மௌலித் தமாமும் கந்தூரி நிகழ்வுகளும்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

அட்டாளைச்சேனையில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கும் கண்ணியத்துக்குரிய அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்க் அல்குத்ப் மஸ்தான் சாகிபு (ரஹ்) அன்னவர்களின் மக்பரா சரீபில் கண்ணியத்துக்குரிய ஷெய்குனா அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்க் அல்குத்ப் கலீபத்துல் ஹல்லாஜ் அப்துல் மஜீத் பின் அப்துஸ் ஸமத் ஆலிம் மக்கத்தார் (ரஹ்) காதிரி, ஜிஷ்தி, றிபாஇ, நக்ஷபந்தி அன்னவர்களின் வழிகாட்டலில் அக்கரைப்பற்று மஹ்ழறத்துல் காதிரிய்யா பள்ளிவாசலும் நூறுல் இர்ஃபான் அரபிக் கல்லூரியும் இணைந்து ஈருலகம் போற்றும் எங்கள் உயிரிலும் மேலான பூமான் நபியின் புனிதமிகு மீலாத் பெருவிழாவையும் கந்தூரி வைபவத்தையும் ஹிஜ்ரி 1437 ரபீஉல் அவ்வல் பிறை 15 ஞாயிற்றுக்கிழமை / 2015.12.27 ஆம் திகதி நடாத்தியது.

மேற்படி மௌலித் தமாமும் கந்தூரி நிகழ்வுகளும் குறித்த தினம் காலை 10.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு ளுஹர் தொழுகையுடன் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்வுகளில் ஏராளமான முரீதீன்கள் மற்றும் முஹிப்பீன்கள் கலந்து கொண்டனர்.

01 070809100203040506

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *