Flag Hoisting 2017

அக்கரைப்பற்றில் அமைந்துள்ள நூறுல் இர்பான் அரபுக்கலாசாலை மற்றும்  ஸாவியத்துல் ஹல்லாஜிய்யா ஆகியவற்றின் ஸ்தாபகர் அஷ்-ஷெய்க் அல்குத்ப் அஸ்ஸெய்யித் ஹல்லாஜுல் மன்ஸூர் (றஹ்) அவர்களின 13வதும்

அன்னாரின் ஆத்மீகத் தந்தை அஷ்-ஷெய்க் அல்குத்ப் அஸ்ஸெய்யித் முஹம்மத் ஜலாலுத்தீன் (றஹ்) அவர்களின் 50 வதும்

நினைவு தினங்களை முன்னிட்டு

அக்கரைப்பற்று மஹ்ழறத்துல் காதிரிய்யா ஹல்லாஜ் மகாம் ஜும்ஆப் பள்ளிவாசலில் கடந்த 2017.09.03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாயின. மேற்படி நிகழ்வில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வந்திருந்த முரீதீன்கள் முஹிப்பின்கள் கலந்து சிறப்புத்தனர்

அதனைத் தொடர்ந்து 2017.09.12  ஆம் திகதி வரை தினமும் மார்க்க உபந்நியாசங்கள் இடம் பெற்று 2017.09.13 மாலை 03 மணியளவில் கதமுல் குர்ஆன் தமாமும் 2017.09.14 கந்தூரி வைபவமும் நடைபெறவுள்ளன.

மேற்படி நிகழ்வுகள் அனைத்தும் சங்கைக்குரிய குத்புனா ஹல்லாஜுல் மன்ஸூர் (ரஹ்) அவர்களின் ஏக கலீபா அல்குத்ப், அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்க், ஷம்சுல் உலமா பஹ்றுல் இல்ஹாம் அப்துல் மஜீத் பின் அப்துஸ்ஸமத் ஆலிம் மக்கத்தார் (ரஹ்) காதிரி, ஜிஷ்தி, றிபாஇ, நக்ஷபந்தி அவர்களின் வழிகாட்டலின் கீழ்

ஹல்லாஜுல் மன்ஸூர் (ரஹ்) அவர்களின் திருப்பேரர் சங்கைக்குரிய அஸ்ஸெய்யித் முஹம்மத் மஃறூப்  தங்கள் அவர்களின் மேற்பார்வையின் கீழ்  நடைபெறுகின்றன.

       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *