அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு
கடந்த 28,29.12.2013 அக்கரைப்பற்று மஹ்ழறத்துல் காதிரிய்யா ஜும்ஆ பள்ளிவாசலில் அல்-குத்ப், அஸ்-ஸெய்யித், அஷ்-ஷெய்க், ஷம்சுல் உலமா, பஹ்றுல் இல்ஹாம், அல்-ஹாபிழ் முஹம்மத் ஜலாலுத்தீன் நாயகம் (றலி) காதிரிய்யில், ஜிஷ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி அவர்களின் 47வதும்
அல்-குத்ப், அஸ்-ஸெய்யித், அஷ்-ஷெய்க், ஷம்சுல் உலமா, பஹ்றுல் இல்ஹாம், அல்-ஹாபிழ் ஹல்லாஜுல் மன்ஸூர் நாயகம் (றலி) காதிரிய்யில், ஜிஷ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி அவர்களின் 09வதும்,
வருட கத்தமுல் குர்-ஆன், கந்தூரி வைபவங்கள் அதி சங்கைக்குரிய குத்புஸ் ஸமான் கலீபத்துல் ஹல்லாஜ் அல்-குத்ப், அஸ்-ஸெய்யித், அஷ்-ஷெய்க், ஷம்சுல் உலமா, பஹ்றுல் இல்ஹாம் அப்துல் மஜீத் பின் அப்துஸ் ஸமது ஆலிம் மக்கத்தார் நாயகம் (றலி) காதிரிய்யில், ஜிஷ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி அவர்களின் வழிகாட்டலின் கீழ் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.
நிகழ்வுகளில் மாண்புமிகு அமைச்சர் ALM அதாஉல்லாஹ்,மேன்மை தங்கிய மேயர் A அஹமட் ஸகீ உட்பட நாட்டின் பல பாகங்களிலிருந்தும், மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் முரீதீன்கள், முஹிப்பீன்கள் கலந்து கொண்டனர்.
மேற்படி நிகழ்வுகளுடன் தொடர்பான புகைப்படங்கள் சில,