Archives

குத்புனா அஸ்-ஸெய்யித் அஷ்-ஷெய்க் பஹ்றுல் இல்ஹாம் முஹம்மது ஜலாலுத்தீன் காதிரி, ஜிஷ்தி, றிபாஇ, நக்ஷபந்தி (றஹ்) அவர்களின் 49வது நினைவு தினவிழாவும் கதமுல் குர்ஆன் தமாமும் கந்தூரி வைபவமும்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறகாதுஹு

குத்புனா அஸ்-ஸெய்யித் அஷ்-ஷெய்க் பஹ்றுல் இல்ஹாம் முஹம்மது ஜலாலுத்தீன் காதிரி, ஜிஷ்தி, றிபாஇ, நக்ஷபந்தி (றஹ்) அவர்களின் 49வது நினைவு தினவிழாவும் கதமுல் குர்ஆன் தமாமும் கந்தூரி வைபவமும்

இன்ஷா அல்லாஹ்

காலம் : 26.11.2016 சனிக்கிழமை

ஸபர் பிறை 26 அஸர் தொழுகைக்குப் பின் பி.ப. 04.00 மணி தொடக்கம் 06 மணி வரை (பிறை FM நிகழ்வு) நடைபெறும்,

இடம் : மஹ்ழறத்துல் காதிரிய்யா ஜும்ஆ மஸ்ஜித்

நிகழ்வுகளில் தலை சிறந்த மார்க்க உலமாக்களான,

  1. மெளலவி ஏ.கே.நழீம் (ஷர்க்கி) BA காதிரி-(நூறுல் இர்ஃபான் அறபுக் கலாசாலை அதிபர்) அவர்கள்.
  2. மெளலவி ஏ.சீ.எம். நிஷாத் (ஷர்க்கி) BA காதிரி-(நூறுல் இர்ஃபான் அறபுக் கலாசாலை உப அதிபர்) அவர்கள்.
  3. மெளலவி ஏ.ஆர்.ஸபா முஹம்மத் (நஜாஹி)  காதிரி-(பாத்திமத்துஸ் ஸஹறா அறபுக் கல்லூரி அதிபர்- கல்முனை) அவர்கள்.
  4. மெளலவி எம்.ஆர். றிமாஸ் (மஹ்ழரி)-(கல்முனை மஸ்ஜிதுர் ரய்யான் பேஷ் இமாம்) அவர்கள்

ஆகியோரால் சன்மார்க்க உபந்நியாசம் நிகழ்த்தப்படும்.

குத்புனா முஹம்மத் ஜலாலுத்தீன் நாயகம் வபாத்தான மஃரிபு நேரத்தில் கத்முல் குர்ஆன் தமாம் மற்றும் நாட்டின் சுபீட்சத்துக்கான துஆ கலீபத்துல் ஹல்லாஜ் மக்கத்தார் (காதிரி, ஜிஷ்தி, றிபாஇ, நக்ஷபந்தி) அவர்களால் நிகழ்த்தப்படும்.

இடையிடையே இஸ்லாமிய பாடல்கள் நூறுல் இர்ஃபான் மாணவர்கள் மற்றும் தரீக்கா முரீதீன்களால் நிகழ்த்தப்படும்.

Kuthubuna As-Seyyidh As-Sheikh Abdul Majeed Makkatthar (Raliyallahu Anhu)

குத்புல் அக்தாப், அஷ்-ஷெய்க், அஸ்-ஸெய்யித் அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி)

 

makkattar waappa 01

 

வாரிசு வழிமுறை :

ஸபீத்திய்யிக் குடும்பத்து, அஹ்லுல் பைத் வம்சத்து யெமன் நாட்டு இலங்கையின் 5ம் தலைமுறை வாரிஸாக ஷெய்குனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி)  விளங்குகின்றார்கள். பலத்த பரம்பரை சங்கமமுடைய வம்சவியலாக பெருக்கெடுத்து வருகை தந்த ஒரு புனிதக் குடும்பத்தில் இப்பெரியார் பிறந்துள்ளார்கள். இக்குடும்பம் அப்பாஸிய்யி, ஸித்திக்கிய்யி, ஹுஸைனிய்யி நஸபுக் கலப்புடையது. இம்மஹானின் தாய் வழி. ஸித்தீக்கிய்யி, ஹுஸைனிய்யியும் தந்தை வழி அப்பாஸிய்யியுடையதுமாக இருந்துள்ளது. அக்கரைப்பற்று, தைக்கா நகரில் நீள்துயில் கொள்ளும் அல்-குத்ப் யாஸீன் மௌலானா (றலி)ன் வழியில் உமரிய்யி கலந்திருப்பதற்கு வாய்ப்புள்ளது.

பிறப்பு :

இலங்கையின் கிழக்கே அக்கரைப்பற்று எனும் பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மஹான், அல்-குத்ப் அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி), அவர்கள் பரிசுத்த அஹ்லுல் பைத் குடும்பத்தில் வந்தவர்கள். தாய் தந்தை இருவழியும் அஹ்லுல் பைத் குடும்பத்தையுடையவர்கள். இப்பெரியார் யெமன் தேசத்திலருந்து கி.பி 1750களின் பிற்பாடு இலங்கை வருகை தந்த ஷெய்க் இஸ்மாயீல் யமானியின் மகன் வழியில் வருகின்ற ஒருவராவார்கள்.

அஷ்-ஷெய்க் அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி) 2ம் உலக மகாயுத்தத்தின் அந்திமத்திலும் டொனமூர் ஆட்சி கால இறுதிப் பகுதியில் 1941 ஆகஸ்ட் 18 (ஹிஜ்ரி 1360 ரஜப் 26)ம் திகதி திங்கள் கிழமை மிஹ்ராஜுடைய தினம் ஜனனித்திருக்கின்றார்கள். அவர்களின் தாய் அஸ்-ஸெய்யித் துஹ்பா உம்மா (வலி), தந்தை கலீபத்துல் காதிரிய்யி, அஸ்-ஸெய்யித், முஹல்லம் அப்துஸ் ஸமத் ஆலிம் மக்கத்தார் (றலி)யும்ஆவார்கள். (85. ஆதாரம் : பிறப்பத்தாட்சிப் பத்திரம்).

ஷெய்குனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி), தாயின் கருவறையில் சமைந்திருக்கும் போது, தாய் இந்தியா நாகூரில் ஸமாதி கொண்டிருக்கும் குத்புல் மஜீத் ஷெய்க் ஷாஹுல் ஹமீத் மீரான் ஸாஹிப் நாயகம் (றலி) அவர்களால், தான் அருள் பெறும் காட்சியை கண்டதன் நிமிர்த்தம் அதன் நினைவாக தன் மகனுக்கும் ‘அப்துல் மஜீத்’ என்ற பெயரை சூட்டியுள்ளார்கள். (86. தகவல் : அஸ்-ஸெய்யித் துஹ்பா உம்மா (வலி) – 1998ல்).

(தொடர்ந்து வாசிக்க…)