Archives

அக்கறை மக்கத்தின் மண் வாசனை

 

மக்கத்தின் துன்பத்தை கேளுங்கள்
புல்லாங்குழலிடம்
எந்த நிமிடம் அழுகிறதோ! தெரியாது!
எங்கே செல்வேன் எவ்விடம் செல்வேன்
மக்கத்து நாதாவின் பாதத்தை அறிய!

திடீரென்று கார்மேகம் குறுக்கிட்டுப் பாய்கிறதோ
அதுதான் புல்லாங்குழலின் கண்ணீரோ
எங்கே செல்வேன் எவ்விடம் செல்வேன்
மக்கத்து நாதாவின் பாதத்தை அறிய!

பாத்துமத்து நாயகியை பார்ப்பதற்கோர்
இடமில்லை என்றேன்
மக்கத்து மகளென்னும் வலிதாயைப் பார்க்க வைத்தீரே!
எங்கே செல்வேன் எவ்விடம் செல்வேன்
மக்கத்து நாதாவின் பாதத்தை அறிய!

மக்கத்து மருமுகமகனான சமதானவரே
என்றும்
சாந்தி நிலவட்டும் சத்தியத்தின் பெயரால்!
எங்கே செல்வேன் எவ்விடம் செல்வேன்
மக்கத்து நாதாவின் பாதத்தை அறிய!

மக்கமே அன்றாடம் எம்காதில் விளவேண்டுமோ
உம் பேச்சு இல்லையேல்
அந்நிமிடம் நின்று விடுமோ எம் மூச்சு
எங்கே செல்வேன் எவ்விடம் செல்வேன்
மக்கத்து நாதாவின் பாதத்தை அறிய!

வஸ்ஸலாம்
ஆக்கம் : ஏ.கே. மக்கம் றஜான்

 

ஹல்லாஜ் மன்ஸூர் இறைக்காதல்..

(நிலவே என்னிடம் நெருங்காதே என்ற மெட்டு)

ஹல்லாஜ் மன்ஸூர் இறைக்காதல்
அகிலம் போற்றும் உயர் நேசர்
உள்ளம் உருகி பாடுகிறோம்- நாம்
உன்னை எண்ணி வாழுகிறோம்
(ஹல்லாஜ்)

அஹ்லுல் பைத்தில் இலங்கி நிற்கும்- எம்
அற்புத ஜோதி நீயன்றோ
சந்தன மேனியில் கமழும் அதை
சாந்தமாய் எம்மில் சேர்த்திடுவீர்
(ஹல்லாஜ்)

உள்ளக் கதவினை திறந்துவிடு – எம்
ஊனக் கதவை மூடிவிடு
நாயகமே நாம் உன் காவல்
நாடுகிறோம் நாம் உன் வாசல்
(ஹல்லாஜ்)

சொர்க்கத்தின் வாசலைத் திறந்துவிடு-இறைவா
சோபனம் சொல்லி வாழ்த்திடவே
கண்மணி ஹல்லாஜ் நாயகமே-எம்மை
கருணையாக ஏற்றிவிடு
(ஹல்லாஜ்)

பாடியவர்: MP அப்துல் மஜீத் (ஓய்வுபெற்ற நீதிமன்ற உத்தியோகத்தர்)