அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு
கடந்த 18.10.2013 தொடக்கம் 29.10.2013 வரை அக்கரைப்பற்று மஹ்ழறத்துல் காதிரிய்யா ஜும்ஆ பள்ளிவாசலில் அல்-குத்ப், அஸ்-ஸெய்யித், அஷ்-ஷெய்க், ஷம்சுல் உலமா, பஹ்றுல் இல்ஹாம், அல்-ஹாபிழ் ஹல்லாஜுல் மன்ஸூர் நாயகம் (றலி) காதிரிய்யில், ஜிஷ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி அவர்களின் 09வதும்,
அல்-குத்ப், அஸ்-ஸெய்யித், அஷ்-ஷெய்க், ஷம்சுல் உலமா, பஹ்றுல் இல்ஹாம், அல்-ஹாபிழ் முஹம்மத் ஜலாலுத்தீன் நாயகம்(றலி) காதிரிய்யில், ஜிஷ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி அவர்களின் 46வதும்
வருட கத்தமுல் குர்-ஆன், கந்தூரி வைபவங்கள் அதி சங்கைக்குரிய குத்புஸ் ஸமான் கலீபத்துல் ஹல்லாஜ் அல்-குத்ப், அஸ்-ஸெய்யித், அஷ்-ஷெய்க், ஷம்சுல் உலமா, பஹ்றுல் இல்ஹாம் அப்துல் மஜீத் பின் அப்துஸ் ஸமது ஆலிம் மக்கத்தார் நாயகம் (றலி) காதிரிய்யில், ஜிஷ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி அவர்களின் வழிகாட்டலின் கீழ் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.
18.10.2013 துல்ஹஜ் பிறை 12 வெள்ளிக்கிழமை காலை 10:00 மணியளவில் இஸ்லாமிய இலட்சினையான கொடி ஷெய்குனாவின் முரீதீன்களான ஜனாப் M.I.பியாஸ் ஏந்திக் கொடுக்க ஜனாப் M.A.A.வாஹித் (MSc) (ADE-Science), HEDS International Hallaj Building உரிமையாளர் அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டது.
அன்று தொடக்கம் 10 நாட்கள் குத்புனா ஹல்லாஜ் மன்ஸூர் நாயகம் (றலி) அவர்களின் அன்புப் பேரர் அஸ்-ஸெய்யித் மௌலவி P.A. முஹம்மத் மஹ்றூப் (லத்தீபி) தங்கள் அவர்களின் தலைமையில் தலைசிறந்த மார்க்க அறிஞர்களால் உபந்நியாசங்கள் நிகழ்த்தப்பட்டன.
28.10.2013 காலை 10:00 மணி தொடக்கம் கத்தமுல் குர்ஆனும் அதே தினம் மாலை 04:00 மணி தொடக்கம் கத்தமுல் குர்ஆன் தமாம் மற்றும் துஆப் பிரார்த்தனையும் நடைபெற்றன.
29.10.2013 செவ்வாய்க்கிழமை காலை 08:00 மணி முதல் மௌலீது வைபவமும் நடைபெற்றன. நாட்டின் சுபீட்சம் மற்றும் சமாதானத்திற்கான துஆ கலீபத்துல் ஹல்லாஜ் மக்கத்தார் வாப்பா நாயகம் (றலி) அவர்களால் ஓதப்பட்டு கந்தூரியும் வழங்கப்பட்டது.
கந்தூரி வைபவங்கள் ஷேகுனாவின் சாதிக்கான முரீதாகிய அல்-ஹாஜ் A.S.M சாதிக் (JP-All Island) அவர்களின் மேற்பார்வையின் கீழ் இனிதே நடைபெற்றன.
நிகழ்வுகளில் மாண்புமிகு அமைச்சர் ALM அதாஉல்லாஹ், குத்புனா மக்கத்தார் நாயகம் (றலி) அவர்களின் மருமகனும் மாண்புமிகு உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமாகிய அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யித் MH அப்துஸ் ஸமது மேன்மை தங்கிய மேயர் A அஹமட் ஸகீ, நாட்டின் பல பாகங்களிலிருந்தும், மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் முரீதீன்கள், முஹிப்பீன்கள் கலந்து கொண்டு அல்லாஹ்வின் அருளைப் பெற்றுக் கொண்டனர்.
மேற்படி நிகழ்வுகளுடன் தொடர்பான புகைப்படங்கள் சில,
%%wppa%% %%slideonly=18%%
%%wppa%% %%slideonly=19%%