அக்கரைப்பற்று அல்முனவ்வரா கனிஷ்ட வித்தியாலத்திற்காக குத்புனா மக்கத்தார் வாப்பா நாயகம் (றலி) அவர்கள் இயற்றிய பாடசாலைக் கீதம்
ஏகனே உன்னைப் போற்றினோம்-எங்கள்
ஏந்தல் வழியில் சேரவே
கல்வியில் நாம் ஓங்கிட- உந்தன்
கருணை தந்தெம்மைக் காருமே
(ஏகனே)
முத்து நிகர் கலைக்கூடமே
முனவ்வறா கனிஷ்ட கல்லூரி
கல்வி தரும் அரசாங்கமும்,
கலை ஆசான், அதிபர், பெற்றோர்களும்
காலம் முழுதும் வாழவே-இரு
கைகளை நாம் ஏந்தினோம்
(ஏகனே)
பாலர் எங்கள் மனதிலே-நற்
பண்புகள் மலர்ந்தோங்கவே
வாட்டும் துயரம் நீங்கிடும்
வளமான கல்வி சேரவே
மாட்சிமை தரும் வாழ்வினை-இளம்
மாணவர் நாம் வேண்டினோம்
(ஏகனே)
ஒற்றுமை உணர்வோடு நாம்
ஒரு தாயின் மக்கள் போலவே
சாதி, மத பேதங்கள் அற்று
சாந்தமாய் நாம் வாழவே
சீர் பெற எம் நாட்டு மக்கள்
சிறப்புற நாம் வேண்டினோம்
(ஏகனே)
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
யாரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்
-நன்றி : ஆசிரியர் : எம்.எம்.எம்.முனாஸ், திருகோணமலை-