள்ளதோடு கவியரங்கம், நாடகங்கள் என்பவற்றிலும் பங்குபற்றியுள்ளார்கள்.(164.ஆதாரம் : கொடிமலர், பக்-293).

An artist and former schoolteacher, this Sufi sheikh in Akkaraipattu has been designated as the Kalifa of an order originationg in the Lakshadweep Islands off the west coast of India (2001)

 Figure 64 01-16-31 Makkattar wappa with cellphone copy

(கி.பி. 2001), Figure – 64

 நூலாசிரியராக;

குத்புனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) இரு ஆத்மீக சார்பு நூற்களையும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்கள். அவை வஹ்தத்துல் வுஜுத், உண்மையைக் கண்டு ஊளையிடும் கற்பனைகள், ஹல்லாஜின் போதனைகள் ஆகிய நூற்களுமாகும்.

1988ல் முதல் நூலையும், 1991ல் இரண்டாவது நூலையும் வெளியிட்டுள்ளார்கள். ‘வஹ்தத்துல் வுஜுத்’ கொள்கை இந்து, கிரேக்கக் கொள்கை என்றும், அது இஸ்லாமியக் கொள்கையில்லை என்றும் வாதம் புரியப்பட்ட வேளையில் ‘வஹ்ததுல் வுஜுத்’ இஸ்லாமிய அடிப்படை கொள்கை என்பதை அல்-குர்ஆன், அல்-ஹதீஸ், இமாம்களினதும், ஸூஃபிகளினதும் ஆதாரங்களையும் கருத்துகளையும் முன்வைத்து இந்து, கிரேக்க தத்துவங்களுக்கும் இஸ்லாமிய வஹ்தத்துல் வுஜுத் கொள்கைக்கும் உள்ள வேறுபாடுகளையும் ஒரே பார்வையில் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டி ‘வஹ்தத்துல் வுஜுத்’ என்ற அகன்ற பரப்பை அதன் சாரமும் கருத்தும் வாசகர்களைப் போய்ச்சேரும் வகையில் முப்பத்திரண்டு பக்கங்களுக்குள் மிகச் சுருக்கமாக எடுத்தோதி இருப்பது இப்பெரியாரின் ஸூஃபித்துவ அனுபவத்தை பிரதிபலித்து நிற்கின்றது.

அன்பு மகன் அப்துல் மஜீத் எழுதிய இவ்வுரையினைப் பார்த்தேன். இதில் கலிமாவின் ழாஹிர், பாத்தினான கருத்துக்கள் மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளன. பெரியார்களின் கருத்தும் இதுவே. வஹ்தத்துல்  வுஜூத் பற்றியும் வுஜூது ஹகீக் பற்றியும் மிகத் தெளிவான முறையில் எழுதியுள்ளமை கண்டு மனம் மகிழ்கின்றேன்.(165. ஆதாரம் : வஹ்தத்துல் வுஜுத், ஆசியுரை, அல்-குத்ப், அஷ்-ஷெய்க், அஸ்-ஸெய்யித் ஹல்லாஜுல் மன்ஸூர் (றஹ்)).

குத்புனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்)ன் இந்நூல் உருது மொழியாக்கம் செய்து பாகிஸ்தானில் வெளியிடப்பட்டுள்ளதானது இந்நூலின் முக்கியத்துவத்தை உலகறியச் செய்துள்ளது. இப்பெரியார் அவரது மற்றைய நூலின் ஊடாக, திருக்குர்ஆனின் தீர்ப்பு எனும் நூலில் உள்ள குறைபாடுகளையும், இந்நூல் அல்-குர்ஆன், அல்-ஹதீஸிற்கு முரண்பட்டவை என்பதையும் அதில் இழையோடியுள்ள கருத்துக்கள் இந்து சமயத் தத்துவங்கள் என்பதையும் இஸ்லாமிய உண்மைத்துவப் பார்வையில் ஆராய்ந்து நிறுவியுள்ளார்கள்.

கட்டிடக் கலைஞராக;

குத்புனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) கட்டிடக் கலையிலும்  நிபுணத்துவமுடையவர்கள் என்பதை இவர்கள் அமைத்த கட்டிடங்களிலிருந்து அறிய கிடக்கின்றன. இவர்களால் நிர்மாணிக்கப்பட்ட தைக்காக்கள் இஸ்லாமிய கட்டக்கலைகளை பிரதிபலித்து நிற்கின்றன. துருக்கி, எகிப்த், ஈரானிய இஸ்லாமிய கட்டிடக் கலைகளின் பாணிகளை பண்புகளை இவர்களால் நிறுவப்பட்டுள்ள தைக்காக்களிலிருந்து உற்றறியக் கூடியதாகவுள்ளன. இம்மாமேதையின் அபார கற்பனைத்திறனை இக்கட்டங்களிலிருந்து கண்டு நயந்து கொள்ளலாம்.

 Figure 66

ஸாவியதுல் ஹல்லாஜியா, மத்ரஸதுல் ஆயிஷா (கி.பி. 2010 நவம்பர்), Figure – 65

 சமகால உலகின் உண்மையான ஆன்மீகத் தலைவரும் காதிரிய்யி, ஜிஸ்திய்யி, நக்ஷபந்திய்யி போன்ற தரீக்காக்களின் ஷெய்க்கும்  சங்கைக்குரிய மக்கத்தார் வாப்பாவின் நேரடிப் போதனைகளின்….அவை ஹக்கை தரிசிப்பதற்கான பயணம்… தற்போது எம்மத்தியில் வாழ்பவர்களிடையே காணக்கூடிய, உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கான ஒரே தீர்வாகும். நப்ஸானியத்தான, ஷைத்தானிய்யத்தான நோய்கள் அனைத்திற்கு தரீக்கா வழி தீர்வு தவிர வேறில்லை. இதன் ஈடுபாடானது இதயம் ஒளிர்வடைந்து அதன் பிரகாசத்தால் வாழ்க்கை இபாதத்தாகின்றது.(166. தகவல்: எம்.எச்.ஏ. றிபாஸ், அக்கரைப்பற்று)

ஞானிகளும் மேதைகளும்
நாதாக்களும் நமக்குவரம்
வரமோடு வரமாக – எனக்கு
வாய்த்த பெரும் ஆத்மகுருவும்
வழிவந்த கலீபாவும் அருள்வரம்…
(167. ஆதாரம் :வரம், பக்கம்- vi – கௌரவ அமைச்சர், ஏ.எல்.எம். அதாஉல்லா).

——————————————————-

அக்கரைப்பற்று ‘ஸாவியத்துல் ஹல்லாஜி மதரஸத்துல் ஆயிஷா’ எனும் தைக்கா திறப்பு விழாவிற்காக வெளியிடப்பட இருக்கும் ‘மீரா’ சிறப்பு மலருக்காக மானிடவியலாய்வாளர் Professor Dennis B MCGilvray 2007ல் வழங்கி ஆசிச் செய்தியில் குத்புனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) இந்நூற்றாண்டின் முதல்மை வாய்ந்த ஒரு கலீபாவாகத் திகழ்கின்றார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

As-Sheikh Abdul Majeed Makkathar, whom I have known as a personal friend for the past three decades. This center for Zikr and Sufi devotion will help to sustain a vibrant and diverse set of religious institutions in Akkaraipattu to meet the spiritual needs of every individual. As forward -looking Kalifa for the 21st century, Makkathar Vappa will I am sure promote the cause of religious tolerance and gender equality in all activities of the zavia.. (168. Professor Dennis B MCGilvray).

 

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *