அல் அமான்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு
அன்புடையீர்
குத்புனா முஹம்மது ஜலாலுத்தீன் நாயகத்தின் 47வது வருட கதமுல் குர்ஆன் தமாமும் கந்தூரி வைபவமும்
எதிர்வரும் ஹிஜ்ரி 1436 ஸபர் பிறை 26 (2014-12-20) சனிக்கிழமை நிகழவிருக்கும் குத்புனா அஷ்ஷெய்க் அல்ஹாபிழ் ஷம்சுல் உலமா பஹ்றுல் இல்ஹாம் அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்க் முஹம்மது ஜலாலுத்தீன் (றஹ்) காதிரிய்யில், ஜிஷ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி அவர்களின் கதமுல் குர்ஆன் தமாமும் கந்தூரி வைபவமும் அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் அமைந்துள்ள மஹ்ழறத்துல் காதிரிய்யா ஜும்ஆ மஸ்ஜிதில் கலீபத்துல் ஹல்லாஜ் அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்க் அல்குத்ப் அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) காதிரிய்யில், ஜிஷ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்தி அவர்களின் வழிகாட்டலில் மஹ்ழறத்துல் காதிரிய்யா ஜும்ஆ மஸ்ஜித் அங்கத்தவர்களால் நடாத்த ஏற்பாடாகி உள்ளது.
இதன் நிமித்தம் (2014-12-15) திங்கட்கிழமை பி.ப. 4.30 மணிக்கு கொடியேற்றப்பட்டு சன்மார்க்க நிகழ்வுகள் தலைசிறந்த உலமாக்களால் நிகழ்வுற இருக்கின்றன. தொடர்ந்து 04 நாட்கள் மார்க்க உபந்நியாசம் நிகழ்த்தப்பட்டு (2014-12-19) வெள்ளிக்கிழமை குத்புனா ஜலாலுத்தீன் வபாத்தான நேரமான மஃரிபு தொழுகையின் பின் கதமுல் குர்ஆன் ஓதப்பட்டு அடுத்த நாள் சனிக்கிழமை கந்தூரி வழங்கப்படும்.
இக்கந்தூரி எல்லோரும் சாப்படுவதாக மட்டும் நிகழ்வுறும்.
அனைவரும் வருகைதந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்
பிரதம அதிதியாக கௌரவ அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்களும் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் கௌரவ அஹமட் ஸகீ அதாவுல்லாஹ் அவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
குறிப்பு
குத்புனா ஜலாலுத்தீன் நாயகம் வபாத்தான நேரத்தில் நடைபெறும் கதமுல் குர்ஆன் நிகழ்வுகள் பிறை FM இல் நேரடி ஒலிபரப்புச் செய்யப்படும்
தரீக்கா நிர்வாகத்தினர்
மஹ்ழறத்துல் காதிரிய்யா ஜும்ஆ மஸ்ஜித்
ஹல்லாஜ் மகாம்
அக்கரைப்பற்று
குத்புனா முஹம்மத் ஜலாலுத்தீன் (றலி) நாயகம் அவர்களின் 47வது கந்தூரியை முன்னிட்டு நடைபெற்ற கொடியேற்றம் மற்றும் அது தொடர்பான நிகழ்வுகள் தொடர்பான புகைப்படத்தொகுப்பு
%%wppa%% %%slideonly=24%%
%%wppa%% %%slideonly=25%%